3 மாதங்களில் ரூ.20,000 அதிகரிக்கப்பட்டுள்ள டாடா அல்ட்ராஸின் விலை!! தற்போதைய ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

கடந்த சில வருடங்களாக எஸ்யூவி கார்கள் அதிகமாக தொடர்ந்து விற்பனையாகி கொண்டிருப்பதை நீங்களே பார்த்து வருகிறீர்கள். ஏனெனில் இது எஸ்யூவி வாகனங்களுக்கான காலம் ஆகும்.

3 மாதங்களில் ரூ.20,000 அதிகரிக்கப்பட்டுள்ள டாடா அல்ட்ராஸின் விலை!! தற்போதைய ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

இருப்பினும் ஒரு பக்கம் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்களும் கணிசமான வாடிக்கையாளர்களை பெற்று வருகின்றன. பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக்கில் சிறந்தது எது என்பதை நிரூபிக்க இந்த பிரிவில் உள்ள ஒவ்வொரு கார்களுக்கும் இடையே பலத்த போட்டி நீடித்து வருகிறது.

3 மாதங்களில் ரூ.20,000 அதிகரிக்கப்பட்டுள்ள டாடா அல்ட்ராஸின் விலை!! தற்போதைய ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

இதனால் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் தொடர்ந்து அப்டேட்களை வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தயாரிப்பு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இந்த வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பிரீமியம் ஹேட்ச்பேக் காரான அல்ட்ராஸில் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் தேர்வை சமீபத்தில் கொண்டுவந்திருந்தது.

3 மாதங்களில் ரூ.20,000 அதிகரிக்கப்பட்டுள்ள டாடா அல்ட்ராஸின் விலை!! தற்போதைய ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

இந்த டர்போ என்ஜின் அல்ட்ராஸில் பயண அனுபவத்தை மேலும் த்ரில்லிங்காக மாற்றக்கூடியதாக விளங்குகிறது. அத்துடன் பெட்ரோல் & டீசல்-ஐ சேர்த்து அல்ட்ராஸின் என்ஜின் தேர்வுகளின் மொத்த எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

3 மாதங்களில் ரூ.20,000 அதிகரிக்கப்பட்டுள்ள டாடா அல்ட்ராஸின் விலை!! தற்போதைய ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

அதேபோல் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மட்டுமின்றி டார்க் எடிசனையும் அல்ட்ராஸில் டாடா நிறுவனம் கடந்த ஜூலையில் கொண்டுவந்திருந்தது. இவ்வாறான அப்டேட்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க, மறுபக்கம் அல்ட்ராஸின் விலைகளும் அவ்வப்போது அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

3 மாதங்களில் ரூ.20,000 அதிகரிக்கப்பட்டுள்ள டாடா அல்ட்ராஸின் விலை!! தற்போதைய ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

கடந்த 2021 மே மாதத்தில் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.80 லட்சமாக இருந்தது. ஆனால் தற்போது அல்ட்ராஸின் குறைந்தப்பட்ச விலையாகவே ரூ.6 லட்சம் உள்ளது. அதாவது இந்த 3 மாதங்களில் அல்ட்ராஸின் ஆரம்ப விலை ரூ.20,000 உயர்த்தப்பட்டுள்ளது.

3 மாதங்களில் ரூ.20,000 அதிகரிக்கப்பட்டுள்ள டாடா அல்ட்ராஸின் விலை!! தற்போதைய ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கும் அல்ட்ராஸின் எண்ட்ரீ-லெவல் எக்ஸ்இ வேரியண்ட்டின் விலை தான் ரூ.6 லட்சமாகும் (எக்ஸ்-ஷோரூம்). இதே பெட்ரோல் என்ஜின் உடன் வழங்கப்படும் எக்ஸ்.எம் வேரியண்ட்டின் விலை இதனை காட்டிலும் ரூ.50 ஆயிரம் அதிகமாக ரூ.6.5 லட்சமாக தற்சமயம் உள்ளது.

3 மாதங்களில் ரூ.20,000 அதிகரிக்கப்பட்டுள்ள டாடா அல்ட்ராஸின் விலை!! தற்போதைய ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

அல்ட்ராஸின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையை தான் ரூ.20 ஆயிரம் அளவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளதே தவிர்த்து அடுத்தக்கட்ட வேரியண்ட்டான எக்ஸ்.எம்-இன் விலை பெரிய அளவில் எந்த அதிகரிப்பும் இல்லை. எக்ஸ்.எம் மட்டுமின்றி, எக்ஸ்இ வேரியண்ட்டை தவிர்த்து பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கும் மற்ற வேரியண்ட்களின் விலைகளும் பெரியதாக உயர்த்தப்படவில்லை.

3 மாதங்களில் ரூ.20,000 அதிகரிக்கப்பட்டுள்ள டாடா அல்ட்ராஸின் விலை!! தற்போதைய ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

அதிகப்பட்சமாகவே, ரூ.7.29 லட்சத்தில் கோடைக்கால சமயத்தில் விற்பனையாகி கொண்டிருந்த அல்ட்ராஸ் எக்ஸ்டி வேரியண்ட்டின் விலை ரூ.9,500 உயர்த்தப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த பெட்ரோல் மிட்-வேரியண்ட்டின் விலை தற்சமயம் ரூ.7,38,400 ஆக உள்ளது.

3 மாதங்களில் ரூ.20,000 அதிகரிக்கப்பட்டுள்ள டாடா அல்ட்ராஸின் விலை!! தற்போதைய ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

சமீபத்தில் அறிமுகப்படுத்த டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அல்ட்ராஸில் எக்ஸ்.இசட்+ டார்க் எடிசன் உள்ப்ட மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. எக்ஸ்.இ, எக்ஸ்.எம் போன்ற எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்கள் எதிலிலும் இல்லாமல் நேரடியாக மத்திய எக்ஸ்டி வேரியண்ட்டில் இருந்து தான் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வு கிடைக்கிறது.

3 மாதங்களில் ரூ.20,000 அதிகரிக்கப்பட்டுள்ள டாடா அல்ட்ராஸின் விலை!! தற்போதைய ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

அல்ட்ராஸ் எக்ஸ்டி டர்போ வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை கடந்த மூன்று மாதங்களில் ரூ.7.94 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சத்தை கடந்து ரூ.8,02,400 ஆக கொண்டுவரப்பட்டுள்ளது. அல்ட்ராஸில் வழங்கப்படும் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 5,500 ஆர்பிஎம்-இல் 110 பிஎஸ் மற்றும் 1,500- 5000 ஆர்பிஎம்-இல் 140 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

3 மாதங்களில் ரூ.20,000 அதிகரிக்கப்பட்டுள்ள டாடா அல்ட்ராஸின் விலை!! தற்போதைய ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

இது நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் ஆற்றல் வெளியீட்டில் 24%மும், டார்க் திறன் வெளியீட்டில் 28%மும் அதிகமாகும். இந்த டர்போ என்ஜின் உடன் தற்போதைக்கு 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் 7-ஸ்பீடு டிசிடி தேர்வும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 மாதங்களில் ரூ.20,000 அதிகரிக்கப்பட்டுள்ள டாடா அல்ட்ராஸின் விலை!! தற்போதைய ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

விலை அதிகரிப்புகளுக்கு இடையில் ஒரே ஒரு விலை குறைப்பாக டீசல் என்ஜின் உடனான அல்ட்ராஸின் ஆரம்ப விலை (எக்ஸ்.இ வேரியண்ட்) ரூ.7,27,500இல் இருந்து கடந்த மூன்று மாதங்களில் ரூ.7,04,500 ஆக குறைந்துள்ளது. டார்க் எடிசனை தொடர்ந்து அல்ட்ராஸில் புதிய டீசல் வேரியண்ட்டாக ரூ.7,94,900இல் எக்ஸ்.எம்+ வேரியண்ட்டும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Tata Altroz Premium Hatchback Prices Auguest 2021, Entry-level XE Petrol Up By Rs.20k.
Story first published: Friday, August 13, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X