Just In
- 1 hr ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அல்ட்ராஸில் அதிரடியாக மாற்றங்களை கொண்டுவரும் டாடா!! ஹூண்டாய் ஐ20-ஐ சமாளிக்க இதுபோதும்!
விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ காரில் வழங்கப்படவுள்ள வேரியண்ட்கள் மற்றும் வசதிகள் விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக், டாடா மோட்டார்ஸின் தற்சமயம் உள்ள சிறந்த விற்பனை மாடல்கள் ஒன்றாக உள்ளது. இருப்பினும் ஹூண்டாய் மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய தலைமுறை ஐ20 அல்ட்ராஸின் விற்பனைக்கு போட்டியாக உள்ளது.

இவ்வாறு பிரிவில் போட்டி அதிகரித்து வருவதால் அல்ட்ராஸில் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் டிசிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வை டாடா மோட்டார்ஸ் கொண்டுவருகிறது. 2021 டாடா அல்ட்ராஸின் லைன்அப்பில் டாப் வேரியண்ட்களில் மட்டுமே இந்த புதிய டர்போ என்ஜின் தேர்வு வழங்கப்படவுள்ளது.

மேலும் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு டர்போ என்ஜினின் அறிமுகத்திற்கு சில மாதங்களுக்கு பிறகே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது 2021 அல்ட்ராஸில் வழங்கப்படவுள்ள வசதிகள் வேரியண்ட்கள் வாரியாக அல்ட்ராஸ் உரிமையாளர்களின் ஃபேஸ்புக் க்ரூப்பின் மூலம் கிடைத்துள்ளன.

இதன்படி பார்க்கும்போது ஆரம்ப எக்ஸ்இ வேரியண்ட் முன்பக்கத்தில் இரட்டை காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், செண்ட்ரல் லாக்கிங், ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான ஹேங்கர், ஈக்கோ & சிட்டி என பல-நிலை ட்ரைவ் மோட்கள், முன்பக்கத்தில் பவர் ஜன்னல்கள், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க ஹெட்ரெஸ்ட், கருப்பு நிறத்தில் பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடி மற்றும் ஆர்14 இரும்பு சக்கரங்களை பெற்றுவரவுள்ளது.

அடுத்த-நிலை எக்ஸ்எம் வேரியண்ட்டில் 8.9 செ.மீ-ல் சில பக்கங்களை கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் திரை, பின்பக்க பவர் ஜன்னல்கள், ஒளியூட்டப்பட்ட படிக்கட்டு, எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெட் செய்யக்கூடிய பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள், 2 ஸ்பீக்கர்கள் மற்றும் ஹப் மூடிகள் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.

எக்ஸ்எம்+ வேரியண்ட் மேற்கூறியவற்றுடன் கூடுதலாக 7-இன்ச்சில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய ஹர்மன் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், 16 இன்ச்சில் சக்கரங்கள் மற்றும் ரிமோட் கீ ஃபாஃப் போன்றவற்றை ஏற்றுவரவுள்ளது.

எக்ஸ்டி வேரியண்ட், இது புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் குறைவான விலையில் விற்பனை செய்யப்படவுள்ள புதிய அல்ட்ராஸின் வேரியண்ட்டாகும். இதில் ரிவர்ஸில் பார்க்க செய்ய உதவும் கேமிரா, புஷ் பொத்தான் ஸ்டார்ட், எல்இடி டிஆர்எல்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ஐடியல் ஸ்டார்ட்/ஸ்டாப், கூல்டு க்ளோவ் பாக்ஸ், விரைவு யுஎஸ்பி சார்ஜர், 14-இன்ச்சில் சக்கரங்கள், ஸ்போர்ட் & சிட்டி ட்ரைவ் மோட்கள் வழங்கப்படவுள்ளன.

எக்ஸ்இசட் வேரியண்ட்டில் 16 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஒளியூட்டப்பட்ட டேஸ்போர்டு, பின் இருக்கை வரிசைக்கும் ஏசி துளைகள், தானியங்கி ஹெட்லேம்ப்கள் & வைபர்கள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, முன்பக்க இருக்கை பெல்ட்கள் & பின்பக்க ஹெட்ரெஸ்ட்ஸ், பின்பக்க இருக்கை பயணிகளுக்கும் ஆர்ம்ரெஸ்ட் & டீஃபாக்கர், 7-இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், கூடுதல் தேர்வாக கருப்பு நிறத்தில் மேற்கூரை உள்ளிட்டவற்றை டாடா வழங்கவுள்ளது.

டாப் எக்ஸ்இசட்+ வேரியண்ட்டில் மேற்கூறப்பட்ட எக்ஸ்இசட்-இன் வசதிகளுடன் ஐஆர்ஏ- இணைப்பு கார் வசதிகள், எக்ஸ்ப்ரெஸ் கூல், கூடுதல் தேர்வாக இல்லாமல் நிலையாகவே கருப்பு நிற மேற்கூரை மற்றும் பின்பக்க ஃபாக் விளக்கு போன்றவற்றையும் வாடிக்கையாளர்கள் பெறும் விதத்தில் வழங்கப்படவுள்ளது.

இந்த அனைத்து வேரியண்ட்களிலும் உட்புற கேபின் க்ரே நிறத்தில் வழங்கப்பட, காருக்கு வழங்கப்பட்டுவந்த சில்வர் நிறத்தேர்வு நிறுத்தப்படவுள்ளது. அதற்கு பதிலாக எக்ஸ்எம்+ வேரியண்ட்டில் இருந்து புதிய மரினா நீலம் நிறம் வழங்கப்படவுள்ளது.

அதாவது டர்போ பெட்ரோல் என்ஜினை தேர்வு செய்யவில்லை என்றாலும், இந்த புதிய நீல நிறத்தில் அல்ட்ராஸ் காரை வாடிக்கையாளர்கள் பெறலாம். புதிய 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அப்படியே டாடா நெக்ஸானில் பெறப்படவுள்ளது.

இருப்பினும் நெக்ஸானை காட்டிலும் அல்ட்ராஸில் எரிபொருள் சிக்கனமாக உபயோகப்படுத்தும் விதத்தில் இந்த டர்போ என்ஜின் திருத்தியமைக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது. நமக்கு தெரிந்தவரை இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 110 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படலாம். இந்த புதிய டர்போசார்ஜ்டு என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.