இந்தியாவில் அதிகரிக்கும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா?!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2021 ஜனவரி மாதத்தில் விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் அதிகரிக்கும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா?!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 26,980 கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா?!

இது கொரோனா பரவல் சீனாவில் மட்டுமே அதிகளவில் இருந்த 2020 ஜனவரி மாதத்தில் விற்பனையான டாடா கார்களை காட்டிலும் சுமார் 94 சதவீதம் அதிகமாகும். ஏனெனில் அந்த சமயத்தில் 13,893 கார்களை மட்டுமே டாடா நிறுவனம் விற்றிருந்தது.

இந்தியாவில் அதிகரிக்கும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா?!

அதேபோல் 2020 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 2021 ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கை 15 சதவீதம் அதிகமாகும். கடந்த மாதத்தில் அதிகளவில் விற்பனையான டாடா கார் மாடலாக நெக்ஸான் உள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா?!

நெக்ஸானின் விற்பனை கடந்த ஒரு வருடத்தில் பெரிய அளவில் முன்னேறி உள்ளது. இதைதான் இந்த விற்பனை அறிக்கையும் வெளிக்காட்டுகிறது. 2020 ஜனவரி மாதத்தில் வெறும் 3,382 நெக்ஸான் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்தியாவில் அதிகரிக்கும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா?!

2020 டிசம்பரில் 6,835 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதில் இருந்து நெக்ஸானின் விற்பனை ஒவ்வொரு மாதமும் கணிசமாக அதிகரித்து வருவதை அறிய முடிகிறது. நெக்ஸானிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் அல்ட்ராஸ் உள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா?!

டாடா மோட்டார்ஸின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரான அல்ட்ராஸ் கடந்த மாதத்தில் 7,378 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான அல்ட்ராஸ் கார் ஒரு மாதத்தில் இதுவரை விற்பனையானதே இல்லை.

இந்தியாவில் அதிகரிக்கும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா?!

டியாகோ 6,909 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு மூன்றாவது இடத்தில் உள்ளது. அல்ட்ராஸ், டியாகோ இவை இரண்டின் விற்பனையும் 2020 ஜனவரி மாதத்தை காட்டிலும் ஏறக்குறைய 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா?!

7-இருக்கை சஃபாரியின் வருகையின் தாக்கமோ என்னமோ தெரியவில்லை ஹெரியரின் விற்பனை அதிகளவில் கடந்த மாதத்தில் இருந்துள்ளது. ஹெரியரின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 2,443 ஆகும். இது அதிக ஹெரியர் கார் விற்பனை செய்யப்பட்ட இரண்டாவது மாதமாகும்.

இந்தியாவில் அதிகரிக்கும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா?!

ஹெரியரின் 2020 ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கை 719 தான். இந்த வகையில் இதன் விற்பனையில் சுமார் 240% முன்னேற்றத்தை டாடா நிறுவனம் கண்டுள்ளது. அதேபோல் டிகோர் நடுத்தர-அளவு செடான் காரின் விற்பனையும் கடந்த மாதத்தில் நல்லப்படியாகவே இருந்துள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் டாடா நெக்ஸான் கார்களின் விற்பனை!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா?!

கடந்த மாதத்தில் 2,025 டாடா டிகோர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2020 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகைய்ல் இந்த எண்ணிக்கை 127 சதவீதம் அதிகமாகும். நெக்ஸானை போன்று டாடா ஹெரியர் மற்றும் டிகோர் கார்களும் கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்கள் அதிக பேரால் வாங்கப்பட்டு வருகின்றன.

Most Read Articles

English summary
Tata Motors Sales Analysis of January 2020 – Nexon records its lifetime highest monthly sales and was the best selling Tata!
Story first published: Thursday, February 4, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X