எல்லா பக்கமும் ஓடுது... வேற லெவலில் பிரபலமாகும் Tata Nexon எலெக்ட்ரிக் கார்... நம்ம இந்திய தயாரிப்பாச்சே!

Tata Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எல்லா பக்கமும் ஓடுது... வேற லெவலில் பிரபலமாகும் Tata Nexon எலெக்ட்ரிக் கார்... நம்ம இந்திய தயாரிப்பாச்சே!

கிரேட்டர் மும்பை மாநகராட்சி நிர்வாகத்திற்கு, Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை வழங்கியுள்ளதாக Tata Motors நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 28) அறிவித்துள்ளது. EESL (Energy Efficiency Services Limited) நிறுவனத்துடனான டெண்டர் ஒப்பந்தத்தின்படி, Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை வழங்கியுள்ளதாக Tata Motors தெரிவித்துள்ளது.

எல்லா பக்கமும் ஓடுது... வேற லெவலில் பிரபலமாகும் Tata Nexon எலெக்ட்ரிக் கார்... நம்ம இந்திய தயாரிப்பாச்சே!

மஹாராஷ்டிரா எலெக்ட்ரிக் வாகன கொள்கை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகன புரட்சி ஆரம்பித்து விட்டது. அங்கு எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு மிக வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில்தான், Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை Tata Motors நிறுவனம் கிரேட்டர் மும்பை மாநகராட்சி நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளது.

எல்லா பக்கமும் ஓடுது... வேற லெவலில் பிரபலமாகும் Tata Nexon எலெக்ட்ரிக் கார்... நம்ம இந்திய தயாரிப்பாச்சே!

Tata Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் 30.2 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் Tata Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகி கொண்டுள்ள எலெக்ட்ரிக் கார் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா பக்கமும் ஓடுது... வேற லெவலில் பிரபலமாகும் Tata Nexon எலெக்ட்ரிக் கார்... நம்ம இந்திய தயாரிப்பாச்சே!

இதற்கு Tata Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நேரடி போட்டி என எந்த காரும் இல்லை என்பது முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் Hyundai Kona எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய எலெக்ட்ரிக் கார்கள் இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து வருகின்றன. எனினும் இவை இரண்டுமே, Tata Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நேரடி போட்டி கிடையாது.

எல்லா பக்கமும் ஓடுது... வேற லெவலில் பிரபலமாகும் Tata Nexon எலெக்ட்ரிக் கார்... நம்ம இந்திய தயாரிப்பாச்சே!

இந்த இரண்டு எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களும், Tata Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விட விலை உயர்ந்தவை. எனினும் Tata Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நிறைய போட்டிகள் உருவாகி வருகின்றன. MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வடிவத்திலேயே, Tata Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு போட்டி வரவுள்ளது.

எல்லா பக்கமும் ஓடுது... வேற லெவலில் பிரபலமாகும் Tata Nexon எலெக்ட்ரிக் கார்... நம்ம இந்திய தயாரிப்பாச்சே!

ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் தற்போது வழங்கப்பட்டு வரும் பேட்டரி தொகுப்பை விட சிறிய பேட்டரி தொகுப்பை வழங்குவதற்கு MG நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை குறையும். எனவே Tata Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு, MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் போட்டியாக மாறும்.

எல்லா பக்கமும் ஓடுது... வேற லெவலில் பிரபலமாகும் Tata Nexon எலெக்ட்ரிக் கார்... நம்ம இந்திய தயாரிப்பாச்சே!

சிறிய பேட்டரி தொகுப்பு காரணமாக, பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணிக்கும் தொலைவு (ரேஞ்ச்) குறையலாம் என்றாலும், விலை குறையும் என்பது முக்கியமான அம்சம். சிறிய பேட்டரி தொகுப்பு காரணமாக, சார்ஜ் செய்வதற்கான நேரம் குறையும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

எல்லா பக்கமும் ஓடுது... வேற லெவலில் பிரபலமாகும் Tata Nexon எலெக்ட்ரிக் கார்... நம்ம இந்திய தயாரிப்பாச்சே!

MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் தவிர, Mahindra XUV300 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வடிவிலும், Tata Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு போட்டி வரவுள்ளது. வழக்கமான ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட Mahindra XUV300 சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

எல்லா பக்கமும் ஓடுது... வேற லெவலில் பிரபலமாகும் Tata Nexon எலெக்ட்ரிக் கார்... நம்ம இந்திய தயாரிப்பாச்சே!

இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு Mahindra நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கார் விற்பனைக்கு வந்தால், Tata Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு நேரடி போட்டியாக இருக்கும். எனவே வரும் காலங்களில் Tata Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இந்திய சந்தையில் கடும் போட்டி ஏற்படவுள்ளது.

எல்லா பக்கமும் ஓடுது... வேற லெவலில் பிரபலமாகும் Tata Nexon எலெக்ட்ரிக் கார்... நம்ம இந்திய தயாரிப்பாச்சே!

Tata Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை சிறப்பாக இருப்பதற்கு, போட்டி இல்லை என்பது ஒரு காரணம் மட்டுமே. மற்றபடி நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற ரேஞ்ச், சிறப்பான வசதிகள் என பல்வேறு அம்சங்களில், Tata Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அசத்துகிறது. இந்த காரின் விற்பனை சிறப்பாக இருப்பதற்கு இந்த விஷயங்களும் முக்கிய காரணமாகும்.

எல்லா பக்கமும் ஓடுது... வேற லெவலில் பிரபலமாகும் Tata Nexon எலெக்ட்ரிக் கார்... நம்ம இந்திய தயாரிப்பாச்சே!

Tata Nexon எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், Altroz பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் Tata Motors நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த காரும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles

English summary
Tata delivers nexon electric suv to greater mumbai municipal corporation
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X