டாடா கார்களுக்கு புத்தாண்டு ஆஃபர்... எவ்வளவு சேமிக்கலாம் தெரியுமா?

புத்தாண்டை முன்னிட்டு புதிய டாடா கார்களுக்கு சிறப்பு சேமிப்பு மற்றும் தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா கார்களுக்கு புத்தாண்டு ஆஃபர்... எவ்வளவு சேமிக்கலாம் தெரியுமா?

கொரோனாவுக்கு பிறகு கார் விற்பனையை அதிகரிக்க சிறப்பு சலுகைகளை தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதற்கு கைமேல் பலனாக பல நிறுவனங்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

டாடா கார்களுக்கு புத்தாண்டு ஆஃபர்... எவ்வளவு சேமிக்கலாம் தெரியுமா?

இந்த நிலையை தக்க வைக்கும் விதமாக, புத்தாண்டு பிறந்த நிலையில், சிறப்பு சலுகைகளை கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், டாடா நிறுவனம் தனது கார்களுக்கு ரூ.65,000 வரை சிறப்பு சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.

டாடா கார்களுக்கு புத்தாண்டு ஆஃபர்... எவ்வளவு சேமிக்கலாம் தெரியுமா?

டாடா டியாகோ

டாடா டியாகோ காருக்கு ரூ.25,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதில், ரூ.15,000 சிறப்பு திட்டங்கள் மூலமாக சேமிக்க முடியும். பழைய காரை கொடுத்து புதிய டாடா டியாகோ காரை வாங்குவோருக்கு, கூடுதல் மதிப்பாக ரூ.10,000 வரை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

டாடா கார்களுக்கு புத்தாண்டு ஆஃபர்... எவ்வளவு சேமிக்கலாம் தெரியுமா?

டாடா டிகோர்

டாடா டிகோர் காருக்கு ரூ.30,000 வரை சேமிப்பு பெறும் வாய்ப்பு இருக்கிறது. சிறப்பு திட்டங்கள் மூலமாக ரூ.15,000 வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த காருக்கு ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மதிப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டாடா கார்களுக்கு புத்தாண்டு ஆஃபர்... எவ்வளவு சேமிக்கலாம் தெரியுமா?

டாடா நெக்ஸான்

டாடா நெக்ஸான் எஸ்யூவிக்கு ரூ.15,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்பு இருக்கிறது. பழைய காரை கொடுத்து புதிய கார் வாங்குவோருக்கு கூடுதல் மதிப்பாக இந்த கழிவு பெற முடியும்.

டாடா கார்களுக்கு புத்தாண்டு ஆஃபர்... எவ்வளவு சேமிக்கலாம் தெரியுமா?

டாடா ஹாரியர்

டாடா ஹாரியர் எஸ்யூவியின் எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளை தவிர்த்து பிற அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் ரூ.25,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.40,000 வரை கூடுதல் சேமிப்பையும் பெற முடியும். மொத்தமாக ரூ.65,000 மதிப்புடைய சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ஹாரியர் காமோ எடிசன் மாடலுக்கு ரூ.40,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகை மட்டுமே பெறும் வாய்ப்பு இருக்கிறது.

டாடா கார்களுக்கு புத்தாண்டு ஆஃபர்... எவ்வளவு சேமிக்கலாம் தெரியுமா?

கடந்த 1ந் தேதி முதல் வரும் 31ந் தேதி வரை புதிய டாடா கார்களை புக்கிங் செய்வோருக்கு இந்த சிறப்பு சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். இதனிடையே, டாடா அல்ட்ராஸ் டர்போ மற்றும் சஃபாரி 7 சீட்டர் எஸ்யூவி மாடலை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Tata Motors has announced a host of discounts, benefits and special offers on select models in its lineup for January 2021. The company is offering a number of discounts and offers worth up to Rs 65,000 on models including the Tiago, Tigor, Nexon and the Harrier.
Story first published: Monday, January 11, 2021, 16:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X