ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட காராக வெளிவரும் டாடா எச்பிஎக்ஸ்!! மேனுவலிலும் கிடைக்கும்...

அறிமுகத்திற்கு முன்னதாக 2021 டாடா எச்பிஎக்ஸ் காரின் புதிய ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட காராக வெளிவரும் டாடா எச்பிஎக்ஸ்!! மேனுவலிலும் கிடைக்கும்...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல மாதங்களாக அதன் புதிய எச்பிஎக்ஸ் காரை சோதனை ஓட்டங்களில் உட்படுத்தி வருகிறது. இந்த வகையில் எச்பிஎக்ஸ் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் வேரியண்ட் சமீபத்தில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட காராக வெளிவரும் டாடா எச்பிஎக்ஸ்!! மேனுவலிலும் கிடைக்கும்...

ஆட்டோகார் இந்தியா செய்திதளத்தில் பதிவிடப்பட்டுள்ள இது தொடர்பான ஸ்பை படங்களின் மூலம் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட எச்பிஎக்ஸ் மைக்ரோ-எஸ்யூவி இரு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படவுள்ளது உறுதியாகிறது.

ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட காராக வெளிவரும் டாடா எச்பிஎக்ஸ்!! மேனுவலிலும் கிடைக்கும்...

மேலும் எச்பிஎக்ஸ் காரின் உட்புறத்தில் வழங்கப்பட்டுள்ள முன் இருக்கைகள், தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரம், ஸ்விட்ச் கியர், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எச்விஏசி கண்ட்ரோல்கள் மற்றும் 7-இன்ச் தொடுத்திரை உள்ளிட்டவற்றில் டாடாவின் மற்ற கார்களான டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ராஸையே பெரிதும் ஒத்திருப்பதையும் அறிய முடிகிறது.

ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட காராக வெளிவரும் டாடா எச்பிஎக்ஸ்!! மேனுவலிலும் கிடைக்கும்...

அல்ட்ராஸை போன்று டாடாவின் மாடுலர் ஆல்ஃபா ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள எச்பிஎக்ஸ் காரிலும் உட்புறத்தில், குறிப்பாக பின் இருக்கை வரிசையில் இட வசதியை நன்கு விசாலமானதாகவும், கதவுகளை 90 டிகிரியில் திறக்கும் விதத்திலும் எதிர்பார்க்கலாம்.

ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட காராக வெளிவரும் டாடா எச்பிஎக்ஸ்!! மேனுவலிலும் கிடைக்கும்...

வெளிப்புற தோற்றத்தில் விற்பனைக்கு வரும் இந்த புதிய மைக்ரோ-எஸ்யூவி கார் பெரியளவில் அதன் எச்பிஎக்ஸ் கான்செப்ட் வெர்சனையே ஒத்து காணப்படும். குறிப்பாக ஹெட்லைட் அமைப்பு கொண்ட காரின் முன்பகுதி டாடா ஹெரியர் மற்றும் சமீபத்தில் அறிமுகமான அதன் 7-இருக்கை வெர்சன் சஃபாரியையே போன்றே தோற்றமளிக்கும்.

ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட காராக வெளிவரும் டாடா எச்பிஎக்ஸ்!! மேனுவலிலும் கிடைக்கும்...

டியாகோவின் மத்திய-வேரியண்ட்களில் பொருத்தப்படும் துர்அலாய் சக்கரங்களையே (இரும்பு+பிளாஸ்டிக்) இந்த சோதனை எச்பிஎக்ஸ் காரிலும் பார்க்க முடிகிறது. அலாய் சக்கரங்கள் இதன் டாப் வேரியண்ட்களில் வழங்கப்படலாம்.

ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட காராக வெளிவரும் டாடா எச்பிஎக்ஸ்!! மேனுவலிலும் கிடைக்கும்...

அறிமுகத்தின்போது டாடா எச்பிஎக்ஸ்-இல் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மட்டுமே 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படவுள்ளது. சில மாதங்களுக்கு பிறகு 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.

ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட காராக வெளிவரும் டாடா எச்பிஎக்ஸ்!! மேனுவலிலும் கிடைக்கும்...

இந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் ஷோரூம்களை வந்தடையலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய டாடா எச்பிஎக்ஸ் காரின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சம் வரையில் எதிர்பார்க்கப்படுகின்றன.

Most Read Articles
English summary
Tata HBX Automatic Spied
Story first published: Monday, February 8, 2021, 18:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X