விற்பனையில் வெற்றி நடைபோடும் Tata-வின் தயாரிப்புகள்... இவ்ளோ பாதுகாப்பான காரா இருந்தா யாருதான் வாங்காம இருப்பா

Tata Motors நிறுவனத்தின் கார்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விளைவாக கடந்த மாதத்தில் பல மடங்கு விற்பனை வளர்ச்சியை நிறுவனம் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே காணலாம், வாங்க.

விற்பனையில் வெற்றி நடைபோடும் Tata-வின் தயாரிப்புகள்... இவ்ளோ பாதுகாப்பான காரா இருந்தா யாருதான் வாங்காம இருப்பா!!

Tata Motors (டாடா மோட்டார்ஸ்) நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என இந்தியர்கள் மத்தியில் எப்போதுமே தனித்துவமான வரவேற்பு நிலவி வருகின்றது. இந்த வரவேற்பு கடந்த சில மாதங்களாக சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இதன் விளைவாக கடந்த காலங்களைக் காட்டிலும் டாடாவின் தயாரிப்புகள் அதிகளவில் விற்பனையாகத் தொடங்கியிருக்கின்றன.

விற்பனையில் வெற்றி நடைபோடும் Tata-வின் தயாரிப்புகள்... இவ்ளோ பாதுகாப்பான காரா இருந்தா யாருதான் வாங்காம இருப்பா!!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்டு மாத விற்பனை நிலவரம் பற்றிய தகவலே தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவலின்படி டாடா மோட்டார்ஸ் மிக சிறப்பான வளர்ச்சியைப் பெற்றிருப்பது தெரிய வந்திருக்கின்றது. அதாவது, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தைக் காட்டிலும் நடப்பாண்டு ஆகஸ்டு மாதத்தில் நிறுவனத்தின் தயாரிப்புகள் 51 சதவீதம் அதிக விற்பனையைப் பெற்றிருக்கின்றன.

விற்பனையில் வெற்றி நடைபோடும் Tata-வின் தயாரிப்புகள்... இவ்ளோ பாதுகாப்பான காரா இருந்தா யாருதான் வாங்காம இருப்பா!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் உள் நாட்டு சந்தையில் மட்டும் 28,017 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த 2020 ஆகஸ்டில் வெறும் 18,583 யூனிட்டுகள் விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இது மாபெரும் விற்பனை வளர்ச்சியாகும்.

விற்பனையில் வெற்றி நடைபோடும் Tata-வின் தயாரிப்புகள்... இவ்ளோ பாதுகாப்பான காரா இருந்தா யாருதான் வாங்காம இருப்பா!!

அதேவேலையில் நிறுவனத்தின் சந்தை பங்கும் (market share) கணிசமாக வளர்ந்திருக்கின்றது. தற்போதைய மார்கெட் ஷேர் 11.4 சதவீதமாக காட்சியளிக்கின்றது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இது 8.2 சதவீதமாக மட்டுமே இருந்தது. இந்த நிலையிலேயே தற்போது இது 3.2 சதவீதம் வரை உயர்ந்திருக்கின்றது.

விற்பனையில் வெற்றி நடைபோடும் Tata-வின் தயாரிப்புகள்... இவ்ளோ பாதுகாப்பான காரா இருந்தா யாருதான் வாங்காம இருப்பா!!

டாடா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என இந்தியர்கள் மத்தியில் எப்போது தனித்துவமான வரவேற்பு நிலவி வருகின்றது. இதற்கு நிறுவனம் சமீப காலமாக அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட காரை உருவாக்கி வருவதும், கவர்ச்சியான தோற்றத்தை தனது தயாரிப்புகளுக்கும் பயன்படுத்தி வருவதுமே முக்கிய காரணமாகும்.

விற்பனையில் வெற்றி நடைபோடும் Tata-வின் தயாரிப்புகள்... இவ்ளோ பாதுகாப்பான காரா இருந்தா யாருதான் வாங்காம இருப்பா!!

நிறுவனம் தற்போது தனது இம்பேக்ட் டிசைன் 2.0 யுக்தியைப் பயன்படுத்தி வாகனங்களைத் தயாரிக்கத் தொடங்கியிருக்கின்றது. ஆகையால், சமீப காலமாக நிறுவனத்தின்கீழ் விற்பனைக்கு வரும் வாகனங்கள் கவர்ச்சியான தோற்றத்திற்கு சற்றும் குறைவில்லாத வாகனங்களாக களமிறங்கி வருகின்றன.

விற்பனையில் வெற்றி நடைபோடும் Tata-வின் தயாரிப்புகள்... இவ்ளோ பாதுகாப்பான காரா இருந்தா யாருதான் வாங்காம இருப்பா!!

இதற்கு மிக சிறந்த உதாரணங்களாக அல்ட்ராஸ், ஹாரியர், சஃபாரி மற்றும் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் பஞ்ச் உள்ளிட்ட கார் மாடல்கள் இருக்கின்றன. இவை அதிக கவர்ச்சியான கார் மாடல்கள் மட்டுமில்லைங்க. மிக அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார்களும்கூட.

விற்பனையில் வெற்றி நடைபோடும் Tata-வின் தயாரிப்புகள்... இவ்ளோ பாதுகாப்பான காரா இருந்தா யாருதான் வாங்காம இருப்பா!!

குறிப்பாக, நிறுவனத்தின் நெக்ஸான் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் என்ற பாதுகாப்பு தர ரேட்டிங்களைப் பெற்றிருக்கின்றன. இதேபோல் டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார்களும் அதிக பாதுகாப்பான தயாரிப்புகளாக இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. தொடர்ந்து, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே போன்ற நவீன கால சிறப்பு இணைப்பு அம்சங்களுடன் டாடா கார்கள் விற்பனைக்கு வருகின்றன.

விற்பனையில் வெற்றி நடைபோடும் Tata-வின் தயாரிப்புகள்... இவ்ளோ பாதுகாப்பான காரா இருந்தா யாருதான் வாங்காம இருப்பா!!

இதுமாதிரியான பல மடங்கு சிறப்பு அம்சங்களும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் காராக டாடா பஞ்ச் (Tata Punch) இருக்கின்றது. இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். இந்த காரை மிக மிக விரைவில் டாடா இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதனை 1.2 லிட்டர் ரெவ்ட்ரான் பெட்ரோல் எஞ்ஜினில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

விற்பனையில் வெற்றி நடைபோடும் Tata-வின் தயாரிப்புகள்... இவ்ளோ பாதுகாப்பான காரா இருந்தா யாருதான் வாங்காம இருப்பா!!

இதுமாதிரியான தரமான நடவடிக்கையில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்ற காரணத்தினாலேயே கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது இந்தியாவில் இக்காருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இதன் விளைவாக 2020 ஆகஸ்டு மாதத்தைக் காட்டிலும் 2021 ஆகஸ்டில் 51 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது.

விற்பனையில் வெற்றி நடைபோடும் Tata-வின் தயாரிப்புகள்... இவ்ளோ பாதுகாப்பான காரா இருந்தா யாருதான் வாங்காம இருப்பா!!

இந்த விற்பனை வளர்ச்சியின் காரணமாக நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் இந்நிறுவனம் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கின்றது. Maruti Suzuki (மாருதி சுசுகி) மற்றும் Hyundai (ஹூண்டாய்) கார்களுக்கு அடுத்தபடியான இடத்தை டாடா மோட்டார்ஸ் பிடித்திருக்கின்றது.

Most Read Articles

English summary
Tata gets 51 percent sales growth in 2021 august
Story first published: Wednesday, September 1, 2021, 18:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X