டாடாவின் புதிய காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு... எவ்ளோ முன்தொகை தெரியுமா? ரொம்ப ரொம்பி கம்மிங்க!!

டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் தேர்விற்கான புக்கிங் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டாடாவின் புதிய காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு... எவ்ளோ முன்தொகை தெரியுமா? ரொம்ப ரொம்பி கம்மிங்க!!

டாடா நிறுவனம் விரைவில் அல்ட்ராஸ் மாடலில் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் வேரியண்டை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இக்காரின் அறிமுகம் இம்மாதம் 13ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் டாடா கார் விற்பனையாளர்கள் சிலர் இக்காருக்கான புக்கிங்கைத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

டாடாவின் புதிய காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு... எவ்ளோ முன்தொகை தெரியுமா? ரொம்ப ரொம்பி கம்மிங்க!!

இதற்காக முன் தொகையாக ரூ. 5 ஆயிரத்தை டீலர்கள் வசூலித்து வருவதாக கூறப்படுகின்றது. ஆனால், டாடா நிறுவனம் இதுகுறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு மற்றும் ஆவலைத் தொடர்ந்து டீலர்களாகவே முன் கூட்டி காருக்கான புக்கிங்கை செய்து வருகின்றனர்.

டாடாவின் புதிய காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு... எவ்ளோ முன்தொகை தெரியுமா? ரொம்ப ரொம்பி கம்மிங்க!!

அதேசமயம், புதிய அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் தேர்வின் விலையும் இன்னும் அறிவிக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. இதுகுறித்த தகவல் 13 அன்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கார் விற்பனைக்கு வந்த பின்னர் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் ஐ10 டர்போ, மாருதி பலினோ, ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக அமையும்.

டாடாவின் புதிய காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு... எவ்ளோ முன்தொகை தெரியுமா? ரொம்ப ரொம்பி கம்மிங்க!!

அல்ட்ராஸ் டர்போ தேர்வில் 1.2 லிட்டர் டர்போசார்ஜட் எஞ்ஜினே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எஞ்ஜினை டாடா நிறுவனம் அதன் மற்றுமொரு புகழ்பெற்ற மாடலான நெக்ஸான் சப்காம்பேக்ட் எஸ்யூவி காரில் பயன்படுத்தி வருகின்றது. இந்த கார் அதிகபட்சமாக 120 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

டாடாவின் புதிய காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு... எவ்ளோ முன்தொகை தெரியுமா? ரொம்ப ரொம்பி கம்மிங்க!!

ஆனால், அல்ட்ராஸ் டர்போ தேர்வில் இடம்பெறும் 1.2 லிட்டர் டர்போசார்ஜட் எஞ்ஜின் 110 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனிலேயே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புதிய எஞ்ஜினுடன் சேர்த்து டாடா நிறுவனம் புதிய மரினா நீல நிறத்தையும் இக்காரில் வழங்க இருக்கின்றது.

டாடாவின் புதிய காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு... எவ்ளோ முன்தொகை தெரியுமா? ரொம்ப ரொம்பி கம்மிங்க!!

இதுபோன்ற பிரீமியம் வசதிகள் காரணமாக புதிய அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் தேர்வு உயர்நிலை வேரியண்டாகவே விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எக்ஸ்எம் முதல் எக்ஸ்இசட் (0) ஆகிய தேர்வுகளில் இது எதிர்பார்க்கப்படுகின்றது.

டாடாவின் புதிய காருக்கான புக்கிங் தொடங்கியாச்சு... எவ்ளோ முன்தொகை தெரியுமா? ரொம்ப ரொம்பி கம்மிங்க!!

அல்ட்ராஸ் ஓர் அதிக பாதுகாப்பு திறன் கொண்டா காராகும். குளோபல் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்ட் பரிசோதனையில் இக்கார் ஐந்திற்கு ஐந்து நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றது. இதனையடுத்தே இந்தியாவின் பாதுகாப்பான கார்களின் பட்டியலில் இது இணைந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, January 1, 2021, 16:00 [IST]
English summary
Tata Altroz Turbo Petrol Bookings Open. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+