Just In
- 18 min ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 42 min ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 2 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 2 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
இன்று தேசத்தின் 72-வது குடியரசு தினம்.. டெல்லியில் கோலாகலம்..மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நிமிர்ந்த தோற்றம், மாடர்ன் தொழிற்நுட்பங்கள்... டாடாவின் ஸ்டைலான மைக்ரோ-எஸ்யூவி!! மீண்டும் சோதனையில்
தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் டாடா எச்பிஎக்ஸ் கார் சோதனை ஓட்டத்தின்போது கேமிராவின் கண்களில் சிக்கியுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா மோட்டார்ஸ் இந்த 2021 ஜனவரி மாதத்திற்காக முன்று அறிமுகங்களை தயார்படுத்தி வருகிறது. அதில் ஹெரியரை அடிப்படையாக கொண்ட 7-இருக்கை கிராவிட்டாஸ் மற்றும் அல்ட்ராஸின் ட்யுல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன் உடன் டர்போசார்ஜ்டு வெர்சன் உள்ளிட்டவை அடங்குகின்றன.

மூன்றாவது மாடலாக சஃபாரி என்ற பெயரில் விற்பனை நிறுத்தப்பட்ட ஹெக்ஸா மீண்டும் கொண்டுவரப்படுகிறது. இவற்றை தொடர்ந்து டாடா நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக வெளிவரவுள்ள முக்கிய மாடல், எச்பிஎக்ஸ் கான்செப்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட மைக்ரோ எஸ்யூவி ஆகும்.

இந்தியாவில் இருந்து செயல்பட்டுவரும் டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் எச்பிஎக்ஸ் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியது. இதன் விற்பனை மைக்ரோ எஸ்யூவி கார் ஹார்ன்பில் என்ற பெயரில் வெளிவரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு தொடர்ச்சியாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுவரும் இந்த டாடா கார் தற்போது மீண்டும் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்யூவி காராக இருப்பினும் எச்பிஎக்ஸ் அதன் நிமிர்த்த தோற்றத்தினால் உண்மையில் சாலையில் கவனத்தை பெறும் வகையில் உள்ளது என்பதை மோட்டார்பீம் செய்திதளத்தின் மூலமாக தற்போது கிடைத்துள்ள ஸ்பை படங்கள் மீண்டும் நமக்கு உணர்த்துகின்றன.

பிளவுப்பட்ட ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர், எல்இடி டிஆர்எல்கள், நேர்த்தியான முன்பக்க க்ரில் மற்றும் அகலமான காற்று ஏற்பான் உடன் டாடா எச்பிஎக்ஸ்-இன் முன்பக்கம் இம்பேக்ட் டிசைன் 2.0 தத்துவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஹெரியரை பெரிய அளவில் ஒத்து காணப்படுகிறது.

இந்த காரின் டாப் வேரியண்ட்களின் முன்பக்கத்தில் முரட்டுத்தனமான தோற்றத்திற்காக சறுக்கு தட்டும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுடன் 15 இன்ச்சில் அலாய் சக்கரங்கள், சதுர வடிவில் சக்கர வளைவுகள், Y-வடிவிலான எல்இடி டெயில்லேம்ப்கள், மேற்கூரை தண்டவாளங்களையும் இந்த காரின் வெளிப்புறத்தில் எதிர்பார்க்கலாம்.

அல்ட்ராஸிற்கு அடுத்து டாடாவின் ஆல்ஃபா ப்ளாட்ஃபாரத்தில் வெளிவரும் இரண்டாவது மாடலான எச்பிஎக்ஸ் உட்புறத்தில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், துணை-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பல செயல்பாடுகளை கொண்ட தாழ்வான ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவைகளை பெற்றுவரலாம்.

டாடாவின் லைன்அப்பில் நெக்ஸானிற்கு கீழே நிலைநிறுத்தப்படவுள்ள எச்பிஎக்ஸ் மைக்ரோ-எஸ்யூவியில் டாடா டியாகோ மற்றும் அல்ட்ராஸில் வழங்கப்படுகின்ற 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படலாம். மஹிந்திரா கேயூவி நெக்ஸ்ட், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ, ரெனால்ட் க்விட் உள்ளிட்டவற்றை விற்பனையில் எதிர்க்கவுள்ள இந்த டாடா மைக்ரோ எஸ்யூவி காரின் விலைகள் ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.