விரைவில் மிக மிக மலிவு விலை ஜிம்னி காரை களமிறக்க சுசுகி திட்டம்... எங்கு தெரிஞ்சா ரொம்ப பொறாமைப்படுவீங்க!

சுசுகி நிறுவனம் ஜிம்னி காரின் புதிய குறைந்த விலை மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் மிக மிக மலிவு விலை ஜிம்னி காரை களமிறக்க சுசுகி திட்டம்... எங்கு தெரிஞ்சா ரொம்ப பொறாமைப்படுவீங்க!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான சுசுகி, ஜிம்னி மாடலில் புதிய குறைந்த விலை வேரியண்ட் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ஜிம்னி லைட்' எனும் பெயரில் அந்த வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் மிக மிக மலிவு விலை ஜிம்னி காரை களமிறக்க சுசுகி திட்டம்... எங்கு தெரிஞ்சா ரொம்ப பொறாமைப்படுவீங்க!

ஆஸ்திரேலியா நாட்டிலேயே இந்த மலிவு விலை தேர்வை அறிமுகம் செய்ய சுசுகி திட்டமிட்டுள்ளது. விலை குறைவான வேரியண்ட் என்பதால் சிறப்பம்சங்கள் மிக குறைவாகவே அதில் இடம் பெற இருக்கின்றன. ஹலோஜன் முகப்பு மின் விளக்கு, பிளாஸ்டிக்காலான ஓஆர்விஎம் கவர்கள், அலாய் வீலுக்கு பதிலாக 15 இன்சிலான ஸ்டீல் ரிம் போன்றவையே இடம்பெற இருக்கின்றன.

விரைவில் மிக மிக மலிவு விலை ஜிம்னி காரை களமிறக்க சுசுகி திட்டம்... எங்கு தெரிஞ்சா ரொம்ப பொறாமைப்படுவீங்க!

பனி விளக்கு நீக்கம், மிக மிக பேசிக் வசதிகள் கொண்ட ரேடியோ/சிடி பிளேயர், 7இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை இக்காரில் வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இவற்றைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் நிறுவனம் கேபினுக்குள் செய்யாத என எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் மிக மிக மலிவு விலை ஜிம்னி காரை களமிறக்க சுசுகி திட்டம்... எங்கு தெரிஞ்சா ரொம்ப பொறாமைப்படுவீங்க!

ஆகையால், விலை குறைப்பு நடவடிக்கைக்காக சுசுகி வெறும் சிறப்பம்சங்களைக் குறைக்கும் பணியை மட்டுமே கையிலெடுத்துள்ளது. எனவே, எஞ்ஜின் உள்ளிட்டவை வழக்கமான ஜிம்னியில் இடம் பெற்றிருப்பதைப் போலவே இடம்பெற இருக்கின்றன.

விரைவில் மிக மிக மலிவு விலை ஜிம்னி காரை களமிறக்க சுசுகி திட்டம்... எங்கு தெரிஞ்சா ரொம்ப பொறாமைப்படுவீங்க!

1.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு, இன்லைன்4 பெட்ரோல் எஞ்ஜின் விலைக்குறைந்த ஜிம்னியில் இடம்பெற இருக்கின்றது. இது 102 பிஎஸ் மற்றும் 130 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இது ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும். இந்த வசதிக்குறைந்த ஜிம்னி வரும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் விற்பனைக்கு வர இருப்பதாக சுசுகி ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

விரைவில் மிக மிக மலிவு விலை ஜிம்னி காரை களமிறக்க சுசுகி திட்டம்... எங்கு தெரிஞ்சா ரொம்ப பொறாமைப்படுவீங்க!

ஆஸ்திரேலியர்களைக் கவரும் பொருட்டு இந்த நடவடிக்கையில் நிறுவனம் களமிறங்கியுள்ளது. நிறுவனம், மிக விரைவில் இந்தியாவில் ஜிம்னியை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. ஐந்து கதவுகள், நீளமான வீல் பேஸ் ஆகிய வசதிகளுடன் ஜிம்னி நாட்டில் எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் மிக மிக மலிவு விலை ஜிம்னி காரை களமிறக்க சுசுகி திட்டம்... எங்கு தெரிஞ்சா ரொம்ப பொறாமைப்படுவீங்க!

2022ம் ஆண்டில் இந்தியாவில் ஜிம்னி விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆகையால், இக்காரின் வருகையை எதிர்நோக்கி ஜிம்னி பிரியர்கள் காத்துக்கிடக்கத் தொடங்கியிருக்கின்றனர். முன்னதாக வெளியாகிய தகவலின் அடிப்படையில், சுசுகி ஜிம்னி டர்போ-பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் லேசான ஹைபிரிட் வசதிகளுடன் விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

விரைவில் மிக மிக மலிவு விலை ஜிம்னி காரை களமிறக்க சுசுகி திட்டம்... எங்கு தெரிஞ்சா ரொம்ப பொறாமைப்படுவீங்க!

ஆனால், இதுகுறித்த எந்தவொரு அறிவிப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக நிறுவனம் வெளியிடவில்லை. அதேசமயம், அவ்வப்போது ஜிம்னி இந்திய சாலைகளில் வைத்து பரிசோதனை ஓட்டம் செய்யப்பட்டு வருகின்றது. ஆகையால், மிக விரைவில் இதன் அறிமுகம்குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Suzuki Planning To Launch More Affordable Jimny In Australia. Read In Tamil.
Story first published: Sunday, June 20, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X