செம்மையான தோற்றத்தில் உருவாகும் டாடாவின் மைக்ரோ-எஸ்யூவி கார்!! அறிமுகம் எப்போது தாங்க?

முழுவதும் தயாரிக்கப்பட்ட டாடா எச்பிஎக்ஸ் கார் தொழிற்சாலைக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

செம்மையான தோற்றத்தில் உருவாகும் டாடாவின் மைக்ரோ-எஸ்யூவி கார்!! அறிமுகம் எப்போது தாங்க?

இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டாடா மோட்டார்ஸ் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்திய சஃபாரி காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

செம்மையான தோற்றத்தில் உருவாகும் டாடாவின் மைக்ரோ-எஸ்யூவி கார்!! அறிமுகம் எப்போது தாங்க?

அதனை தொடர்ந்து எச்பிஎக்ஸ் கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மைக்ரோ எஸ்யூவி காரை சந்தையில் அறிமுகப்படுத்த இந்த நிறுவனம் தயாராகி வருகிறது. ஆனால் தற்போது தீவிரமாக பரவி வரும் இரண்டாவது அலையால் இந்த டாடா காரின் அறிமுகம் தாமதமாகும் என்றே தெரிகிறது.

செம்மையான தோற்றத்தில் உருவாகும் டாடாவின் மைக்ரோ-எஸ்யூவி கார்!! அறிமுகம் எப்போது தாங்க?

டாடா மோட்டார்ஸ் மட்டுமின்றி ஹூண்டாய், மஹிந்திரா, மாருதி சுஸுகி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் அறிமுகங்களும் தள்ளிப்போய் உள்ளன. நமக்கு தெரிந்தவரையில் டாடா எச்பிஎக்ஸ் (தற்காலிக பெயரே) காரின் அறிமுகம் நடப்பு ஆண்டு இறுதியில் பண்டிகை காலத்தின் போது தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம்மையான தோற்றத்தில் உருவாகும் டாடாவின் மைக்ரோ-எஸ்யூவி கார்!! அறிமுகம் எப்போது தாங்க?

இந்த நிலையில் ஹார்ன்பில் என்ற பெயரில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த மைக்ரோ-எஸ்யூவி காரின் ஸ்பை படங்கள் முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் மோட்டார்பீம் செய்திதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

செம்மையான தோற்றத்தில் உருவாகும் டாடாவின் மைக்ரோ-எஸ்யூவி கார்!! அறிமுகம் எப்போது தாங்க?

இந்த படங்களில் டாடாவின் தொழிற்சாலையில் இருந்து காட்சித்தரும் காரின் சில வெளிப்பக்க பாகங்கள் மறைப்பினால் மறைக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம். இதனால் எச்பிஎக்ஸ் மைக்ரோ-எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளை டாடா நிறுவனம் துவங்கியிருக்கலாம்.

செம்மையான தோற்றத்தில் உருவாகும் டாடாவின் மைக்ரோ-எஸ்யூவி கார்!! அறிமுகம் எப்போது தாங்க?

அல்லது துவங்குவதற்கு கிட்டத்தட்ட அனைத்து விதங்களிலும் தயாராக இருக்கலாம். எனவே எச்பிஎக்ஸ் காரின் தயாரிப்பு பணிகள் துவங்கப்பட்டன என்கிற அறிவிப்பை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து வரும் வாரங்களில் எதிர்பார்க்கலாம்.

செம்மையான தோற்றத்தில் உருவாகும் டாடாவின் மைக்ரோ-எஸ்யூவி கார்!! அறிமுகம் எப்போது தாங்க?

விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி இக்னிஸ் மற்றும் மஹிந்திரா கேயூவி நெக்ஸ்ட் கார்களுக்கு போட்டியாக கொண்டுவரப்படும் இந்த டாடா காருக்கு உண்மையான போட்டி மாடல் ஹூண்டாய் நிறுவனத்தில் ஏ.எக்ஸ்1 என்ற பெயரில் உருவாகி கொண்டிருக்கிறது.

செம்மையான தோற்றத்தில் உருவாகும் டாடாவின் மைக்ரோ-எஸ்யூவி கார்!! அறிமுகம் எப்போது தாங்க?

டாடாவின் நவீன இம்பேக்ட் வடிவமைப்பு தத்துவத்தின்படி உருவாக்கப்படும் டாடா ஹார்ன்பில் காரில் பிளவுப்பட்ட வடிவில் ஹெட்லேம்ப், அகலமான மைய காற்று ஏற்பான், வட்ட வடிவிலான ஃபாக் விளக்குகள் உள்ளிட்டவை முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளன.

செம்மையான தோற்றத்தில் உருவாகும் டாடாவின் மைக்ரோ-எஸ்யூவி கார்!! அறிமுகம் எப்போது தாங்க?

இந்த மைக்ரோ எஸ்யூவி காரின் தோற்றத்தில் மற்ற சிறப்பம்சங்களாக இரட்டை-நிற பெயிண்ட், மேற்கூரை தண்டவாளங்கள், இரட்டை-நிற அலாய் சக்கரங்கள், தடிமனான சக்கர மேற்வளைவுகள், பக்கவாட்டில் கருப்பு நிற பேனல்கள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப்களை கூறலாம்.

செம்மையான தோற்றத்தில் உருவாகும் டாடாவின் மைக்ரோ-எஸ்யூவி கார்!! அறிமுகம் எப்போது தாங்க?

உட்புறம் கிட்டத்தட்ட டாடா டியாகோ மற்றும் அல்ட்ராஸ் கார்களை போன்றே இருக்கும். ஹார்ன்பில்லின் டாப் வேரியண்ட்களில் மட்டும் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி உடன் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
English summary
Production Version Of Tata HBX Spied Inside Plant, Launch Nears.
Story first published: Thursday, May 27, 2021, 22:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X