டாடா டியாகோ லிமிடட் எடிசன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும்...

டாடா நிறுவனம் அதன் அதீத பாதுகாப்பு திறனுடை டியாகோ காரை லிமிடெட் எடிசனாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கார் பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

டாடாவின் இந்த அதிக பாதுகாப்பு திறனுடைய கார் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்... ஏன் தெரியுமா?

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், அதன் டியாகோ ஹேட்ச்பேக் காரை லிமிடெட் எடிசனில் விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருந்தன. ஒவ்வொரு நாளும் இதுகுறித்த புதிய தகவல்கள் வெளியாகி வாகன ஆர்வர்களின் ஆவலை பெருமளவில் தூண்டி வந்தது.

டாடாவின் இந்த அதிக பாதுகாப்பு திறனுடைய கார் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்... ஏன் தெரியுமா?

இந்நிலையில், ஒட்டுமொத்த ஆவலுக்கும் முற்று புள்ளி வைக்கும் வகையில் இன்று டியாகோ லிமிடெட் எடிசன் காரின் அறிமுகம் அரங்கேறியது. இது ஓர் லிமிடெட் எடிசன் என்பதனால்தான் குறிப்பிட்ட எண்ணிக்கயில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகின்றது. இந்த காரணத்தினால்தான் இக்கார் புதிய ஸ்டைல் மற்றும் அம்சங்களுடன் காட்சியளிக்கின்றது.

டாடாவின் இந்த அதிக பாதுகாப்பு திறனுடைய கார் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்... ஏன் தெரியுமா?

கடந்த ஆண்டில் இக்காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை டாடா விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதனை நினைவுகூறும் விதமாக லிமிடெட் எடிசன் டியாகோ காரை டாடா இப்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லிமிடெட் எடிசன் டியாகோ காருக்கு ரூ. 5.79 லட்சம் என்ற விலையை டாடா நிர்ணயித்துள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டாடாவின் இந்த அதிக பாதுகாப்பு திறனுடைய கார் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்... ஏன் தெரியுமா?

பிஎஸ்6 தரத்தில் எஞ்ஜினே புதுப்பிக்கப்பட்ட டியாகோ காரின் சிறப்பம் ஆகும். இதுமட்டுமின்றி லேசான டிசைன் மாற்றங்களுடன் இக்காரில் ச செய்யப்பட்டது. sஅத்துடன், மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸைக் கொண்ட மாடலாக அது விற்பனைக்குக் களமிறங்கியது. ஆனால், தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் லிமிடெட் எடிசன் டியாகோ மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வந்திருக்கின்றது.

டாடாவின் இந்த அதிக பாதுகாப்பு திறனுடைய கார் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்... ஏன் தெரியுமா?

டியாகோவின் உயர்நிலை தேர்வான எக்ஸ்டி வேரியண்டிலேயே இப்புதிய லிமிடெட் எடிசன் கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இந்த கார் ஒற்றை நிறங்களான ஃப்ளேம் (சுடர்) சிவப்பு, முத்து வெள்ளை, டேடோனா க்ரே ஆகிய வண்ண தேர்வுகளில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும்.

டாடாவின் இந்த அதிக பாதுகாப்பு திறனுடைய கார் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்... ஏன் தெரியுமா?

மேலும், இந்த கார் ஓர் லிமிடெட் எடிசன் வாகனம் என்பதாலும், உயர்நிலை வேரியண்ட் என்பதாலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களைத் தன்னுள் தாங்கியதாக இருக்கின்றது. அந்தவகையில், தொடுதிரை வசதிக் கொண்ட 5 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், திரை வசதியுடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் குரல் கட்டளையை ஏற்கும் வசதி என எக்கசக்க அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

டாடாவின் இந்த அதிக பாதுகாப்பு திறனுடைய கார் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்... ஏன் தெரியுமா?

டியாகோ, டாடா நிறுவனத்தின் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட மற்றும் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்று. இக்காரை குஜராத்தில் அமைந்துள்ள சனாந்த் பிளாணட்டில் வைத்தே டாடா மோட்டார்ஸ் தயாரித்து வருகின்றது. அண்மையில் இந்த பிளாணட்டில் டியாகோ கார் மாடலின் 3 லட்சமாவது யூனிட் தயாரிப்பு நிகழ்வை சிறப்பு நிகழ்வாக அனுசரிக்கப்பட்டது.

டாடாவின் இந்த அதிக பாதுகாப்பு திறனுடைய கார் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்... ஏன் தெரியுமா?

இதனைத் தொடர்ந்தே, இந்த அதிக வரவேற்பைப் பெற்று காருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக லிமிடெட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. டாடா நிறுவனம் இக்காரை 2016ம் ஆண்டிலேயே நாட்டில் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அட்டகாசமான சிறப்பம்சங்கள், கண்களைப் பறிக்கும் கவர்ச்சியான தோற்றம் ஆகியவற்றை இக்கார் பெற்றிருக்கின்ற காரணத்தினால் தற்போதும் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இது இருக்கின்றது.

Most Read Articles
English summary
Tata Launches Limited-Edition Tata Tiago For Celebrates 1st Anniversary Of Tiago Refresh Range. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X