டாடா மோட்டார்ஸின் வணிக பயன்பாட்டிற்கான எக்ஸ்.ப்ரஸ்-டி எலக்ட்ரிக் கார் - ரூ.9.54 லட்சத்தில் அறிமுகம்!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.9.54 லட்சம் என்ற ஆரம்ப விலையில் எக்ஸ்.ப்ரஸ்-டி (Xpres-T) என்ற பெயரில் எலக்ட்ரிக் கார் ஒன்றினை புதியதாக கமர்ஷியல் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டாடா எலக்ட்ரிக் காரினை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா மோட்டார்ஸின் வணிக பயன்பாட்டிற்கான எக்ஸ்.ப்ரஸ்-டி எலக்ட்ரிக் கார் - ரூ.9.54 லட்சத்தில் அறிமுகம்!!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னால் முடிந்தவற்றை செய்து கொண்டு வருகிறது. இந்த வகையில் சமீபத்தில் டிகோர் இவி என்ற எலக்ட்ரிக் கார் டாடா பிராண்டில் இருந்து வெளிவந்தது.

டாடா மோட்டார்ஸின் வணிக பயன்பாட்டிற்கான எக்ஸ்.ப்ரஸ்-டி எலக்ட்ரிக் கார் - ரூ.9.54 லட்சத்தில் அறிமுகம்!!

அதனை தொடர்ந்து தற்போது எக்ஸ்.ப்ரஸ்-டி என்ற கமர்ஷியல் பயன்பாட்டிற்கான எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் வழக்கமான டிகோர் செடானின் தோற்றத்தில் தான் கிட்டத்தட்ட இந்த கமர்ஷியல் எலக்ட்ரிக் காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டிற்கும் இடையே சிறிய அளவிலான வேறுப்பாடுகளை தான் காண முடிகிறது.

டாடா மோட்டார்ஸின் வணிக பயன்பாட்டிற்கான எக்ஸ்.ப்ரஸ்-டி எலக்ட்ரிக் கார் - ரூ.9.54 லட்சத்தில் அறிமுகம்!!

எக்ஸ்.ப்ரஸ்-டி இவி-யில் மிக முக்கிய அம்சமாக 21.5 kWh, 16.5 kWh என்ற இரு தேர்வுகளில் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய டாடா எலக்ட்ரிக் செடான் காரானது எக்ஸ்எம், எக்ஸ்இசட், எக்ஸ்எம்+ மற்றும் எக்ஸ்இசட்+ என்ற நான்கு விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் இரு வேரியண்ட்களில் 16.5 kWh பேட்டரியும், அடுத்த இரு வேரியண்ட்களில் இதனை காட்டிலும் அளவில் பெரிய பேட்டரியும் வழங்கப்பட உள்ளது.

டாடா மோட்டார்ஸின் வணிக பயன்பாட்டிற்கான எக்ஸ்.ப்ரஸ்-டி எலக்ட்ரிக் கார் - ரூ.9.54 லட்சத்தில் அறிமுகம்!!

இதில் 16.5 kWh பேட்டரியை கொண்ட வேரியண்ட் ஒன்றின் விலை தான் ரூ.9.54 லட்சமாகும். மற்றொன்றின் விலை ரூ.10.04 லட்சம். 21.5 kWh பேட்டரி உடன் கிடைக்கும் மற்ற இரு வேரியண்ட்களின் விலைகள் ரூ.10.14 லட்சம் மற்றும் ரூ.10.64 லட்சமாகும். இதில் 16.5 kWh பேட்டரி 165கிமீ ரேஞ்ச்சையும், 21.5 kWh பேட்டரி 213கிமீ ரேஞ்சையும் வழங்கக்கூடியது என ARAI அமைப்பு சான்றளித்துள்ளது.

இந்த பேட்டரிகளை 0-வில் இருந்து 80% வரையில் சார்ஜ் செய்ய 90 நிமிடங்களில் இருந்து 110 நிமிடங்கள் வரையில் தேவைப்படும் என்கிறது டாடா மோட்டார்ஸ். 15 ஆம்பியர் மின்சார சார்ஜரில் இருந்து விரைவு சார்ஜர் வரையில் ஏதேனும் ஒன்றை சார்ஜ் செய்ய பயன்படுத்தி கொள்ளலாமாம்.

டாடா மோட்டார்ஸின் வணிக பயன்பாட்டிற்கான எக்ஸ்.ப்ரஸ்-டி எலக்ட்ரிக் கார் - ரூ.9.54 லட்சத்தில் அறிமுகம்!!

தோற்றத்தை பொறுத்தவரையில் கமர்ஷியல் பயன்பாட்டிற்கு ஏற்ப வெள்ளை பெயிண்ட் உடன், மின்சார கார் என்பதை வெளிக்காட்டும் வகையில் நீல நிற தொடுதல்கள் காரை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் நீல நிறத்தை உட்புறத்திலும் ஆங்காங்கே பார்க்க முடிகிறது.

உண்மையில் இந்த நீல ஹைலைட்கள் தான் இத்தகைய எலக்ட்ரிக் கார்களை மற்ற எரிபொருள் டாடா கார்களில் இருந்து வேறுப்படுத்தி காட்டுகின்றன. இந்த புதிய கமர்ஷியல் எலக்ட்ரிக் காரின் உட்புறக் கேபின் ஆனது ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வழக்கமான அம்சங்களுடன் ப்ரீமியம் தரத்திலான கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸின் வணிக பயன்பாட்டிற்கான எக்ஸ்.ப்ரஸ்-டி எலக்ட்ரிக் கார் - ரூ.9.54 லட்சத்தில் அறிமுகம்!!

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உடன் இந்த டாடா எலக்ட்ரிக் காரில் இரட்டை காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு தொழிற்நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கூறியதுபோல் எக்ஸ்.ப்ரஸ்-டி வணிக பயன்பாட்டிற்காக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது தனி பயன்பாட்டிற்கு இந்த எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்காது.

வணிக பயன்பாட்டிற்காக என்பது, கார்ப்பிரேஷன், வாடகை கார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு மொத்தமாக கார்கள் விற்பனை செய்வது ஆகும். இவ்வாறு மொத்தமாக அதிக எண்ணிக்கையில் கார்களை வாங்குவதால் அந்த கார்ப்பிரேட் நிறுவனத்திற்கோ அல்லது அரசு சார்ந்த நிறுவனத்திற்கோ சலுகைகள் உடன் தயாரிப்பு நிறுவனம் கார்களை விற்பனை செய்யும்.

டாடா மோட்டார்ஸின் வணிக பயன்பாட்டிற்கான எக்ஸ்.ப்ரஸ்-டி எலக்ட்ரிக் கார் - ரூ.9.54 லட்சத்தில் அறிமுகம்!!

எக்ஸ்.ப்ரஸ்-டி இவி-க்கான ரூ.9.54 லட்சம் என்பதும் FAME மானியம் போக டாடா நிறுவனம் நிர்ணயித்துள்ள ஆரம்ப விலையாகும். பொது பயன்பாட்டிற்கு அல்லது வணிக நோக்கங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் மானியம் தான் இந்த FAME ஆகும்.

இது தவிர்த்து அந்தெந்த மாநில அரசாங்கங்களும் தங்களது மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு என தனித்தனியாக மானியங்கள்/ ஊக்கத்தொகைகளை அறிவித்து வழங்கி வருகின்றன. அவற்றை எல்லாம் சேர்த்து பார்த்தால், எக்ஸ்.ப்ரஸ்-டி இவி-யின் விலை இன்னும் குறையும்.

டாடா மோட்டார்ஸின் வணிக பயன்பாட்டிற்கான எக்ஸ்.ப்ரஸ்-டி எலக்ட்ரிக் கார் - ரூ.9.54 லட்சத்தில் அறிமுகம்!!

இதற்கிடையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான எலக்ட்ரிக் கார் மாடலாக விளங்கும் நெக்ஸான் இவி இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1,000 யூனிட்களுக்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. டாடா நெக்ஸான் இவி-யின் ஆரம்ப விலை ரூ.13.99 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Tata Motors announces commercial launch of the ‘XPRES T EV’ for fleet customers with FAME subsidy pricing.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X