"மோதி பாத்துக்கலாம் தேதி சொல்லுங்க"... வீடியோ வெளியிட்டு வம்புக்கு இழுக்கும் டாடா... ஷாக்கான ஹூண்டாய், மாருதி!

ஹூண்டாய் மற்றும் மாருதி சுசுகி நிறுவனங்களை வீடியோ வாயிலாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வம்புக்கு இழுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பாதுகாப்பான தயாரிப்புகளுக்கு பெயர்போன நிறுவனமாக டாடா மாறியிருக்கின்றது. இந்நிறுவனத்தின் பல தயாரிப்புகள் பாதுகாப்புகுறித்த மோதல் பரிசோதனையில் நான்கு அதிகமான நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் உள்ளிட்ட கார் மாடல்கள் சில ஐந்திற்கு ஐந்து என்ற தர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றன.

இதுமட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் தாங்கள் உறுதியானவர்கள் என்பதை நிரூபனம் செய்யும் வகையில், பெரும் மோசமான விபத்துகளில்கூட பயணிகளுக்கு சிறு துளி ஆபத்துகூட இல்லாமல் காப்பாற்றியிருக்கின்றன. இதுபோன்ற நிகழ்வுகளின் காரணமாகவே டாடா நிறுவனத்தின் கார்கள் அதிக பாதுகாப்பானவை என கூறப்படுகின்றது.

இந்தநிலையிலேயே, ஹூண்டாய் மற்றும் மாருதி சுசுகி நிறுவனங்களை டாடா மோட்டார்ஸ் மறைமுகமாக வம்பு இழுக்கக் கூடிய விளம்பர வீடியோவை வெளியிட்டிருக்கின்றது. இது வெளியிட்டிருக்கும் வீடியோவில், இது காதலர் தினம் என்னுடன் மோதலைச் சந்திக்க தேதி கிடைக்குமா என கேட்கும் மாதிரியான வாசகங்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன.

முன்னதாக, ஹே பே-லீனே மற்றும் ஹை 20 என மாருதி சுசுகியின் பலினோ மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 ஆகிய கார்களைக் குறிப்பிடும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து என்னுடன் மோதலைச் சந்திக்க தேதி கிடைக்குமா என அல்ட்ராஸ் கார் கூறுவதைப் போன்று அடுத்தடுத்த வாக்கியங்கள் அவ்வீடியோவில் இடம்பெறுகின்றன.

டாடாவின் இந்த வம்புக்கு இழுக்கும் செயலால் ஹூண்டாய் மற்றும் மாருதி சுசுகி நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளன. இதற்கான பதில் வீடியோவை இரு நிறுவனங்களும் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக, இதேபோன்ற ஒரு வம்புக்கு இழக்கும் டுவிட்டர் பதிவால், மாருதி சுசுகி-டாடா மோட்டார்ஸ் இடையே டுவீட் போர் ஏற்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான மற்றும் அதிகம் விற்பனையாகும் எஸ்-பிரஸ்ஸோ கார் மோதல் பரிசோதனையில் மண்ணைக் கவ்வியதற்கு பின்னரில் இருந்தே இதுமாதிரியான வாக்குவாதங்கள் அதிகம் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றது. டாடாவின் முந்தைய வம்புக்கு இழக்கும் பதிவிற்கு நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களில் நம்பர் 1 விற்பனையாளர்கள் நாங்கள்தான் என மார்தட்டிக் கொண்டது.

இந்த நிலையிலேயே மீண்டும் இந்நிறுவனத்தை வம்புக்கு இழுக்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் வீடியோவை வெளியிட்டிருக்கின்றது. இம்முறை மாருதி சுசுகியுடன் சேர்த்து ஹூண்டாய் நிறுவனத்தையும் தனது வம்புக்கு இழுக்கும் நிறுவனங்களின் பட்டியலில் அது சேர்த்துக் கொண்டிருக்கின்றது.

தனது அல்ட்ராஸ் கார்களின் பக்கம் மக்களைக் கவர்ந்திழுக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய வீடியோவை நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இது ஓர் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் கொண்ட பிரீமியம் ரக ஹேட்ச்பேக் காராகும். இக்கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. தொடர்ந்து, ரூ. 5.69 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

Most Read Articles
English summary
Tata Invites Hyundai & Maruti For 'Crash' Via New Altroz Ad. Read In Tamil.
Story first published: Thursday, February 18, 2021, 14:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X