டாடா நிறுவனத்தின் குறைந்த விலை மின்சார காரை வாங்கிய கோவா அரசு... இந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா?

சுற்று தளங்களுக்கு பெயர்போன பகுதிகளில் ஒன்றான கோவா அரசு, தனது குறிப்பிட்ட ஓர் துறைக்காக டாடா நிறுவனத்தின் குறைந்த விலை மின்சார காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா நிறுவனத்தின் குறைந்த விலை மின்சார காரை வாங்கிய கோவா அரசு... இந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா?

டாடா மோர்ஸ் நிறுவனத்தின் விலைக் குறைந்த எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றான டிகோர் இவி காரை கோவா அரசாங்கம் பயன்பாட்டிற்கு வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கோவா அரசு ஆர்டர் கொடுத்த மின்சார கார்களை டாடா நிறுவனம் அம்மாநில அரசு அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டாடா நிறுவனத்தின் குறைந்த விலை மின்சார காரை வாங்கிய கோவா அரசு... இந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா?

தனது, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை (Department of New & Renewable Energy)-யின் பயன்பாட்டிற்காகவே கோவா அரசாங்கம் இந்த மின்சார கார்களை வாங்க அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இந்த அனுமதியைத் தொடர்ந்து புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை கொடுத்த ஆர்டரின் பேரில் அனைத்து டிகோர் மின்சார கார்களும் டெலிவரி வழங்கப்பட்டிருக்கின்றன.

டாடா நிறுவனத்தின் குறைந்த விலை மின்சார காரை வாங்கிய கோவா அரசு... இந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா?

இந்த கார் வழங்கும் நிகழ்வில் கோவா மாநிலத்தின் முதலமைச்சர் பிரமோத் பாண்டுரங் சவந்த், மாநிலத்தின் சபாநாயகர் ராஜேஷ் துல்ஷிதாஸ் பட்னேகர், மின்சார துறை அமைச்சர் நிலேஷ் கப்ரால் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

டாடா நிறுவனத்தின் குறைந்த விலை மின்சார காரை வாங்கிய கோவா அரசு... இந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா?

டாடா நிறுவனம் தனித்துவமாக டிகோர் மின்சார காரை பொது சேவையில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் மற்றும் துறைகளுக்கு மட்டுமே விற்பனைக்கு வழங்கி வருகின்றது. எனவேதான் இக்காரை தனி நபர் பயன்பாட்டில் பார்க்க முடிவதில்லை. அதேசமயம், தனி நபர் பயன்பாட்டிற்கு வழங்கும் நோக்கில் நெக்ஸான் அடிப்படையிலான மின்சார காரை டாடா விற்பனைச் செய்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

டாடா நிறுவனத்தின் குறைந்த விலை மின்சார காரை வாங்கிய கோவா அரசு... இந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா?

டாடாவின் டிகோர் மின்சார கார் 140 கிமீ மற்றும் 213 கிமீ ஆகிய இரு விதமான ரேஞ்ஜ்களில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. வாடிக்கையாளர்களின் தேவையைத் தொடர்ந்து இந்த இரு விதமான தேர்வுகளை டாடா வழங்க ஆரம்பித்திருக்கின்றது. இதனைக் காட்டிலும் அதிக ரேஞ்ஜ் வழங்கும் மின்சார காராக நெக்ஸான் இவி இருக்கின்றது.

டாடா நிறுவனத்தின் குறைந்த விலை மின்சார காரை வாங்கிய கோவா அரசு... இந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா?

டாடா நெக்ஸான் இவி மின்சார கார் ஒரு முழுமையான சார்ஜில் 312 கிமீ ரேஞ்ஜை வழங்கும். டிகோர் இவி காரை அண்மையில்தான் அப்டேடட் வெர்சனாக டாடா அறிமுகப்படுத்தியது. இதில், 21.5 kWh திறன் பேட்டரி தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது.

டாடா நிறுவனத்தின் குறைந்த விலை மின்சார காரை வாங்கிய கோவா அரசு... இந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா?

இந்த பேட்டரியே 41 பிஎச்பி திறனை வெளிப்படுத்தக்கூடிய வகையில் மின் மோட்டாருக்கு மின் சக்தியை வழங்குகின்றது. இந்த ஆற்றல் சிங்கிள்-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழியாக முன் சக்கரங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இக்காரில் சிறப்பு டிரைவ் மோட்களாக ட்ரைவ் மற்றும் ஸ்போர்ட் என இரு விதமான மோட்கள் வழங்கப்படுகின்றன.

டாடா நிறுவனத்தின் குறைந்த விலை மின்சார காரை வாங்கிய கோவா அரசு... இந்த காரின் விலை எவ்ளோ தெரியுமா?

ஒன்று ரேஞ்ஜை அதிகரித்து வழங்கும் வகையில் குறைந்த வேகத்திலும், மற்றொன்று அதிக வேகத்தில் இயங்க செய்ய உதவும். அதிக வேகத்தில் இயங்கும் குறைந்த ரேஞ்ஜை டிகோர் இவி வழங்கும். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துகொள்ள ஏசி மற்றும் டிசி என இரு விதமான சார்ஜிங் பாயிண்டுகளையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Tata Delivers Tigor EV Cars To Goa's Department Of New & Renewable Energy. Read In Tamil.
Story first published: Monday, February 1, 2021, 18:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X