ஹெரியரில் புதிய மாற்றத்தை கொண்டுவந்த டாடா மோட்டார்ஸ்!! இனி இந்த நிறத்தில் கிடைக்காது

சந்தையில் உள்ள தேவையை பொறுத்து டாடா ஹெரியரில் வழங்கப்பட்டு வந்த ஸ்பார்கிள் கோகோ நிறத்தேர்வு ஹெரியரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை இன்னமும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஹெரியரில் புதிய மாற்றத்தை கொண்டுவந்த டாடா மோட்டார்ஸ்!! இனி இந்த நிறத்தில் கிடைக்காது

இந்த நிறத்தேர்வு நீக்கப்பட்டுள்ளதினால் ஹெரியர் காமோ க்ரீன், டெலிஸ்டோ க்ரே, கலிப்ஸோ சிவப்பு, ஆர்கஸ் வெள்ளை, அட்லஸ் கருப்பு (டார்க் எடிசன்) என்ற நிறத்தேர்வுகளில் மட்டுமே ஹெரியர் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஹெரியரில் புதிய மாற்றத்தை கொண்டுவந்த டாடா மோட்டார்ஸ்!! இனி இந்த நிறத்தில் கிடைக்காது

இதில் கலிப்ஸோ சிவப்பு மற்றும் ஆர்கஸ் வெள்ளை நிறத்தேர்வுகளில் ஹெரியரை இரட்டை-நிற தேர்விலும் பெறலாம். ஒற்றை நிறத்தை காட்டிலும் இரட்டை நிறத்தேர்வின் விலை கிட்டத்தட்ட ரூ.20 ஆயிரம் அதிகமாக உள்ளது.

ஹெரியரில் புதிய மாற்றத்தை கொண்டுவந்த டாடா மோட்டார்ஸ்!! இனி இந்த நிறத்தில் கிடைக்காது

தற்போது இவற்றில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஸ்பார்கிள் கோகோ நிறத்தேர்வு ஹெரியருக்கு 2020ஆம் ஆண்டிற்கான அப்டேட்களுள் ஒரு பகுதியாக வழங்கப்பட்டது. பெரிய அளவில் கண்ணை கவரும் நிறமாக இல்லாமல், சாதாரண நிறத்தில் ஹெரியரை பெற நினைத்தோருக்கு ஸ்பார்கிள் கோகோ நிறத்தேர்வு சரியான தேர்வாக இருந்தது.

ஹெரியரில் புதிய மாற்றத்தை கொண்டுவந்த டாடா மோட்டார்ஸ்!! இனி இந்த நிறத்தில் கிடைக்காது

இருப்பினும் காலிப்ஸோ சிவப்பு மற்றும் அட்லஸ் கருப்பு நிறத்தேர்வுகளை போல் வாடிக்கையாளர்கள் கவராததன் காரணத்தினாலேயே இந்த நிறத்தேர்வை டாடா நிறுத்தி இருக்கும். அதுமட்டுமில்லாமல் பளிச்சிடாத நிறத்தேர்வு ஹெரியர் போன்ற எஸ்யூவி மாடலுக்கு ஏற்றதாக இல்லை.

ஹெரியரில் புதிய மாற்றத்தை கொண்டுவந்த டாடா மோட்டார்ஸ்!! இனி இந்த நிறத்தில் கிடைக்காது

இவ்வாறு தயாரிப்பு வாகனங்களில் எத்தகைய வேரியண்ட்கள், நிறத்தேர்வுகள் அதிகளவில் விற்பனையாகுகின்றன என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப அப்டேட்களை கொண்டுவருவதில் டாடா நிறுவனம் முன்னிலையில் உள்ளது.

ஹெரியரில் புதிய மாற்றத்தை கொண்டுவந்த டாடா மோட்டார்ஸ்!! இனி இந்த நிறத்தில் கிடைக்காது

ஏனெனில் பழைய வேரியண்ட்கள், நிறத்தேர்வுகளை நீக்கும் அதேசமயம் புதிய வேரியண்ட்களையும், புதிய வசதிகளையும் மற்றும் புதிய எடிசன்களையும் கார்களில் அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் முயற்சிக்கக்கூடியது. கடைசியாக டியாகோ ஹேட்ச்பேக் காரில் புதியதாக அரிஸோனா நீல நிறத்தை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது.

ஹெரியரில் புதிய மாற்றத்தை கொண்டுவந்த டாடா மோட்டார்ஸ்!! இனி இந்த நிறத்தில் கிடைக்காது

சஃபாரியின் ராயல் நீல நிறத்துடன் ஒப்பிடுகையில் இந்த அரிஸோனா நீலம் சற்று அடர்த்தி மிகுந்ததாக உள்ளது. இந்த புதிய நிறத்தேர்வு கொண்டுவரப்பட்டதினால் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த டெக்டானிக் நீலம் மற்றும் விக்டரி மஞ்சள் நிறங்கள் நிறுத்தப்பட்டன.

ஹெரியரில் புதிய மாற்றத்தை கொண்டுவந்த டாடா மோட்டார்ஸ்!! இனி இந்த நிறத்தில் கிடைக்காது

ஹெரியரில் வழங்குவதை போன்று பெரும்பான்மையான கார்களில் டார்க் எடிசனை கொண்டுவர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் கார்களில் கொண்டுவரப்பட உள்ள டார்க் எடிசன்கள் ஏற்கனவே டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டன.

ஹெரியரில் புதிய மாற்றத்தை கொண்டுவந்த டாடா மோட்டார்ஸ்!! இனி இந்த நிறத்தில் கிடைக்காது

ஹெரியர் டார்க் எடிசனின் வெற்றியே இந்த புதிய டார்க் எடிசன்களின் வருகைக்கு காரணமாகும். ஹெரியர் டார்க் எடிசன் 2019 செப்டம்பரில் ரூ.16.76 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

Most Read Articles
English summary
Tata Harrier Colour Options Updated, Sparkle Cocoa Discontinued.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X