இவ்ளோ தரமான காரா இருந்தா எப்படி உற்பத்தி குறையும்... வளரதான் செய்யும்... வரலாற்று சாதனை படைத்த அல்ட்ராஸ்!

டாடா நிறுவனத்தின் மிகவும் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்றான Tata Altroz உற்பத்தியில் புதிய மைல்கல்லை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தற்போது வெளியாகி இருக்கும் சுவாரஷ்ய தகவல்களைக் கீழே காணலாம், வாங்க.

இவ்ளோ தரமான காரா இருந்தா எப்படி உற்பத்தி குறையும்... வளரதான் செய்யும்... நம்ப முடியா சாதனை படைத்திருக்கும் அல்ட்ராஸ்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் விற்பனைச் செய்து வரும் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் அல்ட்ராஸ் (Altroz) மாடலும் ஒன்று. இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் ரக கார் மாடலாகும். தரத்தில் மட்டுமில்லைங்க இந்த கார் பாதுகாப்பு ரேட்டிங்கிலும் நல்ல மதிப்பை பெற்ற வாகனமாக இருக்கின்றது. ஆம், இது ஓர் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் மதிப்பு பெற்ற வாகனம் ஆகும். ஆகையால், இதில் பயணிப்பது மிகவும் பாதுகாப்பானது.

இவ்ளோ தரமான காரா இருந்தா எப்படி உற்பத்தி குறையும்... வளரதான் செய்யும்... நம்ப முடியா சாதனை படைத்திருக்கும் அல்ட்ராஸ்!

இதுபோன்ற பல்வேறு சிறப்பு வசதிகளை இக்கார் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் மக்கள் மத்தியில் இக்காருக்கு தனித்துவமான வரவேற்பு நிலவி வருகின்றது. இதன் விளைவாக தற்போது உற்பத்தியில் புதிய சாதனையை அல்ட்ராஸ் படைத்துள்ளது. ஒரு லட்சம் யூனிட் உற்பத்தி என்ற வரலாற்று சாதனையை அது படைத்திருக்கின்றது.

இவ்ளோ தரமான காரா இருந்தா எப்படி உற்பத்தி குறையும்... வளரதான் செய்யும்... நம்ப முடியா சாதனை படைத்திருக்கும் அல்ட்ராஸ்!

டாடா நிறுவனம் அல்ட்ராஸ் காரை விற்பனைக்கு களமிறக்கி 20 மாதங்கள் மட்டுமே ஆகின்றன. இந்த மிக குறுகிய காலக்கட்டத்தில் அல்ட்ராஸ் ஒரு லட்சம் உற்பத்தி அலகை எட்டியிருப்பது இந்திய வாகன சந்தையில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக, கோவிட்-19 வைரசால் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் நல்ல விற்பனை வளர்ச்சியை அல்ட்ராஸ் பெற்றிருக்கின்றது. இது மேலும் அநேகர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இவ்ளோ தரமான காரா இருந்தா எப்படி உற்பத்தி குறையும்... வளரதான் செய்யும்... நம்ப முடியா சாதனை படைத்திருக்கும் அல்ட்ராஸ்!

டாடா அல்ட்ராஸ் கார் 2020 ஜனவரி மாதத்திற்கு பின்னரே இந்தியாவில் விற்பனைக்குக் களமிறங்கியது. இதுவே, நிறுவனத்தின் ஆல்ஃபா (Agile Light Flexible Advanced) பிளாட்பாரத்தில் உருவாக்கப்பட்ட முதல் கார் மாடலாகும். மிகவும் கவர்ச்சியான ஸ்டைல் மற்றும் அம்சங்களுடன் இக்கார் விற்பனைக்குக் கிடைக்க இந்த பிளாட்பாரமே ஓர் மிக முக்கியமான காரணம் ஆகும்.

இவ்ளோ தரமான காரா இருந்தா எப்படி உற்பத்தி குறையும்... வளரதான் செய்யும்... நம்ப முடியா சாதனை படைத்திருக்கும் அல்ட்ராஸ்!

ஹேட்ச்பேக் ரக கார் மாடல்களில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக அல்ட்ராஸ் இருப்பதாக டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தகுந்தது. தற்போது கிடைத்து வருவதைப் போலவே வரும் நிதியாண்டிலும் நல்ல வரவேற்பையே இக்கார் பெறும் என நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் டாடா அல்ட்ராஸ் மிக அமோகமான விற்பனையைப் பெற்றிருக்கின்றது.

இவ்ளோ தரமான காரா இருந்தா எப்படி உற்பத்தி குறையும்... வளரதான் செய்யும்... நம்ப முடியா சாதனை படைத்திருக்கும் அல்ட்ராஸ்!

தொடர்ச்சியாக இக்கார் மீது மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. டாடா அல்ட்ராஸ் ஒட்டுமொத்தமாக ஆறு விதமான வேரியண்ட் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப நிலே வேரியண்டின் விலை ரூ. 5.89 லட்சமாக இருக்கின்றது. உயர்நிலை வேரியண்டின் விலை ரூ. 9.60 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்ளோ தரமான காரா இருந்தா எப்படி உற்பத்தி குறையும்... வளரதான் செய்யும்... நம்ப முடியா சாதனை படைத்திருக்கும் அல்ட்ராஸ்!

டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் கார் 1.2 லிட்டர் ரெவோட்ரோன் பெட்ரோல் எஞ்ஜின், 1.2 லிட்டர் ஐ-டர்போ பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆகிய மோட்டார் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இத்துடன், பிரீமியம் தர அம்சங்களான ஐஆர்ஏ (iRA) கார் இணைப்பு தொழில்நுட்பம், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் இருக்கை, 7 இன்சிலான டிஎஃப்டி டிஜிட்டல் க்ளஸ்டர், 16 இன்சிலான டைமண்ட் கட் அலாய் வீல்கள், க்ரூஸ் கன்ட்ரோல், பின் பகுதியில் ஏசி துவாரம் என இன்னும் பல ஏராளமான அம்சங்களும் இந்த ஹேட்ச்பேக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இவ்ளோ தரமான காரா இருந்தா எப்படி உற்பத்தி குறையும்... வளரதான் செய்யும்... நம்ப முடியா சாதனை படைத்திருக்கும் அல்ட்ராஸ்!

இதுமாதிரியான பிரீமியம் தர அம்சம் மற்றும் அதிக பாதுகாப்பு திறனை அல்ட்ராஸ் பெற்றிருப்பதனாலேயே மக்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெற்று வருகின்றது. டாடா அல்ட்ராஸ் காரில் பாதுகாப்பு பயணத்தை வழங்கும் வகையில் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், முன்பக்க பயணிகளுக்கான சீட்பெல்ட் மற்றும் ரிமைண்டர், அதிவேக எச்சரிப்பு, சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இவ்ளோ தரமான காரா இருந்தா எப்படி உற்பத்தி குறையும்... வளரதான் செய்யும்... நம்ப முடியா சாதனை படைத்திருக்கும் அல்ட்ராஸ்!

டாடா நிறுவனம் அல்ட்ராஸ் காரை எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது. ஏற்கனவே, நெக்ஸான் மற்றும் டிகோர் ஆகிய மாடல்களை எலெக்ட்ரிக் கார் வெர்ஷனில் நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதன் வரிசையில் மிக விரைவில் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரையும் நிறுவனம் அட்டகாசமான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் இக்கார் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இவ்ளோ தரமான காரா இருந்தா எப்படி உற்பத்தி குறையும்... வளரதான் செய்யும்... நம்ப முடியா சாதனை படைத்திருக்கும் அல்ட்ராஸ்!

மேலும், விரைவில் அறிமுகமாக இருக்கும் அல்ட்ராஸ் இவி ஒற்றை முழுமையான சார்ஜில் 500 கிமீ தூரம் வரை பயணிக்கக் கூடிய ரேஞ்ஜ் திறனை வழங்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் டாடா மோட்டார்ஸ் சார்பாக வெளியிடப்பவில்லை. அதேவேலையில் நாம் எதிர்பார்ப்பதை பல மடங்கு சிறப்பு வசதிகளுடன் அல்ட்ராஸ் மிக விரைவில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

Most Read Articles

English summary
Tata altroz reaches 100000 units production milestone in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X