புதிய டாடா அல்ட்ராஸ் எக்ஸ்இ+ வேரியண்ட் இவ்வாறான தோற்றத்தில்தான் இருக்கும்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியீடு!

ஆக்ஸஸரீகளுடன் அப்டேட் செய்யப்பட்ட புதிய டாடா அல்ட்ராஸ் எக்ஸ்இ+ காரின் முதல் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய டாடா அல்ட்ராஸ் எக்ஸ்இ+ வேரியண்ட் இவ்வாறான தோற்றத்தில்தான் இருக்கும்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியீடு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் புதிய வேரியண்ட்டை எக்ஸ்இ+ என்கிற பெயரில் கடந்த நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. ரூ.6.35 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய வேரியண்ட் முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்.எம் ட்ரிம்-மிற்கு மாற்றாக அல்ட்ராஸின் ஆரம்ப நிலை எக்ஸ்இ ட்ரிம் நிலைக்கு மேலே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

புதிய டாடா அல்ட்ராஸ் எக்ஸ்இ+ வேரியண்ட் இவ்வாறான தோற்றத்தில்தான் இருக்கும்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியீடு!

அல்ட்ராஸ் எக்ஸ்இ+ பெட்ரோல் & டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளிலும் கிடைக்கிறது. ரூ.6.35 லட்சம் என்பது பெட்ரோல் என்ஜின் உடனான இந்த புதிய வேரியண்ட்டின் விலையாகும். டீசல் என்ஜின் உடன் ரூ.7.75 லட்சம் இதன் விலையாக உள்ளது. ஆரம்ப நிலை எக்ஸ்இ வேரியண்ட்டின் பெட்ரோல் & டீசல் ட்ரிம்களுடன் ஒப்பிடுகையில், இந்த விலைகள் முறையே ரூ.45,000 மற்றும் ரூ.50,000 அதிகமாகும்.

புதிய டாடா அல்ட்ராஸ் எக்ஸ்இ+ வேரியண்ட் இவ்வாறான தோற்றத்தில்தான் இருக்கும்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியீடு!

இந்த கூடுதல் விலைகளுக்கு ஏற்ப இந்த வேரியண்ட்டில் சில கூடுதல் வசதிகள் சேர்க்கப்படுகின்றன. அவற்றை பெற்ற பின்பு அல்ட்ராஸ் எக்ஸ்இ+ கார் எவ்வாறான தோற்றத்தில் இருக்கும் என்பதை ஹைலைட்டாக காட்டும் வீடியோ ஒன்று 'திகார்ஸ் ஷோ பை அர்ஷ் ஜோலி' என்கிற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது. அதனை கீழே காணலாம்.

இந்த விலை குறைவான அல்ட்ராஸ் வேரியண்ட்டிற்கான சாவியை காட்டுவதில் இருந்து இந்த வீடியோ ஆரம்பிக்கிறது. இதன் சாவியானது மிகவும் எளிமையாக, கார் லாக்கிற்கு ஒன்று, அன்லாக்கிற்கு ஒன்று மற்றும் ஃபாலோ மீ ஹெட்லேம்பிற்கு ஒன்று என மொத்தம் 3 பொத்தான்களை கொண்டுள்ளது. இந்த காரில் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

புதிய டாடா அல்ட்ராஸ் எக்ஸ்இ+ வேரியண்ட் இவ்வாறான தோற்றத்தில்தான் இருக்கும்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியீடு!

ஆனால் அவற்றை மேனுவலாக மட்டுமே அட்ஜெஸ்ட் செய்ய முடியும். அல்ட்ராஸ் எக்ஸ்இ+ ட்ரிம்மில் கூடுதல் சவுகரியத்திற்காக ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஃபைண்ட் மீ ஹெட்லேம்ப் செயல்பாடுகள், பல-செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம், என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பொத்தான், 4 பவர் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் ஃபாக் விளக்குகள் உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன.

புதிய டாடா அல்ட்ராஸ் எக்ஸ்இ+ வேரியண்ட் இவ்வாறான தோற்றத்தில்தான் இருக்கும்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியீடு!

அத்துடன் அல்ட்ராஸின் ஆரம்ப நிலை எக்ஸ்இ ட்ரிம் நிலையில் வழங்கப்படும் 4 ஸ்பீக்கர்களை கொண்ட ஹர்மனின் 5 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எஃப்.எம் & ஏ.எம் ரேடியோ, ப்ளூடூத் இணைப்பு வசதி, யுஎஸ்பி சார்ஜிங் துளை மற்றும் விரைவான யுஎஸ்பி சார்ஜர் போன்றவற்றையும் இந்த புதிய வேரியண்ட் பெறுகிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் எக்ஸ்இ+ வேரியண்ட் இவ்வாறான தோற்றத்தில்தான் இருக்கும்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியீடு!

ஆதலால், மொத்தமாக அல்ட்ராஸ் எக்ஸ்இ+ கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற காராகும். அதேநேரம் முந்தைய எக்ஸ்.எம் ட்ரிம் உடன் ஒப்பிடுகையில், பின்பக்க பார்சல் அலமாரி, சக்கர மூடிகள் மற்றும் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகளுக்கான எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்மெண்ட் உள்ளிட்டவற்றை இந்த வேரியண்ட் இழந்துள்ளது.

புதிய டாடா அல்ட்ராஸ் எக்ஸ்இ+ வேரியண்ட் இவ்வாறான தோற்றத்தில்தான் இருக்கும்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியீடு!

மேலுள்ள வீடியோவில், அல்ட்ராஸ் எக்ஸ்இ+ காரில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதை பார்க்கலாம். பயணிகளின் பாதுகாப்பிற்கு இந்த புதிய அல்ட்ராஸ் வேரியண்ட்டில் இரட்டை காற்றுப்பைகள், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் முதலியவை வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் டாடா பிரீமியம் ஹேட்ச்பேக் காராக விளங்கும் அல்ட்ராஸில் மொத்தம் 3 விதமான என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

புதிய டாடா அல்ட்ராஸ் எக்ஸ்இ+ வேரியண்ட் இவ்வாறான தோற்றத்தில்தான் இருக்கும்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியீடு!

இதில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 89 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனையும், 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 109 பிஎச்பி மற்றும் 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இவை அனைத்துடனும் நிலையான டிரான்ஸ்மிஷன் தேர்வாக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் எக்ஸ்இ+ வேரியண்ட் இவ்வாறான தோற்றத்தில்தான் இருக்கும்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியீடு!

இவற்றுடன் விரைவில் அல்ட்ராஸ் சிஎன்ஜி காரையும் அறிமுகம் செய்ய டாடா தயாராகி வருகிறது. அல்ட்ராஸ் சிஎன்ஜி காரை சில மாதங்களுக்கு முன்பே சோதனை ஓட்டங்களின் போது பார்த்திருந்தோம். அப்போது நமக்கு கிடைக்க பெற்றிருந்த ஸ்பை படங்களில் புதுமையான & கண்ணை கவரக்கூடிய நீல நிறத்தில் அல்ட்ராஸ் காட்சி தந்திருந்தது.

புதிய டாடா அல்ட்ராஸ் எக்ஸ்இ+ வேரியண்ட் இவ்வாறான தோற்றத்தில்தான் இருக்கும்!! முதல் வீடியோ இணையத்தில் வெளியீடு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்சமயம் எக்ஸ்இ, எக்ஸ்இ+, எக்ஸ்எம்+, எக்ஸ்டி, எக்ஸ்இசட், எக்ஸ்இசட் (O) மற்றும் எக்ஸ்இசட்+ என்கிற 7 விதமான ட்ரிம் நிலைகளில் அல்ட்ராஸ் காரை விற்பனை செய்து வருகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.89 லட்சங்களில் இருந்து ரூ.9.64 லட்சங்கள் வரையில் உள்ளன. டாடா அல்ட்ராஸிற்கு விற்பனையில் மாருதி சுஸுகி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 உள்ளிட்டவை முக்கியமான போட்டி மாடல்களாக விளங்குகின்றன.

Most Read Articles
English summary
Tata altroz xe plus variant features engine details
Story first published: Saturday, December 18, 2021, 17:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X