சீனாவிற்கு எதிரான மனநிலை... உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு கொடுக்கும் இந்தியர்கள்... டாடா காட்டில் அடைமழை!

சீனாவிற்கு எதிரான மனநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டாடா நிறுவனத்தின் காட்டில் அடைமழை பெய்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சீனாவிற்கு எதிரான மனநிலை... உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு கொடுக்கும் இந்தியர்கள்... டாடா காட்டில் அடைமழை!

இந்திய சந்தையில் டாடா ஹாரியர் கார் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த சில மாதங்களிலேயே எம்ஜி ஹெக்டர் கார் மூலம் டாடா ஹாரியர் காருக்கு மிக கடுமையான போட்டி உருவானது. எம்ஜி ஹெக்டர் கார் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

சீனாவிற்கு எதிரான மனநிலை... உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு கொடுக்கும் இந்தியர்கள்... டாடா காட்டில் அடைமழை!

இந்தியாவில் எம்ஜி களமிறக்கிய முதல் கார் ஹெக்டர்தான். எம்ஜி ஹெக்டர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு டாடா ஹாரியர் காரின் விற்பனை வீழ்ச்சியடைய தொடங்கியது. ஹாரியர்தான் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது, ஹெக்டர் அதற்கு பிறகு 6 மாதங்கள் கழித்துதான் விற்பனைக்கு வந்தது என்றபோதிலும் 2019ம் ஆண்டு எம்ஜி நிறுவனத்திடம் டாடா தோல்வியடைந்தது.

சீனாவிற்கு எதிரான மனநிலை... உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு கொடுக்கும் இந்தியர்கள்... டாடா காட்டில் அடைமழை!

703 யூனிட்கள் வித்தியாசம் என்ற அளவில் எம்ஜி நிறுவனத்திடம் டாடா தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டிலோ நிலைமை இன்னும் மோசமடைந்தது. இந்த ஆண்டில் டாடா நிறுவனம் 14 ஆயிரம் ஹாரியர் கார்களை மட்டுமே விற்பனை செய்தது. ஆனால் எம்ஜி நிறுவனமோ 26 ஆயிரம் ஹெக்டர் கார்களை விற்பனை செய்து அசத்தியது.

சீனாவிற்கு எதிரான மனநிலை... உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு கொடுக்கும் இந்தியர்கள்... டாடா காட்டில் அடைமழை!

ஆனால் நடப்பு 2021ம் ஆண்டில் டாடா நிறுவனம் கம்பீரமாக 'கம்பேக்' கொடுத்துள்ளது. இதற்கான விதை கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்திலேயே விதைக்கப்பட்டு விட்டது. 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்டேட் செய்யப்பட்ட ஹாரியர் காரை டாடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆனால் இந்தியா லாக்டவுனுக்கு சென்று விட்டதால், இதற்கான பலன் உடனடியாக கிடைக்கவில்லை.

சீனாவிற்கு எதிரான மனநிலை... உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு கொடுக்கும் இந்தியர்கள்... டாடா காட்டில் அடைமழை!

லாக்டவுனுக்கு பிறகுதான் டாடா ஹாரியர் காரின் விற்பனை அதிகரிக்க தொடங்கியது. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு இந்தியா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியபோது, பயணிகள் கார்களுக்கான தேவை வெகுவாக உயர்ந்தது. அதிலும் குறிப்பாக சீனாவிற்கு எதிரான மனநிலை மற்றும் இந்திய பொருட்களை வாங்க வேண்டும் என்ற மனநிலை ஆகியவை டாடா நிறுவனத்திற்கு உதவி செய்தன.

சீனாவிற்கு எதிரான மனநிலை... உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு கொடுக்கும் இந்தியர்கள்... டாடா காட்டில் அடைமழை!

டாடா நிறுவனம் முதலில் ஹாரியர் காரை ஒவ்வொரு மாதமும் மூன்று இலக்கங்களில் மட்டுமே விற்பனை செய்து வந்தது. ஆனால் இது விரைவில் 4 இலக்கங்களாக மாறியது. இதற்கிடையே நடப்பாண்டு பிப்ரவரி மாதம் புதிய டாடா சஃபாரி காரின் உற்பத்தி தொடங்கியது. அதற்கு பிறகு டாடா நிறுவனம் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது.

சீனாவிற்கு எதிரான மனநிலை... உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு கொடுக்கும் இந்தியர்கள்... டாடா காட்டில் அடைமழை!

2021ம் ஆண்டில் இந்த செக்மெண்ட்டில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தை விட டாடா நிறுவனம் சிறப்பாக இயங்கி கொண்டுள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து டாடா ஹாரியர் + சஃபாரி கார்களின் விற்பனை, எம்ஜி ஹெக்டர் + ஹெக்டர் ப்ளஸ் கார்களின் விற்பனையை விட அதிகமாக இருந்து வருகிறது. நடப்பாண்டு ஏப்ரல் மாதம் டாடா நிறுவனம் 1,712 ஹாரியர் கார்களையும், 1,514 சஃபாரி கார்களையும் விற்பனை செய்தது.

சீனாவிற்கு எதிரான மனநிலை... உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு கொடுக்கும் இந்தியர்கள்... டாடா காட்டில் அடைமழை!

ஒட்டுமொத்தமாக பார்த்தால் 3,226 கார்கள். ஆனால் அந்த மாதத்தில் எம்ஜி நிறுவனம் 2,147 ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால் 1,079 கார்கள் வித்தியாசம் வருகிறது. அல்லது 52.26 சதவீதம் வித்தியாசம் ஆகும். அதற்கு பிறகு இந்த ட்ரெண்ட் தொடர்ந்து கொண்டே வருகிறது.

சீனாவிற்கு எதிரான மனநிலை... உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு கொடுக்கும் இந்தியர்கள்... டாடா காட்டில் அடைமழை!

அதிலும் குறிப்பாக நடப்பாண்டு ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது. நடப்பாண்டு அக்டோபர் மாதம் 3,097 ஹாரியர் கார்களும், 1,735 சஃபாரி கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக பார்த்தால் 4,832 கார்கள் ஆகும்.

சீனாவிற்கு எதிரான மனநிலை... உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு கொடுக்கும் இந்தியர்கள்... டாடா காட்டில் அடைமழை!

ஆனால் இதே மாதத்தில் எம்ஜி நிறுவனம் விற்பனை செய்த ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் கார்களின் விற்பனை எண்ணிக்கை வெறும் 2,478 மட்டுமே. இந்த வகையில் பார்த்தால் 2,354 கார்கள் வித்தியாசம் என்ற அளவில் டாடா நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. அத்துடன் டாடா ஹாரியர் கார் தனது அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த மாதமும் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனாவிற்கு எதிரான மனநிலை... உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு கொடுக்கும் இந்தியர்கள்... டாடா காட்டில் அடைமழை!

2019ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து டாடா ஹாரியர் காரின் விற்பனை எண்ணிக்கை ஒரு மாதத்தில் 3,000 யூனிட்களை கடந்திருப்பது இதுவே முதல் முறை. டாடா நிறுவனம் சமீபத்தில் பன்ச் என்ற புத்தம் புதிய மைக்ரோ எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது. இதுதவிர இன்னும் வரும் காலங்களில் நிறைய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Tata harrier mid size suv registers highest ever monthly sales check details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X