சத்தமே இல்லாமல், டியாகோவில் புதிய மலிவான வேரியண்ட்டை இணைத்தது டாடா!! விலை எவ்வளவு தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் டியாகோ ஹேட்ச்பேக் காரில் புதிய எக்ஸ்டி(O) வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய டியாகோ காரை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சத்தமே இல்லாமல், டியாகோவில் புதிய மலிவான வேரியண்ட்டை இணைத்தது டாடா!! விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் மலிவான ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்றான டாடா டியாகோவின் மலிவான வேரியண்ட்டாக எக்ஸ்.இ-யும், அதற்கு அடுத்த நிலை வேரியண்ட்டாக எக்ஸ்டி-யும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சத்தமே இல்லாமல், டியாகோவில் புதிய மலிவான வேரியண்ட்டை இணைத்தது டாடா!! விலை எவ்வளவு தெரியுமா?

தற்போது இவை இரண்டிற்கும் மத்தியில் தான் இந்த புதிய எக்ஸ்டி(O) கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் இதன் விலை டியாகோவின் ஆரம்ப விலையை காட்டிலும் சற்று அதிகமாக, ரூ.5.48 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சத்தமே இல்லாமல், டியாகோவில் புதிய மலிவான வேரியண்ட்டை இணைத்தது டாடா!! விலை எவ்வளவு தெரியுமா?

ஆனால் அதேநேரம் இந்த விலை டியாகோவின் எக்ஸ்டி வேரியண்ட்டை காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.15,000 குறைவாகும். இதற்கு ஏற்ப சில வசதிகளை இந்த புதிய வேரியண்ட், வழக்கமான எக்ஸ்டி வேரியண்ட்டுடன் ஒப்பிடுகையில் இழந்துள்ளது.

சத்தமே இல்லாமல், டியாகோவில் புதிய மலிவான வேரியண்ட்டை இணைத்தது டாடா!! விலை எவ்வளவு தெரியுமா?

பொதுவாக இறுதியில் (O) என முடியும் வேரியண்ட்கள், ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டை காட்டிலும் சில வசதிகளை கூடுதலாக பெற்றிருக்கும். ஆனால் டியாகோ எக்ஸ்டி(O) வேரியண்ட்டில் அது தலைக்கீழாக உள்ளது.

சத்தமே இல்லாமல், டியாகோவில் புதிய மலிவான வேரியண்ட்டை இணைத்தது டாடா!! விலை எவ்வளவு தெரியுமா?

எக்ஸ்டி வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில் ஆடியோ அமைப்பிற்கான ஹர்மன் 2டின் ஹெட் யூனிட்டை புதிய எக்ஸ்டி(O) வேரியண்ட் பெறவில்லை. இருப்பினும் இந்த வேரியண்ட்டில் ஸ்டேரிங் கண்ட்ரோல்களுடன் 4 ஸ்பீக்கர்கள் கிடைக்கும்.

சத்தமே இல்லாமல், டியாகோவில் புதிய மலிவான வேரியண்ட்டை இணைத்தது டாடா!! விலை எவ்வளவு தெரியுமா?

மற்றப்படி முழு கவர்களுடன் 14 இன்ச்சில் சக்கரங்கள், 12 வோல்ட் பவர் அவுட்லெட், மேனுவல் ஏசி, முன் & பின்பக்கத்தில் பவர் ஜன்னல் கண்ணாடிகள், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள், செண்ட்ரல் லாக்கிங், இரட்டை காற்றுப்பைகள், ஏபிஎஸ் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் என எக்ஸ்டி வேரியண்ட்டில் வழங்கப்படும் சிறப்பம்சங்கள் அனைத்தும், இந்த புதிய வேரியண்ட்டிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

சத்தமே இல்லாமல், டியாகோவில் புதிய மலிவான வேரியண்ட்டை இணைத்தது டாடா!! விலை எவ்வளவு தெரியுமா?

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு வழக்கமான 1.2 லிட்டர், 3-சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தான் தொடரப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 86 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

சத்தமே இல்லாமல், டியாகோவில் புதிய மலிவான வேரியண்ட்டை இணைத்தது டாடா!! விலை எவ்வளவு தெரியுமா?

எக்ஸ்டி-ஆக இருந்தாலும் சரி, புதிய எக்ஸ்டி(O)-ஆக இருந்தாலும் சரி, இரண்டிலும் டிரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தான் வழங்கப்பட்டுள்ளது, ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு டியாகோவில் எக்ஸ்டிஏ வேரியண்ட்டில் இருந்துதான் வழங்கப்படுகிறது.

சத்தமே இல்லாமல், டியாகோவில் புதிய மலிவான வேரியண்ட்டை இணைத்தது டாடா!! விலை எவ்வளவு தெரியுமா?

விற்பனையில் இந்த டாடா ஹேட்ச்பேக் காருக்கு மாருதி சுஸுகி செலிரியோ, வேகன் ஆர், ஹூண்டாய் சாண்ட்ரோ மற்றும் டட்சன் கோ உள்ளிட்டவை போட்டியாக உள்ளன. டாடா டியாகோவின் எக்ஸ்ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.6.96 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles

English summary
Tata introduced a New XT(o) variant for Tiago. Read In Tamil.
Story first published: Tuesday, June 29, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X