இப்படி திடீர்னு விலைய ஏத்தினா என்ன செய்யுறது?.. Tataவின் அதிக பாதுகாப்பான கார் மாடலின் விலை உயர்வு!

டாடா நிறுவனம் அதன் அதிக பாதுகாப்பு திறன்கள் கொண்ட கார் மாடலின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இப்படி திடீர்னு விலைய ஏத்தினா செய்யுறது?.. Tataவின் அதிக பாதுகாப்பான கார் மாடலின் விலை உயர்வு!

டாடா நிறுவனத்தின் மிக அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட கார் மாடல்களில் ஒன்றாக நெக்ஸான் இருக்கின்றது. இந்த கார் தற்போது இந்திய சந்தையில் மின்சார வெர்ஷனிலும் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதில், உள்ளெரிப்பு எந்திரம் (எரிபொருள் எஞ்ஜின்) கொண்ட கார் மாடலின் விலையையே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது உயர்த்தியுள்ளது.

இப்படி திடீர்னு விலைய ஏத்தினா செய்யுறது?.. Tataவின் அதிக பாதுகாப்பான கார் மாடலின் விலை உயர்வு!

ரூ. 11 ஆயிரம் வரை விலை உயர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா நெக்ஸான் எஸ்யூவி 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உயர்நிலை வேரியண்டின் விலை ரூ. 13 லட்சத்து 35 ஆயிரம் ஆகும். இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இப்படி திடீர்னு விலைய ஏத்தினா செய்யுறது?.. Tataவின் அதிக பாதுகாப்பான கார் மாடலின் விலை உயர்வு!

தேர்வைப் பொருத்து விலை உயர்வு செய்யப்பட்டிருக்கின்றது. ஆயிரம் ரூபாய் தொடங்கி 11 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்வு செய்யப்பட்டிருக்கின்றது. டாடா நெக்ஸான் ஒட்டுமொத்தமாக 12 தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், ஒரு சில தேர்வுகளின் விலை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இப்படி திடீர்னு விலைய ஏத்தினா செய்யுறது?.. Tataவின் அதிக பாதுகாப்பான கார் மாடலின் விலை உயர்வு!

பெட்ரோல் - டீசல் எக்ஸ்இசட்-ப்ளஸ் மேனுவல் வேரியண்டின் விலை இன்னும் மாற்றப்படவில்லை. இதேபோல் பெட்ரோல் எக்ஸ்இசட்-ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ-ப்ளஸ் டார்க் எடிசன்கள் மற்றும் சன்ரூஃப் வசதிக் கொண்ட எக்ஸ்எம் (எஸ்) ட்ரிம்மின் விலையும் உயர்த்தப்படாமல் இருக்கின்றன. இவற்றை தவிர பிற அனைத்து தேர்வுகளின் விலையும் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இப்படி திடீர்னு விலைய ஏத்தினா செய்யுறது?.. Tataவின் அதிக பாதுகாப்பான கார் மாடலின் விலை உயர்வு!

விலை உயர்வு பற்றிய தகவலை தெளிவாக பட்டியலாகக் கீழே காணலாம்:

Nexon Petrol New Price Old Price Difference
XE ₹7,29,900 ₹7,28,900 ₹1,000
XM ₹8,29,900 ₹8,27,400 ₹2,500
XM (S) ₹8,86,900 ₹8,81,400 ₹5,500
XZ ₹9,36,900 ₹9,27,400 ₹9,500
XZ+ ₹9,99,900 ₹9,99,900 0
XZ+ DT ₹10,19,900 ₹10,19,400 ₹500
XZ+ Dark ₹10,39,900 ₹10,39,900 0
XZ+ S ₹10,69,900 ₹10,67,400 ₹2,500
XZ+ DT (S) ₹10,86,900 ₹10,84,400 ₹2,500
XZ+ (O) ₹10,99,900 ₹10,97,400 ₹2,500
XZ+ DT (O) ₹11,16,900 ₹11,14,400 ₹2,500
XZ+ (O) Dark ₹11,34,900 ₹11,29,900 ₹5,000
XMA ₹8,94,900 ₹8,89,400 ₹5,500
XMA (S) ₹9,51,900 ₹9,41,400 ₹10,500
XZA+ ₹10,64,900 ₹10,64,400 ₹500
XZA+ DT ₹10,84,900 ₹10,81,400 ₹3,500
XZA+ Dark ₹10,99,900 ₹10,99,900 0
XZ+ S ₹11,34,900 ₹11,29,400 ₹5,500
XZA+ DT (S) ₹11,51,900 ₹11,46,400 ₹5,500
XZA+ (O) ₹11,64,900 ₹11,59,400 ₹5,500
XZA+ DT (O) ₹11,81,900 ₹11,76,400 ₹5,500
இப்படி திடீர்னு விலைய ஏத்தினா செய்யுறது?.. Tataவின் அதிக பாதுகாப்பான கார் மாடலின் விலை உயர்வு!
Nexon Diesel New Price Old Price Difference
XE NA ₹8,58,900 -
XM ₹9,59,900 ₹9,51,400 ₹8,500
XM (S) ₹9,99,900 ₹9,99,900 0
XZ NA ₹10,60,400 -
XZ+ ₹11,35,400 ₹11,35,400 0
XZ+ DT ₹11,54,900 ₹11,51,400 ₹2,500
XZ+ Dark ₹11,74,900 ₹11,73,900 ₹1,000
XZ+ S ₹12,04,900 ₹12,00,400 ₹4,500
XZ+ DT (S) ₹12,21,900 ₹12,17,400 ₹4,500
XZ+ (O) ₹12,34,900 ₹12,30,400 ₹4,500
XZ+ DT (O) ₹12,51,900 ₹12,47,400 ₹4,500
XZ+ (O) Dark ₹12,69,900 ₹12,63,900 ₹6,000
XMA NA ₹10,13,400 -
XMA (S) NA ₹10,63,900 -
XZA+ ₹11,99,900 ₹11,97,400 ₹2,500
XZA+ DT ₹12,19,900 ₹11,14,400 ₹5,500
XZA+ Dark ₹12,34,900 ₹12,33,900 ₹1,000
XZ+ S NA ₹12,62,400 -
XZA+ DT (S) ₹12,86,900 ₹12,79,400 ₹7,500
XZA+ (O) ₹12,99,900 ₹12,92,400 ₹7,500
XZA+ DT (O) ₹13,16,900 ₹13,09,400 ₹7,500
XZA+ (O) Dark ₹13,34,900 ₹13,23,900 ₹11,000
இப்படி திடீர்னு விலைய ஏத்தினா செய்யுறது?.. Tataவின் அதிக பாதுகாப்பான கார் மாடலின் விலை உயர்வு!

டாடா நெக்ஸான் மிகவும் அதிக பாதுகாப்பு திறன்கள் கொண்ட காராகும். பாதுகாப்பு குறித்து குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்தி மோதல் ஆய்வில் (க்ராஷ் டெஸ்டில்) இக்கார் ஐந்திற்கு ஐந்து நட்சத்திரங்கள் ரேட்டிங்கைப் பெற்றததைத் தொடர்ந்து இந்தியாவின் மிகவும் அதிக பாதுகாப்பான காரக நெக்ஸான் மாறியது.

இப்படி திடீர்னு விலைய ஏத்தினா செய்யுறது?.. Tataவின் அதிக பாதுகாப்பான கார் மாடலின் விலை உயர்வு!

இதன் விளைவாகவும், கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலும் இந்தியாவில் இக்காருக்கு தற்போது நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இதன் விளைவாக டாடா நெக்ஸான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாடா கார் என்ற பெருமையைப் பெற்றிருக்கின்றது.

இப்படி திடீர்னு விலைய ஏத்தினா செய்யுறது?.. Tataவின் அதிக பாதுகாப்பான கார் மாடலின் விலை உயர்வு!

நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் இக்கார் ஒட்டுமொத்தமாக 33,926 யூனிட்டுகள் வரை விற்பனையாகி அசத்தியது. 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் இது 43.8 சதவீதவிற்பனை வளர்ச்சியாகும். 2020 அக்டோபர் மாதத்தில் டாடா நெக்ஸான் 23,600 யூனிட்டுகள்வரை மட்டுமே விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இப்படி திடீர்னு விலைய ஏத்தினா செய்யுறது?.. Tataவின் அதிக பாதுகாப்பான கார் மாடலின் விலை உயர்வு!

டாடா நெக்ஸான் எஸ்யூவி காரில் 110 எச்பி திறனை வெளியேற்றக் கூடிய 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜின் தேர்வும், 120 எச்பி திறனை வெளியற்றக் கூடிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. இரு எஞ்ஜினிலும், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகிறது.

இப்படி திடீர்னு விலைய ஏத்தினா செய்யுறது?.. Tataவின் அதிக பாதுகாப்பான கார் மாடலின் விலை உயர்வு!

டாடா நெக்ஸான் ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இந்த பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு இக்கார் கடும் போட்டியை வழங்கி வருகின்றது. அந்தவகையில், ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா (Maruti Suzuki Vitara Brezza), டொயோட்டா அர்பன் க்ரூஸர் (Toyota Urban Cruiser), மஹிந்திரா எக்ஸ்யூவி 300 (Mahindra XUV300), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக இது விற்பனையில் இருக்கின்றது.

Most Read Articles

English summary
Tata hiked 5 star safety rated nexon price up to rs 11000
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X