விலைமிக்க டாடா எச்பிஎக்ஸ் காரின் உள்ளே என்னென்ன எதிர்பார்க்கலாம்? வெளிக்காட்டும் ஸ்பை படங்கள் இதோ...

டாடா எச்பிஎக்ஸ் காரின் டாப் வேரியண்ட் ஒன்று முழுவதும் மறைப்புகளுடன் பொது சாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை பற்றி இனி தொடர்ந்து பார்ப்போம்.

விலைமிக்க டாடா எச்பிஎக்ஸ் காரின் உள்ளே என்னென்ன எதிர்பார்க்கலாம்? வெளிக்காட்டும் ஸ்பை படங்கள் இதோ...

தற்சமயம் இந்திய வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் கார்களுள் ஒன்று டாடா எச்பிஎக்ஸ். 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இதன் கான்செப்ட் மாடல் நிகழ்ச்சியில் பலரது கவனத்தை பெற்றது.

விலைமிக்க டாடா எச்பிஎக்ஸ் காரின் உள்ளே என்னென்ன எதிர்பார்க்கலாம்? வெளிக்காட்டும் ஸ்பை படங்கள் இதோ...

இதனால் டாடா மோட்டார்ஸின் இந்த மைக்ரோ-எஸ்யூவி காரின் அறிமுகம் எப்போதோ எதிர்பார்ப்புக்கு உள்ளாகிவிட்டது. இதற்கிடையில் அவ்வப்போது இந்த காரின் சோதனை ஸ்பை படங்கள் நமக்கு கிடைத்த வண்ணம் உள்ளன.

விலைமிக்க டாடா எச்பிஎக்ஸ் காரின் உள்ளே என்னென்ன எதிர்பார்க்கலாம்? வெளிக்காட்டும் ஸ்பை படங்கள் இதோ...

இந்த வகையில் தற்போது மோட்டர் ஆக்டேன் என்ற செய்திதளம் மூலம் எச்பிஎக்ஸ் காரின் உட்புறத்தை வெளிக்காட்டும் படங்கள் கிடைத்துள்ளன. இதற்கு முன்பும் இந்த காரின் உட்புற ஸ்பை படங்கள் வெளியாகி இருந்தன.

விலைமிக்க டாடா எச்பிஎக்ஸ் காரின் உள்ளே என்னென்ன எதிர்பார்க்கலாம்? வெளிக்காட்டும் ஸ்பை படங்கள் இதோ...

ஆனால் அது எச்பிஎக்ஸ் காரின் மத்திய வேரியண்ட்டாக இருந்தது. ஆனால் இது எச்பிஎக்ஸ்-இன் விலைமிக்க டாப் வேரியண்ட்டாக இருக்க வேண்டும். இதன் உட்புற கேபின் கிட்டத்தட்ட ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் மாடலை ஒத்து காணப்படுகிறது.

விலைமிக்க டாடா எச்பிஎக்ஸ் காரின் உள்ளே என்னென்ன எதிர்பார்க்கலாம்? வெளிக்காட்டும் ஸ்பை படங்கள் இதோ...

ஸ்டேரிங் சக்கரம் டாடா அல்ட்ராஸ், டியாகோ மற்றும் நெக்ஸான் கார்களை நினைவுப்படுத்துகிறது. அதேபோல் குறை-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலை அல்ட்ராஸிலும், பெரிய 7-இன்ச் தொடுத்திரை நெக்ஸான் & அல்ட்ராஸிலும் பார்க்க முடியும்.

விலைமிக்க டாடா எச்பிஎக்ஸ் காரின் உள்ளே என்னென்ன எதிர்பார்க்கலாம்? வெளிக்காட்டும் ஸ்பை படங்கள் இதோ...

இந்த 7-இன்ச் யூனிட் ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் டாடா மோட்டாரின் ஐரா இணைப்பு கார் தொழிற்நுட்பத்திற்கு இணக்கமானதாக இருக்கும். பளபளப்பான கருப்பு நிறத்தில் உள்ள ஏசி துளைகளை சுற்றிலும் உள்ள பிளாஸ்டிக் பேனல்கள், அதற்கு மேலே உள்ள தொடுத்திரைக்கு மிகவும் ஏற்றதாக உள்ளன.

விலைமிக்க டாடா எச்பிஎக்ஸ் காரின் உள்ளே என்னென்ன எதிர்பார்க்கலாம்? வெளிக்காட்டும் ஸ்பை படங்கள் இதோ...

இந்த படங்களை சற்று உற்று பார்த்தோமேயானால், ஏ-பில்லரில் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளதை அறியலாம். ஒரு ஸ்பை படத்தில் காரின் மைய கன்சோலில் கிளைமேட் கண்ட்ரோல் பொத்தான்கள், யுஎஸ்பி சார்ஜிங் மற்றும் 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

விலைமிக்க டாடா எச்பிஎக்ஸ் காரின் உள்ளே என்னென்ன எதிர்பார்க்கலாம்? வெளிக்காட்டும் ஸ்பை படங்கள் இதோ...

இந்த சோதனை எச்பிஎக்ஸ் கார் 5-ஸ்பீடு கியர்பாக்ஸை கொண்டதாக உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த சோதனை எச்பிஎக்ஸ் கார் முந்தைய ஸ்பை படங்களில் பார்த்ததை காட்டிலும் பெரிய அளவில் இந்த ஸ்பை படங்களில் காட்சியளிக்கிறது.

விலைமிக்க டாடா எச்பிஎக்ஸ் காரின் உள்ளே என்னென்ன எதிர்பார்க்கலாம்? வெளிக்காட்டும் ஸ்பை படங்கள் இதோ...

இந்த ஸ்பை படங்கள் இந்த டாடா மைக்ரோ-எஸ்யூவி காரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், தானியங்கி ஹெட்லேம்ப்கள், தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் என்ஜினை ஸ்டார்ட்/ஸ்டாப் செய்வதற்கு பொத்தான் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

விலைமிக்க டாடா எச்பிஎக்ஸ் காரின் உள்ளே என்னென்ன எதிர்பார்க்கலாம்? வெளிக்காட்டும் ஸ்பை படங்கள் இதோ...

டாடா மோட்டார்ஸின் லேட்டஸ்ட் ஆல்ஃபா-ஆர்க் ப்ளாட்ஃபாரத்தில் எச்பிஎக்ஸ் கார் கொண்டுவரப்படுகிறது. இதே ப்ளாட்ஃபாரத்தை பயன்படுத்தி தான் அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரும் தயாரிக்கப்படுகிறது. இதனால் அல்ட்ராஸில் வழங்கப்படும் என்ஜின் தேர்வுகளை இந்த காரிலும் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Tata HBX Top-Spec Trim Interior Spotted, Gets 7 Inch Touchscreen.
Story first published: Friday, April 16, 2021, 12:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X