டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாடா அல்ட்ராஸ் காரின் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மிகச் சரியான விலையில் வந்திருப்பதால், இந்த மாடல் மீது வாடிக்கையாளர்களின் கவனம் விழுந்துள்ளது. இந்த நிலையில், இந்த காரில் வழங்கப்படும் வேரியண்ட்டுகள், அதில் இடம்பெறும் வசதிகள் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் ஐ-டர்போ மாடல் XT, XZ மற்றும் XT Plus என மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. போட்டியாளர்களுக்கு கடும் சவாலை வழங்கும் விதத்தில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றிருக்கிறது. எந்தெந்த வேரியண்ட்டில் என்னென்ன வசதிகள் கொடுக்கப்படுகின்றன என்ற விபரத்தை தொடர்ந்து பார்க்கலாம்.

எக்ஸ்டி வேரியண்ட்
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் விலை குறைவான தேர்வாக எக்ஸ்டி வேரியண்ட் வந்துள்ளது. இந்த வேரியண்ட்டிற்கு ரூ.7.73 லட்சம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 14 அங்குல சக்கரங்கள், ரியர் பார்க்கிங் கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

சிட்டி மற்றும் ஸ்போர்ட் டிரைவிங் மோடுகள், மியூசிக் சிஸ்டத்திற்கு கூடுதலாக இரண்டு ட்வீட்டர்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட் - ஸ்டாப், ஐட்லிங் ஸ்டார்ட் - ஸ்டாப், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், எல்இடி பகல்நேர விளக்குகள், பெரிமெட்ரிக் அலாரம், 15 லிட்டர் கூல்டு க்ளவ் பாக்ஸ், ஃபாஸ்ட் யுஎஸ்பி சார்ஜர், முன்புற பனி விளக்குகள், ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள், முழுமையான ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ எக்ஸ்இசட் வேரியண்ட்
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ காரின் எக்ஸ்டி வேரியண்ட்டில் இருக்கும் வசதிகளுடன் கூடுதலாக இரண்டு ட்வீட்டர்கள், கருப்பு பெயிண்ட் பூசப்பட்ட கூரை அமைப்பு, 16 அங்குல அலாய் வீல்கள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஓட்டுனர் இருக்கைக்கு அட்ஜெஸ்ட் வசதி, ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ரியர் டீஃபாகர், 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், சிட்டி மற்றும் ஸ்போர்ட் டிரைவிங் மோடுகள் உள்ளன. இந்த வேரியண்ட்டிற்கு ரூ.8.46 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ எக்ஸ்இசட் ப்ளஸ்
லெதரேட் எனப்படும் செயற்கை லெதர் இருக்கைகள், வாடிக்கையாளர் விருப்பத்தின்பேரில் வால்பேப்பர், ஐரா கனெக்டெட் கார் தொழில்நுட்பம், எக்ஸ்பிரஸ் கூல் வசதி, கை கடிகாரம் போல கட்டிக் கொள்வதற்கான சாவி பட்டை, பின்புற பனி விளக்குகள், கருப்பு வண்ண கூரை அமைப்பு ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. இந்த வேரியண்ட்டிற்கு ரூ.8.86 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
புதிய டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. இந்த மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








