Just In
- 3 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 5 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 5 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 6 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் விற்பனைக்கு வருகிறது அரசியல்வாதிகளின் பிரியமான டாடா கார்... எதுனு தெரிஞ்சா நீங்களும் சந்தோஷப்படுவீங்க
இந்திய அரசியல்வாதிகளின் பிரியமான டாடா காரொன்று மீண்டும் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம்.

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் இன்று ஓர் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் டாடாவின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றான சஃபாரி எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. இக்காரை புதிய அவதாரத்தில் விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாக அது தெரிவித்திருக்கின்றது.

இரு தசாப்தங்களுக்கும் அதிகமாக இந்தியாவின் ஆஃப் ரோடு பயண பிரியர்களின் மிகுந்த விருப்பமான கார்களில் ஒன்றாக இருந்ததே இந்த சஃபாரி எஸ்யூவி கார். இக்காரை முதல் முறையாக 1998ம் ஆண்டிலேயே இந்தியாவில் டாடா விற்பனைக்குக் கொண்டு வந்தது. 20 ஆண்டுகள் சந்தையில் வீர நடைபோட்டுக் கொண்டிருந்தநிலையில் திடீரென குறிப்பிட்ட காரணங்களுக்காக 2019ல் இக்காரை ஒட்டுமொத்தமாக சந்தையை விட்டு நீக்கியது.

டாடாவின் இந்த அதிரடி செயல் அதன் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் அசால்ட் செய்து விடும் திறனை இக்கார் கொண்டிருந்த காரணத்தினாலயே பெருமளவிலான ரசிகர்கள் பட்டாளத்தை இக்கார் கொண்டிருந்தது. இக்காருக்கு இந்திய அரசியல்வாதிகள் பலரும்கூட தீவிர ரசிகர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தற்போதும் இக்காரில் வலம் வரும் அரசியல்வாதிகளை நம்மால் காண முடிகின்றது. உறுதியான கட்டுமானம், அதிக சொகுசு வசதி என அனைத்திலும் பெயர்போன தயாரிப்பே இது. எனவேதான் இக்கார் இந்திய சந்தையை விட்டு வெளியேறியது பலருக்கு அதிர்ச்சியையும், சோகத்தியையும் ஏற்படுத்தியது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே இந்தியர்களின் ஏக்கத்தைத் தீர்க்கும் வகையில் மீண்டும் இக்காரை களமிறக்கும் முயற்சியில் டாடா ஈடுபடத் தொடங்கியுள்ளது.

இம்முறை புதிய அவதாரத்தில் இக்கார் விற்பனைக்குக் கொண்டுவரப்பட இருப்பதாக டாடா தெரிவித்துள்ளது. தொடர்ந்து கூடுதல் திறன், வசதி மற்றும் மிக மிக உறுதியான கட்டுமானம் ஆகியவற்றுடன் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என கூறியிருக்கின்றது.

கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் கிராவிடஸ் எனும் குறிப்பெயரில் இக்காரை டாடா அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுதந்தது. இந்த நிலையில் தற்போது சஃபாரி எனும் பெயரிலியே அறிமுகப்படுத்த டாடா திட்டமிட்டிருக்கின்றது. முன்னதாக பல முறை இக்கார் சோதனையோட்டம் செய்யப்பட்டு வந்த நிலையிலேயே இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து டாடா நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவின் தலைவர் ஷைலேஸ் சந்திரா கூறியதாவது, "சஃபாரி காரை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இக்கார் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய சாலைகளில் வலம் வந்தது. தற்போது புதிய அவதாரத்தில், தனித்துவமான அனுபவங்களுடன் வாடிக்கையாளர்களை குதூகலப்படுத்த வருகின்றது. இதன் வடிவமைப்பு, செயல்திறன், பல்துறைத்திறன், அம்சங்கள் மற்றும் நீண்டகால உழைக்கும் திறன் உள்ளிட்டவை எஸ்யூவி கார் பிரியர்களை நிச்சயம் கவர்ந்திழுக்கும். இக்காரின் வெளியீடு மீண்டும் சந்தையை உற்சாகப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

தனது புதிய வடிவமைப்பு மொழியான இம்பேக்ட் 2.0 டிசைன் கட்டமைப்பைக் கொண்டே டாடா இக்காரை வடிவமைத்திருக்கின்றது. இத்துடன் ஒமெகாஆர்க் (OMEGARC) டி8 பிளாட்பாரத்திலேயே இக்காரே கட்டமைத்திருக்கின்றது. இந்த பிளாட்பாரத்தைப் பயன்படுத்தியே லேண்ட்ரோவர் பிராண்ட் சொகுசு வாகனங்களை இந்நிறுவனம் தயாரித்து வருகின்றது.

ஆகையால், லக்சூரி மற்றும் பிரீமியம் என அனைத்திலும் இக்கார் திறன் மிக்கதாக காட்சியளிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த தகவலை வெளியிட்ட கையுடன் இந்த புத்தம் புதிய காருக்கான புக்கிங்கையும் டாடா தொடங்கியிருக்கின்றது. மேலும், இந்த ஜனவரி மாதத்திலேயே அனைத்து டாடா ஷோரூம்களிலும் இக்கார் காட்சியளிக்க தொடங்கும் என்பதையும் டாடா தெரிவித்திருக்கின்றது.