உயிர் ரொம்ப முக்கியம் பாஸ்... டாடா கார்களின் விற்பனை உயர்ந்து வருவதற்கு பின்னால் உள்ள காரணம் இதுதான்...

இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் டாடா நிறுவனத்தின் கார்கள் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உயிர் ரொம்ப முக்கியம் பாஸ்... டாடா கார்களின் விற்பனை உயர்ந்து வருவதற்கு பின்னால் உள்ள காரணம் இதுதான்...

இந்திய சந்தையில் தற்போது டாடா நிறுவன கார்களின் விற்பனை வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கார்களை விற்பனை செய்தாலும், ஒவ்வொரு காரிலும் வாடிக்கையாளர்களின் தேவைகளை டாடா சரியாக பூர்த்தி செய்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா நிறுவனம் 23,546 கார்களை விற்பனை செய்துள்ளது.

உயிர் ரொம்ப முக்கியம் பாஸ்... டாடா கார்களின் விற்பனை உயர்ந்து வருவதற்கு பின்னால் உள்ள காரணம் இதுதான்...

இதன் மூலம் கடந்த டிசம்பர் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக டாடா நிறுவனம் 3வது இடத்தில் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது டாடா நிறுவனத்தின் விற்பனை 84 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

உயிர் ரொம்ப முக்கியம் பாஸ்... டாடா கார்களின் விற்பனை உயர்ந்து வருவதற்கு பின்னால் உள்ள காரணம் இதுதான்...

அதே சமயம் 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 9 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா கார் என்ற பெருமையை நெக்ஸான் பெற்றுள்ளது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை டாடா நெக்ஸான் பலமுறை காப்பாற்றியுள்ளது.

உயிர் ரொம்ப முக்கியம் பாஸ்... டாடா கார்களின் விற்பனை உயர்ந்து வருவதற்கு பின்னால் உள்ள காரணம் இதுதான்...

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் 'மேட் இன் இந்தியா' கார் டாடா நெக்ஸான்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா நிறுவனம் 6,835 நெக்ஸான் கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 4,350 ஆக மட்டுமே இருந்தது.

உயிர் ரொம்ப முக்கியம் பாஸ்... டாடா கார்களின் விற்பனை உயர்ந்து வருவதற்கு பின்னால் உள்ள காரணம் இதுதான்...

இதன் மூலம் விற்பனையில் 57.13 சதவீத வளர்ச்சியை டாடா நெக்ஸான் பதிவு செய்து அசத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகம் விற்பனையான டாடா கார் என்ற பெருமையை அல்ட்ராஸ் பெற்றுள்ளது. பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரான அல்ட்ராஸ், நெக்ஸானை போலவே குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்றுள்ளது.

உயிர் ரொம்ப முக்கியம் பாஸ்... டாடா கார்களின் விற்பனை உயர்ந்து வருவதற்கு பின்னால் உள்ள காரணம் இதுதான்...

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா நிறுவனம் 6,600 அல்ட்ராஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. டாடா அல்ட்ராஸ் கார் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது.

உயிர் ரொம்ப முக்கியம் பாஸ்... டாடா கார்களின் விற்பனை உயர்ந்து வருவதற்கு பின்னால் உள்ள காரணம் இதுதான்...

2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா கார்களின் பட்டியலில் டியாகோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த டிசம்பரில் டாடா நிறுவனம் 6,066 டியாகோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 4,558 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 33.08 சதவீத வளர்ச்சியை டியாகோ பதிவு செய்துள்ளது.

உயிர் ரொம்ப முக்கியம் பாஸ்... டாடா கார்களின் விற்பனை உயர்ந்து வருவதற்கு பின்னால் உள்ள காரணம் இதுதான்...

நெக்ஸான், அல்ட்ராஸ் மற்றும் டியாகோ ஆகிய மூன்று கார்களும்தான் டாடா நிறுவனத்திற்கு மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ளன. இந்த பட்டியலில் 4வது இடத்தை டாடா ஹாரியர் பிடித்துள்ளது. எஸ்யூவி ரக காரான இது, எம்ஜி ஹெக்டர், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட கார்களுக்கு விற்பனையில் சவால் அளித்து வருகிறது.

உயிர் ரொம்ப முக்கியம் பாஸ்... டாடா கார்களின் விற்பனை உயர்ந்து வருவதற்கு பின்னால் உள்ள காரணம் இதுதான்...

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா நிறுவனம் 2,223 ஹாரியர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 1,458 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 52.47 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து டாடா ஹாரியர் அசத்தியுள்ளது. டாடா ஹாரியரும் விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை பலமுறை காப்பாற்றியுள்ளது.

உயிர் ரொம்ப முக்கியம் பாஸ்... டாடா கார்களின் விற்பனை உயர்ந்து வருவதற்கு பின்னால் உள்ள காரணம் இதுதான்...

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா கார்களின் பட்டியலில் டிகோர் 5வது இடத்தில் உள்ளது. கடந்த டிசம்பரில் டாடா நிறுவனம் 1,822 டிகோர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் இந்த எண்ணிக்கை 1,487 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 22.53 சதவீத வளர்ச்சியை டிகோர் பதிவு செய்துள்ளது.

உயிர் ரொம்ப முக்கியம் பாஸ்... டாடா கார்களின் விற்பனை உயர்ந்து வருவதற்கு பின்னால் உள்ள காரணம் இதுதான்...

இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது கார்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளனர். பாதுகாப்பு என்ற விஷயத்தை எடுத்து கொண்டால், டாடா கார்கள் தலைசிறந்து விளங்குகின்றன. எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா மீதான நன்மதிப்பு உயர்ந்து வருகிறது. டாடா கார்களின் விற்பனை உயர்ந்து வருவதற்கு இதுவே முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Tata Model-Wise Car Sales Report For December 2020 - Nexon, Altroz, Tiago, Harrier, Tigor. Read in Tamil
Story first published: Saturday, January 9, 2021, 10:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X