"அரசு பஸ்ஸே அக்காவின் பிராதன போக்குவரத்து வாகனம்" -சொகுசு கார் வாங்கிய சந்தோஷத்தில் ரம்யாவின் தம்பி நெகிழ்ச்சி

பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் தற்போது பிஎம்டபிள்யூ ஜிடி சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கவர்மெண்ட் பஸ்தான் முன்பு அக்காவின் பிரதான போக்குவரத்து வாகனம்... பிஎம்டபிள்யூ சொகுசு காரை வாங்கிய சந்தோஷத்தில் ரம்யா பாண்டியனின் சகோதரர் நெகிழ்ச்சி!!

'ஜோக்கர்' திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்த திரைப்படத்தில் இவர் அதிகம் நேரம் தோன்றவில்லை என்றாலும் வந்துபோன சில நிமிட காட்சிகளின் வாயிலாக தமிழ் திரையுலக ரசிகர்களின் மனதில் நெருக்கமான இடத்தைப் பிடிக்கத் தொடங்கி விட்டார்.

கவர்மெண்ட் பஸ்தான் முன்பு அக்காவின் பிரதான போக்குவரத்து வாகனம்... பிஎம்டபிள்யூ சொகுசு காரை வாங்கிய சந்தோஷத்தில் ரம்யா பாண்டியனின் சகோதரர் நெகிழ்ச்சி!!

இதன் பின்னர் இவர் நடித்த 'ஆண் தேவதை' திரைப்படம் ரம்யா பாண்டியனுக்கு தமிழ் திரையுலகில் நல்ல சந்தையை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படத்தில் சற்று வித்தியாசமான பெண் கதாபாத்திரத்தை இவர் கையாண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கவர்மெண்ட் பஸ்தான் முன்பு அக்காவின் பிரதான போக்குவரத்து வாகனம்... பிஎம்டபிள்யூ சொகுசு காரை வாங்கிய சந்தோஷத்தில் ரம்யா பாண்டியனின் சகோதரர் நெகிழ்ச்சி!!

ரம்யா பாண்டியன் அதிகம் புகழ்பெற்ற நபராக மாறியது பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வாயிலாகதான். பிக்பாஸ், குக்கு வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளின் வாயிலாக இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் பலரின் மனதை இவர் கொள்ளையடித்தார். இதற்கு முன்னதாக இவர் வெளியிட்ட 'ஹாட் ஃபோட்டோ ஷூட்' இளைஞர்களை வெற லெவலில் கவரும் வகையில் அமைந்ததையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

கவர்மெண்ட் பஸ்தான் முன்பு அக்காவின் பிரதான போக்குவரத்து வாகனம்... பிஎம்டபிள்யூ சொகுசு காரை வாங்கிய சந்தோஷத்தில் ரம்யா பாண்டியனின் சகோதரர் நெகிழ்ச்சி!!

ஆகையால், இவருக்கு இளைஞர்கள் ரசிகர்கள் சற்று அதிகம். இந்த மாதிரியான சூழ்நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ ஜிடி சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலை அவரது சகோதரர் பரசு பாண்டியன் அவரது இன்ஸ்டா பக்கத்தின் வாயிலாக தெரிவித்திருக்கின்றார்.

கவர்மெண்ட் பஸ்தான் முன்பு அக்காவின் பிரதான போக்குவரத்து வாகனம்... பிஎம்டபிள்யூ சொகுசு காரை வாங்கிய சந்தோஷத்தில் ரம்யா பாண்டியனின் சகோதரர் நெகிழ்ச்சி!!

பிஎம்டபிள்யூ 5 செரீஸ் கிராண் டூரிஸ்மோ மாடலின் பழைய தலைமுறை வெர்ஷனையே ரம்யா பாண்டியன் வாங்கியிருக்கின்றார். இந்த சொகுசு கார் இந்தியாவில் ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டது. இது ஆரம்ப நிலை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

கவர்மெண்ட் பஸ்தான் முன்பு அக்காவின் பிரதான போக்குவரத்து வாகனம்... பிஎம்டபிள்யூ சொகுசு காரை வாங்கிய சந்தோஷத்தில் ரம்யா பாண்டியனின் சகோதரர் நெகிழ்ச்சி!!

ஆகையால், இதன் உயர் ரக வேரியண்டுகள் இதைவிட கூடுதல் பல லட்சங்களில் விற்கப்பட்டன. இதில், ரம்யா பாண்டியன் எந்த வேரியண்டை வாங்கியுள்ளார் என்பது பற்றிய தகவல் தெளிவாக தெரியவில்லை. ஆகையால், இக்காரின் துள்ளியமான விலை, எஞ்ஜின் மற்றும் சொகுசு வசதிகள் குறித்த தகவலை எங்களால் வெளியிட முடியவில்லை.

கவர்மெண்ட் பஸ்தான் முன்பு அக்காவின் பிரதான போக்குவரத்து வாகனம்... பிஎம்டபிள்யூ சொகுசு காரை வாங்கிய சந்தோஷத்தில் ரம்யா பாண்டியனின் சகோதரர் நெகிழ்ச்சி!!

இருப்பினும், ரம்யாவின் சகோதரர் பரசு பாண்டியன் வெளியிட்ட பதிவால் குறிப்பிட்ட சில முக்கிய தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. அதாவது, ரம்யா பாண்டியன் 2011ம் ஆண்டுகளில் பெரும்பாலும் டவுன் பஸ்களிலேயே (அரசு பேருந்து) அதிகம் பயணித்ததாகவும், அவர், தற்போது 2021ம் ஆண்டில் சொந்தமாக சொகுசு காரை வாங்கியிருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.

கவர்மெண்ட் பஸ்தான் முன்பு அக்காவின் பிரதான போக்குவரத்து வாகனம்... பிஎம்டபிள்யூ சொகுசு காரை வாங்கிய சந்தோஷத்தில் ரம்யா பாண்டியனின் சகோதரர் நெகிழ்ச்சி!!

இந்த தகவலையே ரம்யா பாண்டியனின் சகோதரர் மிகவும் பெருமையுடன் இன்ஸ்டாவில் தெரிவித்திருக்கின்றார். இதனைச் சுட்டிக் காட்டும் வகையில், நல்லவனுக்கு நல்லதே நடக்கும் என்ற ஹேஷ்டேக்கை பரசு பாண்டியன் அப்பதிவில் போட்டிருக்கின்றார். தொடர்ந்து, ரம்யாவின் இந்த வளர்ச்சி பல இளம் பெண்களுக்கு முன்னுதாரணமாக அமையும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tamil Actress Ramya Pandian Buys BMW GT Luxury Car. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X