ஹெரியர் கமோ எடிசனின் விற்பனையை நிறுத்தியது டாடா மோட்டார்ஸ்!! தீபாவளிக்கு பெரிய திட்டமா போடுதோ?

பண்டிகை காலம் துவங்கவுள்ள தற்போதைய நிலையில் டாடா ஹெரியரின் கமோ எடிசனின் விற்பனை இந்தியாவில் நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹெரியர் கமோ எடிசனின் விற்பனையை நிறுத்தியது டாடா மோட்டார்ஸ்!! தீபாவளிக்கு பெரிய திட்டமா போடுதோ?

நம் நாட்டு சந்தையில் 2020 நவம்பரில் ஹெரியர் கமோ எடிசனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. எக்ஸ்டி, எக்ஸ்டி+. எக்ஸ்.இசட், எக்ஸ்.இசட்.ஏ, எக்ஸ்.இசட்+ மற்றும் எக்ஸ்.இசட்.ஏ+ என்ற ஹெரியரின் ஆறு ட்ரிம்களிலும் விற்பனைக்கு கிடைத்துவந்த கமோ எடிசனின் விலைகள் வழக்கமான ட்ரிம்களை காட்டிலும் ரூ.30,000 அளவில் அதிகமாக இருந்தன.

ஹெரியர் கமோ எடிசனின் விற்பனையை நிறுத்தியது டாடா மோட்டார்ஸ்!! தீபாவளிக்கு பெரிய திட்டமா போடுதோ?

ஹெரியர் கமோ எடிசனின் மிக முக்கிய சிறம்பம்சமே அதன் ஆலிவ் பச்சை நிற பெயிண்ட் தான். இந்த பச்சை நிறம் கிட்டத்தட்ட இராணுவத்தின் பச்சை நிறத்திற்கு இணையானதாக இருந்தது. ஸ்டாண்டர்ட் ஹெரியரில் இருந்து வேறுப்பட்டு தெரிவதற்காக இந்த ஸ்பெஷல் எடிசனை சுற்றிலும் ஆங்காங்கே ‘கமோ' லோகோக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

ஹெரியர் கமோ எடிசனின் விற்பனையை நிறுத்தியது டாடா மோட்டார்ஸ்!! தீபாவளிக்கு பெரிய திட்டமா போடுதோ?

‘கமோ' என்பதற்கு மறைப்பு என்று பொருள் ஆகும். ஹெரியர் கமோ எடிசனின் உட்புற கேபின் வெளிப்புறத்திற்கு ஏற்ப பச்சை நிற தையல்களுடன் முற்றிலுமாக கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட இதே தோற்றத்திலான கேபின் தான் இதற்கு பின் அறிமுகப்படுத்த ஹெரியர் டார்க் எடிசனிலும் வழங்கப்பட்டுள்ளது.

ஹெரியர் கமோ எடிசனின் விற்பனையை நிறுத்தியது டாடா மோட்டார்ஸ்!! தீபாவளிக்கு பெரிய திட்டமா போடுதோ?

மேலும் இந்த ஸ்பெஷல் எடிசன்களில் 18-இன்ச் கருப்பு-நிற அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. கமோ எடிசனின் வெளியேற்றத்தால், தற்போதைக்கு ஹெரியர் எஸ்யூவி கார் க்ரே, சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு (டார்க் எடிசன்) நிறத்தேர்வுகளில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது.

ஹெரியர் கமோ எடிசனின் விற்பனையை நிறுத்தியது டாடா மோட்டார்ஸ்!! தீபாவளிக்கு பெரிய திட்டமா போடுதோ?

பிரத்யேகமான ஆலிவ் பச்சை நிற பெயிண்ட்டை தவிர்த்து, கமோ எடிசன் ஆனது வழக்கமான ஹெரியர் கார்களில் இருந்து வித்தியாசப்படும் வகையில், சில காஸ்மெட்டிக் மேம்பாடுகளை கொண்டிருந்தது. இதில் பளபளப்பான கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட ஹெட்லேம்ப்கள், முன்பக்க க்ரில் மற்றும் பக்கவாட்டு அடிப்பாகங்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன.

ஹெரியர் கமோ எடிசனின் விற்பனையை நிறுத்தியது டாடா மோட்டார்ஸ்!! தீபாவளிக்கு பெரிய திட்டமா போடுதோ?

பின்பக்கத்தில் கண்ணாடிக்கு கீழே பின்கதவில் கருப்பு நிற ஸ்ட்ரிப் இந்த ஸ்பெஷல் எடிசன் தனித்து தெரிவதற்காக வழங்கப்பட்டது. ஸ்டாண்டர்ட் ஹெரியரின் உட்புறத்தில் டேஸ்போர்டு ஆனது ஃபாக்ஸ் மரப்பலகை உள்ளீடுகளுடன் வழங்கப்படுகிறது. ஆனால் கமோ எடிசனில் ‘ப்ளாக் ஸ்டோன் மேட்ரிக்ஸ்'-இல் கொடுக்கப்பட்டது.

ஹெரியர் கமோ எடிசனின் விற்பனையை நிறுத்தியது டாடா மோட்டார்ஸ்!! தீபாவளிக்கு பெரிய திட்டமா போடுதோ?

இது போதாது என்போர்க்களுக்காக, கமோ ஸ்டீல்த் மற்றும் கமோ ஸ்டீல்த்+ என்ற ஆக்ஸஸரீ தொகுப்புகளையும் டாடா மோட்டார்ஸ் வழங்கி வந்தது. இவற்றிற்கான கூடுதல் விலைகள் முறையே ரூ.27,000 மற்றும் ரூ.50,000 என நிர்ணயிக்கப்பட்டன. இந்த ஆக்ஸஸரீ தொகுப்புகளினால் கிடைக்கக்கூடிய ஸ்பெஷலான அம்சங்களாக, 3-அம்பு வடிவிலான கமோ கிராஃபிக்ஸ், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள், பக்கவாட்டு படிக்கட்டு மற்றும் பொனெட்டில் ‘HARRIER' எழுத்துகள் உள்ளிட்டவை அடங்கின.

ஹெரியர் கமோ எடிசனின் விற்பனையை நிறுத்தியது டாடா மோட்டார்ஸ்!! தீபாவளிக்கு பெரிய திட்டமா போடுதோ?

அத்துடன் உட்புற கேபினிற்கான ஸ்கஃப் தட்டுகள், சன் ஷேட்கள், பின் இருக்கை அமைப்பு, சறுக்கலை தவிர்க்கும் தரைப்பாய்கள் மற்றும் முப்பரிமாண தரைப்பாய்களும் வழங்கப்பட்டு வந்தன. மற்றப்படி தொழிற்நுட்ப அம்சங்களில் மற்ற ஹெரியர் வேரியண்ட்களுடன் ஒப்பிடுகையில், கமோ எடிசன் பெரியதாக வேறுப்படவில்லை.

ஹெரியர் கமோ எடிசனின் விற்பனையை நிறுத்தியது டாடா மோட்டார்ஸ்!! தீபாவளிக்கு பெரிய திட்டமா போடுதோ?

ஹெரியர் எஸ்யூவி மாடலில் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே உடன் இணைக்கக்கூடிய 8.8 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பனோராமிக் சன்ரூஃப், ஜேபிஎல் நிறுவனத்தின் 9-ஸ்பீக்கர் செட்அப், 6-வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் ஆட்டோமேட்டிக் எல்இடி பிரோஜெக்டர் ஹெட்லைட் உள்ளிட்டவற்றை டாடா நிறுவனம் வழங்கி வருகிறது.

ஹெரியர் கமோ எடிசனின் விற்பனையை நிறுத்தியது டாடா மோட்டார்ஸ்!! தீபாவளிக்கு பெரிய திட்டமா போடுதோ?

பயணிகளின் பாதுகாப்பிற்கு டாடா கார்களில் பெரியதாக எந்த குறையும் இருக்காது என்பது நமக்கு நன்றாகவே தெரியும். ஹெரியரில், 6 காற்றுப்பைகள், ஆஃப்-ரோடு ஏபிஎஸ், மலை தொடர்களில் ஏற்வதற்கான கண்ட்ரோல், ரிவர்ஸில் பார்க்கிங் செய்வதற்கு உதவியாக கேமிரா, டிராக்‌ஷன் கண்ட்ரோல், கார்னரிங் ஸ்டெபிளிட்டி மற்றும் இஎஸ்பி உள்ளிட்டவை பாதுகாப்பு அம்சங்களாக வழங்கப்படுகின்றன.

ஹெரியர் கமோ எடிசனின் விற்பனையை நிறுத்தியது டாடா மோட்டார்ஸ்!! தீபாவளிக்கு பெரிய திட்டமா போடுதோ?

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு கமோ, டார்க் எடிசன்கள் உள்பட இந்த எஸ்யூவி மாடலில் 2.0 லிட்டர் க்றையோடெக் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 168 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக கொடுக்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
Tata Harrier Camo Edition Discontinued in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X