பாதுகாப்பான பவர்ஃபுல் பிரீமியம் ஹேட்ச்பேக்! டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம்! விலை எவ்ளோ தெரியுமா?

டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாதுகாப்பான பவர்ஃபுல் பிரீமியம் ஹேட்ச்பேக்! டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம்! விலை எவ்ளோ தெரியுமா?

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வந்து விட்டது. எனவே இந்த புதிய மாடலின் விலையை தவிர்த்து, எஞ்சிய அனைத்து விபரங்களும் ஏற்கனவே நமக்கு கிடைத்து விட்டன.

பாதுகாப்பான பவர்ஃபுல் பிரீமியம் ஹேட்ச்பேக்! டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம்! விலை எவ்ளோ தெரியுமா?

டிசைனை பொறுத்தவரை, கிட்டத்தட்ட ஸ்டாண்டர்டு அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் போலவேதான் புதிய ஐ-டர்போ மாடலும் உள்ளது. டாடா நிறுவனம் டிசைனில் பெரிய அளவிலான மாற்றங்களை செய்யவில்லை. எனினும் ஸ்டாண்டர்டு மாடலில் இருந்து வேறுபடுத்தி பார்க்கும் வகையில், பூட் லிட் பகுதியில் வலது பக்கத்தில் கீழாக ஐ-டர்போ பேட்ஜ் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான பவர்ஃபுல் பிரீமியம் ஹேட்ச்பேக்! டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம்! விலை எவ்ளோ தெரியுமா?

மேலும் அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலில் ஹார்பர் ப்ளூ என்ற வண்ண தேர்வும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 2 மாற்றங்களையும் தவிர, அல்ட்ராஸ் ஐ-டர்போ கிட்டத்தட்ட ஸ்டாண்டர்டு மாடலை போன்றுதான் உள்ளது. அதே சமயம் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலில், ஹாலோஜன் பல்புகளுடன் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், 16 இன்ச் ட்யூயல்-டோன் அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பான பவர்ஃபுல் பிரீமியம் ஹேட்ச்பேக்! டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம்! விலை எவ்ளோ தெரியுமா?

வெளிப்புறத்தில் ஹார்பர் ப்ளூ வண்ண தேர்வை போல், உட்புறத்தில் கருப்பு-சாம்பல் வண்ண ட்யூயல்-டோன் இன்டீரியர் தீம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் சாஃப்ட் டச் மெட்டீரியல்கள், இருக்கைகளில் புதிய லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி, ஆம்பியண்ட் லைட்டிங் என கேபின் முன்பை விட தற்போது பிரீமியமாக உள்ளது.

பாதுகாப்பான பவர்ஃபுல் பிரீமியம் ஹேட்ச்பேக்! டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம்! விலை எவ்ளோ தெரியுமா?

அத்துடன் எக்ஸ்பிரஸ் கூல் என்ற வசதியும் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. பெயரிலேயே இதன் அர்த்தம் உள்ளது. ஆம், முன்பை காட்டிலும் கேபினை 70 சதவீதம் வேகமாக குளிர்ச்சியடைய செய்வதற்கு இந்த புதிய வசதி உதவி செய்யும். மேலும் லாக்/அன்லாக் செய்ய உதவும் அணிந்து கொள்ளக்கூடிய சாவி, கூடுதலாக 2 ட்வீட்டர்கள் என டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ அசத்துகிறது.

பாதுகாப்பான பவர்ஃபுல் பிரீமியம் ஹேட்ச்பேக்! டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம்! விலை எவ்ளோ தெரியுமா?

இதுதவிர ஐரா கனெக்டட் கார் டெக்னாலஜி, செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ரியர் ஏசி வெண்ட்கள் உள்ளிட்ட வசதிகளையும் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ பெற்றுள்ளது. இதில், ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பத்தை முக்கியமானதாக குறிப்பிடலாம். அத்துடன் வாய்ஸ் கமாண்ட் வசதியுடன், 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தை டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ பெற்றுள்ளது.

பாதுகாப்பான பவர்ஃபுல் பிரீமியம் ஹேட்ச்பேக்! டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம்! விலை எவ்ளோ தெரியுமா?

ஆங்கிலம், ஹிந்தி மற்றும் ஹிங்லீஸில் 70க்கும் மேற்பட்ட கட்டளைகளை புரிந்து கொள்ளும் திறன் இதற்கு உண்டு. அதே சமயம் டர்போ-பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டிருப்பதை அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் மிகப்பெரிய அப்டேட்டாக குறிப்பிடலாம். டாடா நெக்ஸான் காரில் உள்ள 1.2 லிட்டர், மூன்று-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் தற்போது அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலில் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான பவர்ஃபுல் பிரீமியம் ஹேட்ச்பேக்! டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம்! விலை எவ்ளோ தெரியுமா?

அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலில் இந்த இன்ஜின் 108 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலை நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் டிரைவ் செய்துள்ளோம். அப்போது இந்த கார் எங்களை வெகுவாக கவர்ந்தது.

பாதுகாப்பான பவர்ஃபுல் பிரீமியம் ஹேட்ச்பேக்! டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம்! விலை எவ்ளோ தெரியுமா?

புதிய ஹூண்டாய் ஐ20 டர்போ மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி டிஎஸ்ஐ மாடல்களுக்கு, டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனையில் கடுமையான சவாலை வழங்கும். டாடா அல்ட்ராஸ் ஏற்கனவே குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்றுள்ளது. எனவே இதன் ஐ-டர்போ மாடல் சக்தி வாய்ந்த, அதே சமயம் பாதுகாப்பான பிரீமியம் ஹேட்ச்பேக் காராக இருக்கும்.

பாதுகாப்பான பவர்ஃபுல் பிரீமியம் ஹேட்ச்பேக்! டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம்! விலை எவ்ளோ தெரியுமா?

டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலை பொறுத்தவரையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தது அதன் விலையைதான். அதனை டாடா மோட்டார்ஸ் தற்போது அறிவித்துள்ளது. இதன்படி டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடல் 7.73 லட்ச ரூபாய் முதல் 8.85 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கும். இவை டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

பாதுகாப்பான பவர்ஃபுல் பிரீமியம் ஹேட்ச்பேக்! டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம்! விலை எவ்ளோ தெரியுமா?

XT, XZ, மற்றும் XZ+ என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடல் கிடைக்கும். தற்போது அறிவிக்கப்பட்டிருப்பது அறிமுக சலுகை விலையாகும். ரெகுலர் பெட்ரோல் வேரியண்ட்கள் உடன் ஒப்பிடும்போது, ஐ-டர்போ வேரியண்ட்கள் 60,000 ரூபாய் அதிகமான விலையில் விற்பனைக்கு வந்துள்ளன.

பாதுகாப்பான பவர்ஃபுல் பிரீமியம் ஹேட்ச்பேக்! டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம்! விலை எவ்ளோ தெரியுமா?

குடியரசு தினத்தையொட்டி, சக்தி வாய்ந்த டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பது சிறப்பான ஒரு விஷயம். இந்த குடியரசு தின கொண்டாட்ட தருணத்தில், புதிய கார் வாங்க முடிவு செய்துள்ளோருக்கு, டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடல் நிச்சயம் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles

English summary
Tata Altroz iTurbo Launched In India - Design, Engine, Features, Price And More Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X