Harrier காருக்கு Safari மாடலின் Daytona Grey நிறத்தேர்வு!! புதியதாக வழங்கியுள்ள Tata Motors
Safari மாடலில் வழங்கப்படும் Daytona Grey நிறத்தேர்வு Tata Harrier-க்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களின் கவனத்தை தொடர்ந்து பெறவும் அவ்வப்போது கார்களின் அப்டேட்களை கொண்டுவரும் நிறுவனங்களுள் Tata Motors-உம் ஒன்று. இதனால் தான் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக Tata விளங்குகிறது.

இந்த வகையில் Harrier காரின் நிறத்தேர்வுகளில் இந்த நிறுவனம் தொடர்ச்சியாக மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இதன்படி தற்போது இந்த பிரீமியம் எஸ்யூவிக்கு Daytona Grey நிறத்தேர்வு புதியதாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறத்தேர்வு Tata பிராண்டில் இருந்து கடைசியாக அறிமுகமான Safari-யில் இருந்து பெறப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக இதற்குமுன் Harrier-இல் வழங்கப்பட்டு வந்த Telesto Grey நிறத்தேர்வு நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளது. புதிய நிறத்தேர்வான Daytona Grey-வையும் சேர்த்து மொத்தம் ஐந்து விதமான நிறத்தேர்வுகளில் Tata Harrier விற்பனைக்கு கிடைக்கிறது.

மீதி நான்கு நிறங்களாக, Calypso Red, Orcus White, Camo Green (Camo Edition) மற்றும் Oberon Black (Dark Edition) உள்ளிட்டவை அடங்குகின்றன. இதில் முதல் இரு நிறத்தேர்வுகளில் Harrier-இன் மேற்கூரையை கருப்பு நிறத்தில் பெற முடியும்.

முன்பு வழங்கப்பட்ட Telesto Grey நிறத்துடன் ஒப்பிடுகையில், Safari-இன் Daytona Grey-வில் சற்று இளம் க்ரே நிறம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறான lighter shade க்ரே நிறத்திற்கு Harrier காரின் அடர் கருப்பு நிற 17-இன்ச் அலாய் சக்கரங்கள் மிகவும் எடுப்பாக இருக்கும்.

Harrier எஸ்யூவி மாடலின் கமோ மற்றும் டார்க் எடிசன்களில் மட்டுமே கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது புதியதாக வழங்கப்பட்டுள்ள Daytona Grey நிறத்திலும் கருப்பு நிறத்தில் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவைகளில் இதன் அலாய் சக்கரங்கள் வேறு நிறத்தில் வழங்கப்படுகின்றன.

XE, XM, XMA, XT, XT+, XTA+, XZ, XZA, XZ+ மற்றும் XZA+ என்ற 10 விதமான வேரியண்ட்களில் Tata Harrier மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்திலும் பனோராமிக் சன்ரூஃப், ஜேபிஎல் 9-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 8.8 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.

இதில் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பை ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைத்து கொள்ள முடியும். அத்துடன் இந்த பிரீமியம் தர எஸ்யூவி காரில் ஓட்டுனர் இருக்கையை தேவைக்கு ஏற்றாற்போல் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளவும் இயலும். இவற்றுடன் என்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்வதற்கு பொத்தான் உடன் சாவியில்லா நுழைவு மற்றும் தானியங்கி ஹெட்லேம்ப்கள் & வைபர்கள் உள்ளிட்டவையும் Harrier-இல் வழங்கப்படுகின்றன.

Tata கார்களை பொறுத்தவரையில் பாதுகாப்பு அம்சத்தில் எந்த குறையும் இருக்காது என கூறுவர். அந்த வகையில் Harrier-இல் 6 காற்றுப்பைகள், EBD உடன் ABS, ISOFIX குழந்தை இருக்கைக்கான கொக்கி, electronic stability control, ரிவர்ஸில் பார்க்கிங் செய்வதற்கு உதவியாக சென்சார்கள் & கேமிரா மற்றும் hill descent control போன்ற பாதுகாப்பு தொழிற்நுட்பங்கள் பொருத்தப்படுகின்றன.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த எஸ்யூவி வாகனத்தில் 2.0 லிட்டர் kryotec டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் உடன் வழங்கப்படுகிறது.

Tata Harrier எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.14.40 லட்சத்தில் இருந்து ரூ.21.09 லட்சம் வரையில் உள்ளன. விற்பனையில் இந்த Tata காருக்கு Hyundai Creta, Kia Seltos, MG Hector, சமீபத்தில் வெளியிடப்பட்ட Mahindra XUV700 மற்றும் Skoda Kushaq உள்ளிட்டவை போட்டியாக உள்ளன. Volkswagen பிராண்டில் இருந்து விரைவில் Taigun மாடலும் வெளிவரவுள்ளது.


Click it and Unblock the Notifications








