ஒன்றாக சோதனையில் டாடாவின் எதிர்கால எஸ்யூவி கார்கள்!! எது முதலில் விற்பனைக்கு வருமோ!

டாடா மோட்டார்ஸின் புதிய அறிமுகங்களான ஹெக்ஸா 4x4 மற்றும் எச்பிஎக்ஸ் மைக்ரோ-எஸ்யூவி கார்களின் ஸ்பை படங்கள் சோதனை ஓட்டத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒன்றாக சோதனையில் டாடாவின் எதிர்கால எஸ்யூவி கார்கள்!! எது முதலில் விற்பனைக்கு வருமோ!

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஹெக்ஸா பிஎஸ்6 எடிசன் காரின் பெயரை அடுத்த சில நாட்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திற்கு கொண்டுவந்தது.

ஒன்றாக சோதனையில் டாடாவின் எதிர்கால எஸ்யூவி கார்கள்!! எது முதலில் விற்பனைக்கு வருமோ!

பிஎஸ்6 தரத்திற்கு அப்கிரேட் செய்யப்படாததினால் ஹெக்ஸாவின் விற்பனை நிறுத்தப்பட்டது. இருப்பினும் ஆட்டோ எக்ஸ்போவில் ஹெக்ஸா பிஎஸ்6 தரத்தில் மீண்டும் கொண்டுவரப்படும் என டாடா நிறுவனம் தெரிவித்திருந்தது. இதன் அறிமுகம் மிகவும் விரைவாகவே நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தடையாக அமைந்துவிட்டது.

ஒன்றாக சோதனையில் டாடாவின் எதிர்கால எஸ்யூவி கார்கள்!! எது முதலில் விற்பனைக்கு வருமோ!

இருப்பினும் இதன் சோதனை ஓட்டங்கள் எந்தவொரு தடையும் இல்லாமல் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தற்போது டாடாவின் அடுத்த அறிமுக மாடல்களான அல்ட்ராஸ் டர்போ மற்றும் எச்பிஎக்ஸ் சப்காம்பெக்ட் யுவி கார்களுடன் ஹெக்ஸா பிஎஸ்6 கார் சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்றாக சோதனையில் டாடாவின் எதிர்கால எஸ்யூவி கார்கள்!! எது முதலில் விற்பனைக்கு வருமோ!

ராகுல் ஆட்டோஸ்பை என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இது தொடர்பான ஸ்பை படங்களில் அல்ட்ராஸ் டர்போ மற்றும் எச்பிஎக்ஸ் கார்கள் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஹெக்ஸா மட்டும் எந்தவொரு மறைப்பாலும் மறைக்கப்படவில்லை.

ஒன்றாக சோதனையில் டாடாவின் எதிர்கால எஸ்யூவி கார்கள்!! எது முதலில் விற்பனைக்கு வருமோ!

முந்தைய சோதனை ஓட்டங்களில் நமக்கு காட்சிதந்தது ஹெக்ஸாவின் விலை குறைவான எக்ஸ்எம்ஏ வேரியண்ட் ஆகும். அவற்றில் 17 இன்ச்சில் இரும்பு ரிம்கள் பொருத்தப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் நிறுத்தப்பட்ட ஹெக்ஸாவின் சஃபாரி எடிசன் காட்சி தந்துள்ளது.

ஒன்றாக சோதனையில் டாடாவின் எதிர்கால எஸ்யூவி கார்கள்!! எது முதலில் விற்பனைக்கு வருமோ!

இதனால் இந்த ஹெக்ஸா சோதனை காரில் 17 இன்ச்சில் 5-ஸ்போக் அலாய் சக்கரங்களும், பின்பக்கத்தில் சஃபாரி பேட்ஜ் உடன் 4X4 முத்திரையும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹெக்ஸாவின் முந்தைய சோதனை ஓட்ட ஸ்பை படங்கள் எதிலும் பின்பக்கத்தில் டெயில்லேம்ப்களை இணைக்கும் க்ரோம்-ஐ பார்க்க முடியவில்லை.

ஒன்றாக சோதனையில் டாடாவின் எதிர்கால எஸ்யூவி கார்கள்!! எது முதலில் விற்பனைக்கு வருமோ!

ஆனால் அதனை இந்த ஸ்பை படத்தில் தெளிவாக பார்க்க முடிகிறது. இருப்பினும் சறுக்கலான A-பில்லர் மற்றும் நிமிர்ந்த B,C மற்றும் D பில்லர்களுடன் காரின் தோற்றம் பெரும்பான்மையாக அதன் பிஎஸ்4 வெர்சனைதான் ஒத்து காணப்படுகிறது. காரின் உட்புறத்தை எந்த படமும் காட்டவில்லை.

ஒன்றாக சோதனையில் டாடாவின் எதிர்கால எஸ்யூவி கார்கள்!! எது முதலில் விற்பனைக்கு வருமோ!

ஹெக்ஸா காரில் மிக பெரிய அப்கிரேட் அதன் 2.2 லிட்டர் வரிகோர் டீசல் என்ஜினில்தான் கொண்டுவரப்படுகிறது. அதாவது இந்த பிஎஸ்6 தரத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டு வழங்கப்படவுள்ளது. பிஎஸ்4 வெர்சனில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 154 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருந்தது.

ஒன்றாக சோதனையில் டாடாவின் எதிர்கால எஸ்யூவி கார்கள்!! எது முதலில் விற்பனைக்கு வருமோ!

பிஎஸ்6 அப்கிரேடாக இந்த வெளியீட்டு ஆற்றல் அளவுகளை டாடா உயர்த்தியிருக்க வாய்ப்புள்ளது. ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உள்ளிட்ட தேர்வுகளும், 4x4 ட்ரைவ்ட்ரெயின் குறிப்பிட்ட சில ட்ரிம்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது.

ஒன்றாக சோதனையில் டாடாவின் எதிர்கால எஸ்யூவி கார்கள்!! எது முதலில் விற்பனைக்கு வருமோ!

டாடா நிறுவனம் சஃபாரி பெயர்பலகையை ஹெரியரின் 7-இருக்கை வெர்சனான கிராவிட்டாஸ் எஸ்யூவி காருக்கு சமீபத்தில் வழங்கியுள்ளது. இதனால் சஃபாரி பெயர் ஹெக்ஸா பிஎஸ்6 காரில் பயன்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles

English summary
Tata Hexa 4×4 Spied Along With HBX – Upcoming Biggest And Smallest Tata SUVs
Story first published: Thursday, January 7, 2021, 12:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X