அறிமுகத்திற்கு தயாராகிவரும் டாடாவின் மலிவான எஸ்யூவி கார்!! மீண்டும் சோதனை ஓட்டம்!

இந்திய சந்தைக்கான புதிய மினி-எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. எச்பிஎக்ஸ் என்ற பெயரில் தற்சமயம் அழைக்கப்பட்டு வரும் இந்த கார் தற்போது மீண்டும் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிடைத்துள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிமுகத்திற்கு தயாராகிவரும் டாடாவின் மலிவான எஸ்யூவி கார்!! மீண்டும் சோதனை ஓட்டம்!

டாடா எச்பிஎக்ஸ் எஸ்யூவி கான்செப்ட் மாடல் முதன்முதலாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த டாடா கார் பல்வேறு விதமான இந்திய சாலைகளில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

அறிமுகத்திற்கு தயாராகிவரும் டாடாவின் மலிவான எஸ்யூவி கார்!! மீண்டும் சோதனை ஓட்டம்!

இந்த வகையில் தற்போது மீண்டும் சாலை சோதனையில் உட்படுத்தப்பட்ட எச்பிஎக்ஸ் காரின் ஸ்பை படங்கள் மோட்டார் ஆக்டேன் செய்தி தளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன. இந்த படங்களில் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டு இருந்தாலும் கார் கிட்டத்தட்ட அனைத்து தயாரிப்பு பணிகளையும் நிறைவு செய்த நிலையில் காட்சி தருகிறது.

அறிமுகத்திற்கு தயாராகிவரும் டாடாவின் மலிவான எஸ்யூவி கார்!! மீண்டும் சோதனை ஓட்டம்!

மேலும், இந்த படங்களில் கார் டைமண்ட் டிசைனில் அலாய் சக்கரங்களை கொண்டிருப்பதை பார்க்கலாம். இதில் இருந்து இந்த சோதனை கார் எச்பிஎக்ஸ் மாடலின் டாப் வேரியண்ட்டாக இருக்கலாம். இந்த காரில் ஹெட்லைட் விளக்குகள் பம்பருக்கு மேலே வழங்கப்பட்டுள்ளன.

அறிமுகத்திற்கு தயாராகிவரும் டாடாவின் மலிவான எஸ்யூவி கார்!! மீண்டும் சோதனை ஓட்டம்!

அதற்கு மேலே டிஆர்எல்களை காண முடிகிறது. வெளிப்புற மாடர்ன் தோற்றத்திற்கு ஏற்ப காரின் உட்புறம், கண்ட்ரோல்களுடன் 3-ஸ்போக் தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரம், ஸ்மார்ட் போன் இணைப்புடன் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை பெற்றுவரவுள்ளது.

அறிமுகத்திற்கு தயாராகிவரும் டாடாவின் மலிவான எஸ்யூவி கார்!! மீண்டும் சோதனை ஓட்டம்!

புதிய எச்பிஎக்ஸ் மினி-எஸ்யூவி காரின் டேஸ்போர்டு கருப்பு நிறத்தில், சில்வர் தொடுதல்களோடு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். செவ்வக வடிவிலான ஏசி துளைகள் டேஸ்போர்டின் மையத்திலும், இரு பக்கவாட்டு பகுதிகளிலும் வழங்கப்பட உள்ளன.

அறிமுகத்திற்கு தயாராகிவரும் டாடாவின் மலிவான எஸ்யூவி கார்!! மீண்டும் சோதனை ஓட்டம்!

டாடாவின் இம்பெக்ட் 2.0 டிசைன் தத்துவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு வரும் எச்பிஎக்ஸ் கார் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் மேனுவல் காராக கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படவுள்ளது. அதேநேரம் விலைமிக்க வேரியண்ட்களில் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனும் கூடுதல் தேர்வாக வழங்கப்படலாம்.

அறிமுகத்திற்கு தயாராகிவரும் டாடாவின் மலிவான எஸ்யூவி கார்!! மீண்டும் சோதனை ஓட்டம்!

இந்த மினி-எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 83 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.

அறிமுகத்திற்கு தயாராகிவரும் டாடாவின் மலிவான எஸ்யூவி கார்!! மீண்டும் சோதனை ஓட்டம்!

இந்திய வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் கார்களின் அறிமுகங்களுள் டாடா எச்பிஎக்ஸ்-இன் அறிமுகமும் ஒன்று. இந்த டாடா காருக்கு விற்பனையில் மஹிந்திரா கேயூவி100 மற்றும் மாருதி சுஸுகி இக்னிஸ் போட்டியாக விளங்கவுள்ளன.

Most Read Articles
English summary
Tata Tiago Victory Yellow Colour Discontinued, Low Sales Could Be The Reason.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X