கண்ணை கவரும் நீல நிறத்தில் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்!! புதிய ஆற்றல்மிக்க டர்போ என்ஜின் உடன் அறிமுகப்படுத்தும் டாடா!

டாடா அல்ட்ராஸ் பெட்ரோல் காரின் ஸ்பை வீடியோ டிவிசி வீடியோவிற்கான படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

கண்ணை கவரும் நீல நிறத்தில் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்!! புதிய ஆற்றல்மிக்க டர்போ என்ஜின் உடன் அறிமுகப்படுத்தும் டாடா!

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் காரை இந்த ஜனவரி 13ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள்தான் உள்ள நிலையில் இந்த டாடா பெட்ரோல் காரின் ஸ்பை படங்களும் வீடியோக்களும் இணையத்தில் கடந்த சில மாதங்களாக உலா வந்து கொண்டிருக்கின்றன.

கண்ணை கவரும் நீல நிறத்தில் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்!! புதிய ஆற்றல்மிக்க டர்போ என்ஜின் உடன் அறிமுகப்படுத்தும் டாடா!

இந்த வகையில் தொலைக்காட்சி விளம்பர வீடியோவிற்கான படப்படிப்பு தளத்தில் இருந்து வெளியாகியுள்ள வீடியோவில் அல்ட்ராஸ் கார் புதிய மெரீனா நீல நிறத்தில் காட்சியளிக்கிறது. காரின் பின்பக்கத்தில் டர்போ முத்திரையை பார்க்க முடிகிறது.

ஆதித்யா டெண்டுல்கர் என்பவரது யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவின் மூலம் பார்க்கும்போது காரின் தோற்றத்தில் பெரியளவில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்பதை அறிய முடிகிறது. மிகவும் சிறிய அளவிலான அப்டேட்கள் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளன.

கண்ணை கவரும் நீல நிறத்தில் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்!! புதிய ஆற்றல்மிக்க டர்போ என்ஜின் உடன் அறிமுகப்படுத்தும் டாடா!

டாடா நிறுவனம் கடந்த டிசம்பர் மாத இறுதியில் அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரின் பெட்ரோல் வெர்சனின் தயாரிப்பு பணிகளை உறுதிப்படுத்தி இருந்தது. டாடா அல்ட்ராஸ் முதன்முதலாக கடந்த 2020 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கண்ணை கவரும் நீல நிறத்தில் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்!! புதிய ஆற்றல்மிக்க டர்போ என்ஜின் உடன் அறிமுகப்படுத்தும் டாடா!

அதனை தொடர்ந்து ஒரு வருட இடைவெளியில் இதன் டர்போ பெட்ரோல் வெர்சன் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. அல்ட்ராஸில் புதிய டர்போ பெட்ரோல் என்ஜினாக தற்சமயம் நெக்ஸானில் வழங்கப்பட்டுவரும் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்ணை கவரும் நீல நிறத்தில் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்!! புதிய ஆற்றல்மிக்க டர்போ என்ஜின் உடன் அறிமுகப்படுத்தும் டாடா!

நெக்ஸானில் இந்த டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. ஆனால் அல்ட்ராஸில் இதே என்ஜின் அதிகப்பட்சமாக 108 பிஎச்பி மற்றும் 150 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் திருத்தியமைக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.

கண்ணை கவரும் நீல நிறத்தில் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்!! புதிய ஆற்றல்மிக்க டர்போ என்ஜின் உடன் அறிமுகப்படுத்தும் டாடா!

வருகிற 13ஆம் தேதி அறிமுகத்தின்போது இந்த டர்போசார்ஜ்டு என்ஜின் உடன் ஒரே ஒரு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு சில மாதங்கள் கழித்து வழங்கப்படலாம்.

கண்ணை கவரும் நீல நிறத்தில் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்!! புதிய ஆற்றல்மிக்க டர்போ என்ஜின் உடன் அறிமுகப்படுத்தும் டாடா!

தற்சமயம் விற்பனையில் உள்ள அல்ட்ராஸில் அதிகப்பட்சமாக 85 பிஎச்பி & 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 89 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகள் உடன் வழங்கப்படுகின்றன.

கண்ணை கவரும் நீல நிறத்தில் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக்!! புதிய ஆற்றல்மிக்க டர்போ என்ஜின் உடன் அறிமுகப்படுத்தும் டாடா!

இவற்றுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக இணைக்கப்படுகிறது. ரூ.5.44 லட்சத்தில் இருந்து ரூ.7.89 லட்சம் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகின்ற அல்ட்ராஸின் டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படவுள்ள புதிய ஆற்றல்மிக்க டர்போ வேரியண்ட்டின் விலை ரூ.8 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கலாம்.

Most Read Articles
English summary
Tata Altroz Turbo TVC Shoot Spied
Story first published: Sunday, January 3, 2021, 2:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X