"டாடா இப்படி செய்ய கூடாது" -புலம்பும் மக்கள்! என்னனு தெரிஞ்சா நீங்களும் புலம்புபவர்களில் ஒருத்தரா மாறிடுவீங்க!

தனது கார் பிரியர்களை புலம்பச் செய்யும் வகையில் ஓர் நடவடிக்கையில் டாடா மோட்டார்ஸ் களமிறங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ஏற்கனவே கொரோனா வைரசால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மக்களை மிக கடுமையாக வாட்டி வதைத்து வருகின்றது. இத்துடன் சேர்ந்து பெட்ரோல், டீசல் விலையுயர்வும் மக்களை மேலும் இன்னல்களுக்கு ஆளாக்கி வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்த வருடம் இதை மோசமாகாது என கூறும் வகையில் பிற அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றன.

அத்தியாவசிய பொருட்களின் விலை மட்டுமில்லைங்க புதிய வாகனங்களின் விலையும் உயர தொடங்கியிருக்கின்றன. நடப்பாண்டு தொடக்கத்தில் ஏற்கனவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்தியநிலையில், தற்போது மீண்டும் விலையை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கின்றன.

கடந்த திங்கள் (நேற்று) அன்று வெளியாகிய தகவலின்படி, நாட்டின் வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அதன் புதிய கார்களின் விலையை உயர்த்த இருப்பது தெரிய வந்திருக்கின்றது. புதிய விலைகுறித்த தகவல் மிக விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

டாடா நிறுவனம் டியாகோ, டிகோர், அல்ட்ராஸ், நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார்களை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இவற்றின் விலையே மிக விரைவில் உயர இருக்கின்றன. உற்பத்தி பொருட்களான உலோகம் மற்றும் முக்கிய கூறுகளின் விலை தொடர்ச்சியாக உயரந்து வருவதை அடுத்து தனது வாகனங்களின் விலையை உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆனால், எவ்வளவு ரூபாய் அல்லது எத்தனை சதவீதம் வரை கார்களின் விலை உயர்த்தப்பட உள்ளது என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டாடா வாகனங்களின் விற்பனை கடுமையாக சரிந்து வருகின்றது.

இந்த நிலையில், விலை உயர்வு செய்ய இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இது மேலும் விற்பனையை பாதிக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. முன்னதாக மாருதி சுசுகி, ஹோண்டா கார் இந்தியா, ஹீரோ மோட்டோகார்ப், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் விலை உயர்வுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தன.

இதன் வரிசையில் டாடா மோட்டார்சும் இணைய இருக்கின்றது. இந்த தகவல் டாடா கார் பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. மாருதி சுசுகி நிறுவனம் ஜூலை-செப்டம்பர் மாதத்தில் தனது கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

ஹீரோ மோட்டோகார்ப் அதன் இருசக்கர வாகனங்களின் விலையை ரூபாய் மூவாயிரம் வரை உயர்த்திருக்கின்றது. சில நாட்களுக்கு முன்னரே இந்த விலையுயர்வு நிறுவனம் செய்திருந்தது. கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தீவிர பிடியில் இருந்து லேசாக விலகி வரும் வகையில் இப்போதே மெல்ல மெல்ல வாகன விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் விலையை அதிகரித்து வருகின்றன.

Most Read Articles

English summary
Tata Motor Soon To Increase New cars Price: Here Is Full Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X