ஆட்டோமேட்டிக் தேர்வில் உருவாகிறதா டாடா அல்ட்ராஸ்? 3-4 மாதங்களில் அறிமுகம் என தகவல்

அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் கார் தயாரிப்பு பணிகளில் டாடா மோட்டார்ஸ் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆட்டோமேட்டிக் தேர்வில் உருவாகிறதா டாடா அல்ட்ராஸ்? 3-4 மாதங்களில் அறிமுகம் என தகவல்

டாடா மோட்டார்ஸின் வெற்றிக்கரமான மாடல்களுள் ஒன்றாக விளங்கிவரும் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் சந்தையில் கடந்த 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. விற்பனையில் இந்த டாடா காருக்கு மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் கார்கள் போட்டியாக உள்ளன.

ஆட்டோமேட்டிக் தேர்வில் உருவாகிறதா டாடா அல்ட்ராஸ்? 3-4 மாதங்களில் அறிமுகம் என தகவல்

ஆல்ஃபா பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாடலான அல்ட்ராஸ் ஏற்கனவே கூறியதுபோல் டாடா மோட்டார்ஸின் சிறந்த விற்பனை மாடலாக விளங்கி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உலகளாவிய என்சிஏபி சோதனையில் இந்த டாடா தயாரிப்பு வாகனத்திற்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் தான். உலகம் முழுவதிலும் இருந்து கார்கள் சோதனை செய்யப்படும் இந்த மோதல் சோதனைகளில் அல்ட்ராஸ் முழு ஐந்து மதிப்பெண்களை பெற்றுள்ளது.

ஆட்டோமேட்டிக் தேர்வில் உருவாகிறதா டாடா அல்ட்ராஸ்? 3-4 மாதங்களில் அறிமுகம் என தகவல்

அல்ட்ராஸ் மட்டுமின்றி, நெக்ஸான், சமீபத்திய பஞ்ச் எஸ்யூவி மாடல்களும் உலகளாவிய என்சிஏபி சோதனைகளில் முழு நட்சத்திரங்களை பாதுகாப்பிற்கான மதிப்பீட்டாக பெற்றுள்ளன. இதில் இருந்து டாடா கார்கள் எத்தகைய பாதுகாப்புமிக்கவை என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். அல்ட்ராஸின் உட்புறம் ஏகப்பட்ட பாதுகாப்பு தொழிற்நுட்பங்களுடன் மிகவும் பிரீமியம் தரத்தில் வடிவமைக்கப்படுகிறது.

ஆட்டோமேட்டிக் தேர்வில் உருவாகிறதா டாடா அல்ட்ராஸ்? 3-4 மாதங்களில் அறிமுகம் என தகவல்

அப்படியே வெளிப்பக்கத்திற்கு வந்தால், பிரீமியம் தர ஹேட்ச்பேக் கார் என சொல்வதற்கு ஏற்ற அனைத்து அம்சங்களையும் அல்ட்ராஸ் கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஹூண்டாய் ஐ20-ஐ தவிர்த்து அல்ட்ராஸின் மாடர்ன் தோற்றத்திற்கு இணையாக வேறெந்த மாடலும் இல்லை. ஐ20 மாடலுக்கு ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டில் தான் மூன்றாம் தலைமுறை அப்கிரேடை வழங்கி, அந்த காரினை தொடர்ந்து புத்துணர்ச்சியான தோற்றத்தில் வைத்துள்ளது.

ஆட்டோமேட்டிக் தேர்வில் உருவாகிறதா டாடா அல்ட்ராஸ்? 3-4 மாதங்களில் அறிமுகம் என தகவல்

இருப்பினும் ஐ20 வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் ஐ20 என் காரினை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தது. இதற்கு ஏற்ப மாருதி சுஸுகி நிறுவனம் அதன் பலேனோ காருக்கு முக்கியமான அப்கிரேடினை வழங்க தயாராகி வருகிறது. இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, டாடா நிறுவனம் அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் தயாரிப்பு பணிகளில் உள்ளது.

ஆட்டோமேட்டிக் தேர்வில் உருவாகிறதா டாடா அல்ட்ராஸ்? 3-4 மாதங்களில் அறிமுகம் என தகவல்

தற்சமயம் டாடா அல்ட்ராஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.90 லட்சத்தில் இருந்து ரூ.9.65 லட்சம் வரையில் உள்ளன. பலேனோ, போலோ & ஜாஸ் கார்களில் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளினால் டீசல் என்ஜின் தேர்வு வழங்கப்படுவதில்லை. ஆனால் அல்ட்ராஸில் டாடா நிறுவனம் வழங்குகிறது. இந்த வகையில் அல்ட்ராஸின் கை ஓங்கியுள்ளது என்றாலும், இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் காரில் இன்னமும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு கொடுக்கப்படவில்லை.

ஆட்டோமேட்டிக் தேர்வில் உருவாகிறதா டாடா அல்ட்ராஸ்? 3-4 மாதங்களில் அறிமுகம் என தகவல்

அல்ட்ராஸில் அதிகப்பட்சமாக 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின், இதன் டர்போ வெர்சன் (108 பிஎச்பி & 140 என்எம்) மற்றும் அதிகப்பட்சமாக 89 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் என்கிற மூன்று விதமான என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

ஆட்டோமேட்டிக் தேர்வில் உருவாகிறதா டாடா அல்ட்ராஸ்? 3-4 மாதங்களில் அறிமுகம் என தகவல்

இவை மூன்றுடனும் தற்சமயம் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதனால் விரைவில் அல்ட்ராஸில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வை கொண்டுவரும் பணிகள் இறுதிக்கட்ட சோதனைகளில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நமக்கு தெரிந்தவரையில், அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் கார் இன்னும் 3- 4 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படலாம்.

ஆட்டோமேட்டிக் தேர்வில் உருவாகிறதா டாடா அல்ட்ராஸ்? 3-4 மாதங்களில் அறிமுகம் என தகவல்

ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு முதற்கட்டமாக அல்ட்ராஸின் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கொடுக்கப்படும் என தெரிகிறது. அல்ட்ராஸின் சோதனை மாதிரிகள் கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருவதை பார்த்திருப்பீர்கள். இந்த சோதனைகளுக்கு புதிய ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனின் வருகைதான் காரணமாக இருக்க வேண்டும்.

ஆட்டோமேட்டிக் தேர்வில் உருவாகிறதா டாடா அல்ட்ராஸ்? 3-4 மாதங்களில் அறிமுகம் என தகவல்

இல்லையென்றால், அவை சிஎன்ஜி என்ஜின் அமைப்பிற்கான சோதனை ஓட்டங்களாக கூட இருக்கலாம். ஏனெனில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸில் சிஎன்ஜி வேரியண்ட்களையும் புதியதாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் இவற்றின் அறிமுகத்தை அல்ட்ராஸ் ஆட்டோமேட்டிக் காரின் அறிமுகத்திற்கு பிறகே எதிர்பார்க்க முடியும் என கூறப்படுகிறது.

Most Read Articles

English summary
Tata Altroz AT will reportedly go on sale within the next 3- 4 months.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X