டாடாவின் இந்த 6 கார் மாடல்களில் 1 இருந்தாகூட போதும் எமனுக்கே டாடா காட்டிடலாம்... ரொம்ப பாதுகாப்பான கார்கள்!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் 8 பாதுகாப்பான கார்களின் பட்டியலில் ஆறு கார் மாடல்கள் டாடாவின் தயாரிப்பு என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து. குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பு வெளியிட்ட முக்கிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.

டாடாவின் இந்த 6 கார் மாடல்களில் 1 இருந்தா போதும் எமனுக்கே டாடா காட்டிடலாம்... ரொம்ப பாதுகாப்பான கார்கள்!

அதிக பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தரமான கார்களை தேடுபவர்களுக்கு உதவும் விதமாக குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு புதிய வாகனங்களை விபத்துக்கு உட்படுத்தி, அந்த குறிப்பிட்ட வாகனத்தின் பாதுகாப்பு திறன் மற்றும் தரம் ஆகியவை குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டு வருகின்றது.

டாடாவின் இந்த 6 கார் மாடல்களில் 1 இருந்தா போதும் எமனுக்கே டாடா காட்டிடலாம்... ரொம்ப பாதுகாப்பான கார்கள்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அதிக பாதுகாப்பான அம்சங்கள் விலையுயர்ந்த மற்றும் சொகுசு கார்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது இந்நிலை மாறியிருக்கின்றது. விலைக் குறைவான கார்களில்கூட வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிக பாதுகாப்பு அம்சங்களை வழங்கத் தொடங்கி இருக்கின்றன.

டாடாவின் இந்த 6 கார் மாடல்களில் 1 இருந்தா போதும் எமனுக்கே டாடா காட்டிடலாம்... ரொம்ப பாதுகாப்பான கார்கள்!

இதற்கு மிக சிறந்த உதாரணம் இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) ஆகும். இந்நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் அதிக பாதுகாப்பு திறன் கொண்டவையாக காட்சியளிக்கின்றன. அண்மையில், குளோபல் என்சிஏபி அமைப்பு வெளியிட்ட தகவலே இதற்கு சான்று.

டாடாவின் இந்த 6 கார் மாடல்களில் 1 இருந்தா போதும் எமனுக்கே டாடா காட்டிடலாம்... ரொம்ப பாதுகாப்பான கார்கள்!

இந்த அமைப்பு இதுவரை பல நிறுவனங்களின் தயாரிப்புகளை மோதல் ஆய்விற்கு உட்படுத்தி இருக்கின்றது. ஆனால், ஒரே நிறுவனத்தின் பல தயாரிப்புகள் தொடர்ச்சியாக அதிக பாதுகாப்பானவை என்ற தர ரேட்டிங்கைப் பெறவில்லை. அதேவேலையில், குளோபல் என்சிஏபி அமைப்பு ஆய்விற்கு உட்படுத்திய பெரும்பாலான டாடா தயாரிப்புகள் அதிக பாதுகாப்பானவை என்ற நற்சான்றைப் பெற்றிருக்கின்றன.

டாடாவின் இந்த 6 கார் மாடல்களில் 1 இருந்தா போதும் எமனுக்கே டாடா காட்டிடலாம்... ரொம்ப பாதுகாப்பான கார்கள்!

இதற்கு மிக சிறந்த உதாரணம் அண்மையில் வெளியீட்டைப் பெற்ற டாடா பஞ்ச் (Tata Punch) மைக்ரோ எஸ்யூவி ஓர் மிக சிறந்த உதாரணம். இந்த காரை மோதல் ஆய்விற்கு உட்படுத்தியதில் ஐந்திற்கு நான்கு நட்சத்திர பாதுகாப்பை ரேட்டிங்கைப் பெற்றது. இது, பெரியவர்களுக்கான பாதுகாப்பு தர மதிப்பாகும். சிறியவர்களுக்கான பாதுகாப்பில் இந்த கார் ஐந்திற்கு நான்கு நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது.

டாடாவின் இந்த 6 கார் மாடல்களில் 1 இருந்தா போதும் எமனுக்கே டாடா காட்டிடலாம்... ரொம்ப பாதுகாப்பான கார்கள்!

இதேபோல், டாடாவின் பிற தயாரிப்புகளான டியாகோ, டிகோர், டிகோர் இவி, அல்ட்ராஸ், நெக்ஸான் ஆகிய கார் மாடல்கள் அதிக பாதுகாப்பானவை என்ற தர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, அல்ட்ராஸ், நெக்ஸான் ஆகியவை பஞ்ச் மைக்ரோ எஸ்யூவியைப் போல் பெரியவர்களின் பாதுகாப்பு ரேட்டிங்கில் ஐந்திற்கு ஐந்து நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றன.

டாடாவின் இந்த 6 கார் மாடல்களில் 1 இருந்தா போதும் எமனுக்கே டாடா காட்டிடலாம்... ரொம்ப பாதுகாப்பான கார்கள்!

டியாகோ, டிகோர் மற்றும் டிகோர் இவி ஆகிய ஐந்திற்கு நான்கு நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றன. தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின்கீழ், டியாகோ, டியாகோ என்ஆர்ஜி, டிகோர், டிகோர் இவி, அல்ட்ராஸ், நெக்ஸான், நெக்ஸான் இவி, ஹாரியர், சஃபாரி மற்றும் பஞ்ச் (அக்டோபர் 18 விற்பனைக்கு வருகிறது) ஆகிய கார்கள் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன.

டாடாவின் இந்த 6 கார் மாடல்களில் 1 இருந்தா போதும் எமனுக்கே டாடா காட்டிடலாம்... ரொம்ப பாதுகாப்பான கார்கள்!

இதில், ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகியவற்றை இன்னும் குளோபல் என்சிஏபி ஆய்விற்கு உட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றை ஆய்விற்கு உட்படுத்தினால் இவையும் நான்கிற்கும் ஸ்டார் ரேட்டிங்கைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவரை குளோபல் என்சிஏபி அமைப்பு மோதல் ஆய்விற்கு உட்படுத்திய பெரும்பாலான டாடா கார்கள் நான்கிற்கும் அதிகமான ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றன.

டாடாவின் இந்த 6 கார் மாடல்களில் 1 இருந்தா போதும் எமனுக்கே டாடா காட்டிடலாம்... ரொம்ப பாதுகாப்பான கார்கள்!

குளோபல் என்சிஏபி அமைப்பு அண்மையில் வெளியிட்ட பாதுகாப்பு தரம் அதிகம் கொண்ட கார்களின் பட்டியலில் டாடா பஞ்ச் முதல் இடத்திலும், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் டாடா அல்ட்ராஸ் காரும் இருக்கின்றன. இதற்கு அடுத்ததாக நான்காவது இடத்தை டாடாவின் நெக்ஸான், ஐந்தாவது இடத்தை மஹிந்திரா தார் ஆகிய கார்கள் பிடித்திருக்கின்றன.

டாடாவின் இந்த 6 கார் மாடல்களில் 1 இருந்தா போதும் எமனுக்கே டாடா காட்டிடலாம்... ரொம்ப பாதுகாப்பான கார்கள்!

அதேவேலையில், இப்பட்டியலில் ஒட்டுமொத்தமாக டாடாவின் தயாரிப்புகள் மட்டும் ஆறு இடத்தை பிடித்திருக்கின்றன. ஆகையால், இந்தியாவில் அதிகமான பாதுகாப்பான காரை விற்பனைச் செய்யும் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் உருவாகியுள்ளது. இது டாடா நிறுவனத்தின் மீதிருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

Most Read Articles

English summary
Tata cars tested by global ncap managed to achieve impressive safety ratings
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X