மாலை போட்டு டெலிவிரி எடுக்கப்பட்ட டாடா டார்க் எடிசன் கார்கள்!! உரிமையாளர்கள் செம்ம குஷி!

டாடா நெக்ஸான் இவி மற்றும் அல்ட்ராஸ் மாடல்களின் டார்க் எடிசன்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனை உறுதி செய்யும் வகையில் வெளியாகியுள்ள படங்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

மாலை போட்டு டெலிவிரி எடுக்கப்பட்ட டாடா டார்க் எடிசன் கார்கள்!! உரிமையாளர்கள் செம்ம குஷி!

வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியாக, இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த வாரத்தில் அதன் புதிய டார்க் எடிசன் கார்களை அறிமுகப்படுத்தியது.

மாலை போட்டு டெலிவிரி எடுக்கப்பட்ட டாடா டார்க் எடிசன் கார்கள்!! உரிமையாளர்கள் செம்ம குஷி!

இந்த புதிய டார்க் எடிசன்கள் பிரபலமான டாடா கார்களான அல்ட்ராஸ், நெக்ஸான் (எலக்ட்ரிக் வெர்சனும் சேர்த்து) மற்றும் ஹெரியர் மாடல்களில் கொண்டுவரப்பட்டுள்ளன. அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இவற்றிற்கான முன்பதிவுகள் நாடு முழுவதும் துவங்கப்பட்டன.

மாலை போட்டு டெலிவிரி எடுக்கப்பட்ட டாடா டார்க் எடிசன் கார்கள்!! உரிமையாளர்கள் செம்ம குஷி!

இந்த நிலையில் 1 வாரம் கழித்து தற்போது அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் இவி மாடல்களின் டார்க் எடிசன்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் நாடு முழுவதும் ஆங்காங்கே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாலை போட்டு டெலிவிரி எடுக்கப்பட்ட டாடா டார்க் எடிசன் கார்கள்!! உரிமையாளர்கள் செம்ம குஷி!

Image Courtesy: Tata car owners/Instagram

இதனை உறுதி செய்யும் படங்கள் டாடா கார் ஓனர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த டார்க் எடிசன்கள் அனைத்தும் பெயருக்கு ஏற்றாற்போல் அடர் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன, சக்கரங்கள் கூட.

மாலை போட்டு டெலிவிரி எடுக்கப்பட்ட டாடா டார்க் எடிசன் கார்கள்!! உரிமையாளர்கள் செம்ம குஷி!

இதில் அல்ட்ராஸ் டார்க் எடிசனின் விலை ரூ.8.71 லட்சமாகவும், நெக்ஸான் டார்க் எடிசனின் விலை ரூ.10.40 லட்சமாகவும், நெக்ஸான் இவி டார்க் எடிசனின் விலை ரூ.15.99 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் ஹெரியர் டார்க் எடிசனும் அறிமுகப்படுத்தப்பட்டது அல்லவா, அதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18.04 லட்சம் ஆகும்.

மாலை போட்டு டெலிவிரி எடுக்கப்பட்ட டாடா டார்க் எடிசன் கார்கள்!! உரிமையாளர்கள் செம்ம குஷி!

விரைவில் வரவுள்ள பண்டிகை காலத்திற்காக மிகவும் ஸ்டைலிஷான காரை வாங்க விரும்புவோரை கவர்வதற்காக இந்த டார்க் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வணிக பிரிவின் முதன்மை சந்தைப்படுத்தல் மேலாளர் விவேக் ஸ்ரீவஸ்தாவா கூறியுள்ளார்.

மாலை போட்டு டெலிவிரி எடுக்கப்பட்ட டாடா டார்க் எடிசன் கார்கள்!! உரிமையாளர்கள் செம்ம குஷி!

புதிய டாடா அல்ட்ராஸ் டார்க் எடிசன், இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எக்ஸ்.இசட்+ வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்யூவி காரில், அதன் எக்ஸ்.இசட்+ மற்றும் எக்ஸ்.இசட்+ லக்ஸ் வேரியண்ட்களில் டார்க் எடிசன் வழங்கப்படுகிறது.

மாலை போட்டு டெலிவிரி எடுக்கப்பட்ட டாடா டார்க் எடிசன் கார்கள்!! உரிமையாளர்கள் செம்ம குஷி!

இவற்றில் வழங்கப்படும் பிரத்யேகமான அடர் கருப்பு நிற அலங்கரிப்பில், ‘DARK' எடிசனை என்பதை வெளிக்காட்டும் முத்திரைகளும் அடங்குகின்றன. அதேபோல் இவற்றின் உட்புறமும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்படுகிறது.

மாலை போட்டு டெலிவிரி எடுக்கப்பட்ட டாடா டார்க் எடிசன் கார்கள்!! உரிமையாளர்கள் செம்ம குஷி!

நெக்ஸான் இவி டார்க் எடிசனில் மட்டும் எலக்ட்ரிக் வாகனம் என்பதையும் வெளிக்காட்டுவதற்காக வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் நீல நிற தொடுதல்கள் வழங்கப்படுகின்றன. இதன்படி, நெக்ஸான் இவி டார்க் எடிசனின் முன்பக்க க்ரில்லில் மிக அழகான ‘இவி' லோகோ வழங்கப்படுவதை தற்போது கிடைத்துள்ள படங்களில் கூட பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Tata Altroz nexon dark edition delivery starts.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X