விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் விற்பனையில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக்கின் ஐ-டர்போ வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த புதிய மாடலில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

இந்திய சந்தையில், மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20, ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களுடன் டாடா அல்ட்ராஸ் போட்டியிட்டு வருகிறது. பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மாதந்தோறும் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் டாடா அல்ட்ராஸ் மூன்றாவது இடத்தை பிடித்து வருகிறது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு வந்து 1 வருடம் கடந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் தற்போது கடந்துள்ளது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த 50 ஆயிரம் யூனிட்களில், ரெகுலர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மாடலின் பங்களிப்பு மட்டும் 90 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் இந்த வெற்றிக்கு, இந்திய சந்தைக்கு ஏற்ற சவாலான விலை நிர்ணயம் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

இதுதவிர கவர்ச்சிகரமான டிசைனையும் டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் பெற்றுள்ளது. அத்துடன் பல்வேறு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் தவிர பாதுகாப்பு என்ற அம்சமும் டாடா அல்ட்ராஸ் காரின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. ஆம், பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டிலேயே மிகவும் பாதுகாப்பான கார் டாடா அல்ட்ராஸ்தான்.

விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று, டாடா நிறுவனத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே அல்ட்ராஸ் பெருமை தேடி தந்துள்ளது. டாடாவின் விளம்பரங்களில் கூட, அல்ட்ராஸின் பாதுகாப்பு அம்சங்கள்தான் அதிகமாக முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கார்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மேலோங்கி வரும் நிலையில், டாடா அல்ட்ராஸின் வெற்றிக்கு அது ஒரு காரணமாக அமைந்து விட்டது. தற்போது டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய ஐ-டர்போ மாடல் களமிறக்கப்பட்டிருப்பதால், டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் விற்பனை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா கார்... காரணம் தெரிஞ்சா நீங்களும் இந்த காரை வாங்க ஆசைப்படுவீங்க!

டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரில், 86 ஹெச்பி பவரை வெளிப்படுத்த கூடிய 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 90 ஹெச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டீசல் மற்றும் 110 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என மொத்தம் மூன்று இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
Tata Altroz Premium Hatchback Achieves 50,000 Sales Milestone - Here Are All The Details. Read in Tamil
Story first published: Wednesday, January 27, 2021, 17:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X