மலிவான டாடா கார்களை இன்னும் குறைவான விலையில் வாங்கலாம்!! ஜனவரி மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அதன் தயாரிப்பு மாடல்கள் அனைத்தின் விலைகளையும் கணிசமாக உயர்த்தி இருந்தது.

மலிவான டாடா கார்களை இன்னும் குறைவான விலையில் வாங்கலாம்!! ஜனவரி மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு

இந்த நிலையில் அதனை சரி செய்துக்கொள்ளும் விதமாக குறிப்பிட்ட சில டாடா கார்களுக்கு 2021 ஜனவரி மாதத்திற்கான கவர்ச்சிக்கரமான சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் காரில் இருந்து ப்ரீமியம் எஸ்யூவி கார் வரையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகளை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மலிவான டாடா கார்களை இன்னும் குறைவான விலையில் வாங்கலாம்!! ஜனவரி மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு

1.டாடா டியாகோ

டியாகோ, டாடா மோட்டார்ஸின் மலிவான ஹேட்ச்பேக் காராக விளங்கி வருகிறது. இந்த காருக்கு ரூ.15,000 பணம் தள்ளுபடி மற்றும் ரூ.10,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் போனஸ் உள்ளிட்டவை சிறப்பு சலுகைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ரூ.3,000 வரையிலான கார்பிரேட் தள்ளுபடியும் இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மலிவான டாடா கார்களை இன்னும் குறைவான விலையில் வாங்கலாம்!! ஜனவரி மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு

2.டாடா டிகோர்

தற்சமயம் டாடா பிராண்டில் இருந்து கிடைக்கும் ஒரே செடான் கார் மாடலாக டிகோர் விளங்குகிறது. இந்த காரை இந்த ஜனவரி மாதத்தில் வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.15,000 மதிப்பில் பணம் தள்ளுபடி, ரூ.3,000 மதிப்பில் கார்ப்ரேட் போனஸ் மற்றும் ரூ.15,000 வரையில் எக்ஸ்சேன்ஞ் போனஸை பெறலாம்.

மலிவான டாடா கார்களை இன்னும் குறைவான விலையில் வாங்கலாம்!! ஜனவரி மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு

3.டாடா நெக்ஸான்

நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு எந்த பணம் தள்ளுபடி சலுகையும் அறிவிக்கப்படவில்லை. பெட்ரோல் வேரியண்ட்களுக்கு ரூ.3,000 மதிப்பில் கார்ப்ரேட் போனஸும், டீசல் வேரியண்ட்களுக்கு ரூ.5,000 மதிப்பில் கார்ப்ரேட் போனஸும், ரூ.15,000 மதிப்பில் எக்ஸ்சேன்ஞ் போனஸும் அறிவிக்கப்பட்டுள்ளன. நெக்ஸான் இவி காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக ரூ.15,000 மதிப்பில் எக்ஸ்சேன்ஞ் போனஸ் வழங்கப்பட்டுள்ளது.

மலிவான டாடா கார்களை இன்னும் குறைவான விலையில் வாங்கலாம்!! ஜனவரி மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு

4.டாடா ஹெரியர்

ஹெரியரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.25,000 மதிப்பில் பணம் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சலுகை அறிவிப்பில் எக்ஸ்இசட்+, எக்ஸ்இசட்ஏ+, கமோ எடிசன் மற்றும் டார்க் எடிசன் உள்ளிட்டவை உட்படுத்தப்படவில்லை. மற்ற ட்ரிம் நிலைகள் மட்டும் ரூ.40,000ல் எக்ஸ்சேன்ஞ் போனஸ் மற்றும் ரூ.5,000-ல் கார்பிரேட் போனஸை பெற்றுள்ளன.

மலிவான டாடா கார்களை இன்னும் குறைவான விலையில் வாங்கலாம்!! ஜனவரி மாதத்திற்கான சலுகைகள் அறிவிப்பு

5.டாடா அல்ட்ராஸ்

டாடா நிறுவனம் இந்த ஜனவரி மாதத்திற்கான சலுகை எதையும் அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் காருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சில டீலர்ஷிப்கள் மட்டும் வரப்போகும் பண்டிகை நாட்களை முன்னிட்டு சலுகைகளை அறிவித்துள்ளன. அவற்றையும் மேலே உள்ள மற்ற டாடா மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை குறித்த விபரங்களையும் அறிய அருகில் டீலர்ஷிப் மையங்களை அணுகவும்.

Article Published On: Saturday, January 9, 2021, 23:45 [IST]
English summary
Tata cars discount Jan 2021
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+