ஒரே நேரத்தில் 10 டாடா சஃபாரி கார்கள் டெலிவிரி!! கேரளாவில் நடந்த தரமான சம்பவம்!

டாடா மோட்டார்ஸின் சமீபத்திய அறிமுகமான சஃபாரியின் 10 யூனிட்கள் ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட்டு ஆச்சியப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒரே நேரத்தில் 10 டாடா சஃபாரி கார்கள் டெலிவிரி!! கேரளாவில் நடந்த தரமான சம்பவம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய சஃபாரியை 7-இருக்கை எஸ்யூவி காராக கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தியது. 7-இருக்கை மட்டுமில்லாமல் 6-இருக்கை தேர்விலும் விற்பனை செய்யப்படும் இந்த எஸ்யூவி காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.14.69 லட்சத்தில் இருந்து ரூ.21.45 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஒரே நேரத்தில் 10 டாடா சஃபாரி கார்கள் டெலிவிரி!! கேரளாவில் நடந்த தரமான சம்பவம்!

பெயரை தவிர்த்து முந்தைய காலத்தில் விற்பனையில் இருந்த டாடா சாஃபாரி காருக்கும், தற்சமயம் விற்பனையில் உள்ள சஃபாரிக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை.

ஒரே நேரத்தில் 10 டாடா சஃபாரி கார்கள் டெலிவிரி!! கேரளாவில் நடந்த தரமான சம்பவம்!

இருப்பினும் பழமையான சஃபாரி கார்களுக்கு இருந்த வரவேற்பை போல ஹெரியரின் 7-இருக்கை வெர்சனான இதற்கும் அமோக வரவேற்பு வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்து வருகிறது. இதன் வெளிப்பாடாகவே ஒரே நேரத்தில் 10 புதிய தலைமுறை சஃபாரி கார்கள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.

சிங்க்ரோமெஷ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவை தான் மேலே பார்க்கிறீர்கள். இந்த வீடியோவில் 10 சஃபாரி கார்களும் கேரளா, கொச்சினில் உள்ள ஸ்ரீ கோகுலம் மோட்டார்ஸ் என்ற டீலர்ஷிப் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்ய தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

ஒரே நேரத்தில் 10 டாடா சஃபாரி கார்கள் டெலிவிரி!! கேரளாவில் நடந்த தரமான சம்பவம்!

இந்த 10 சஃபாரி கார்களில் பெரும்பாலானவற்றில் சன்ரூஃப் உள்ளது. இதன் மூலம் இந்த கார்களை முன்பதிவு செய்தவர்கள் பனோராமிக் சன்ரூஃப்-ஐ கொண்ட டாப்-ட்ரிம் பக்கமே சென்றுள்ளதை அறிய முடிகிறது.

ஒரே நேரத்தில் 10 டாடா சஃபாரி கார்கள் டெலிவிரி!! கேரளாவில் நடந்த தரமான சம்பவம்!

அதிலும் ஒரு வாடிக்கையாளர் சஃபாரியின் ஸ்போர்டியர் வெர்சனான அட்வென்ச்சர் பெர்சோனா எடிசனை முன்பதிவு செய்துள்ளார். டாப் எக்ஸ்இசட்+ ட்ரிம்மில் வழங்கப்படும் அட்வென்ச்சர் பெர்சோனா எடிசனில் உட்புற கேபின் கருமையான நிறத்தில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் 10 டாடா சஃபாரி கார்கள் டெலிவிரி!! கேரளாவில் நடந்த தரமான சம்பவம்!

ஹெரியரின் ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு வரும் சஃபாரி அதனை காட்டிலும் மூன்றாவது இருக்கை வரிசையினால் கூடுதல் நீளத்தை பெறுகிறது. அட்வென்ச்சர் பெர்சோனா எடிசனை தவிர்த்து மற்ற அனைத்து வேரியண்ட்களிலும் உட்புற கேபின் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் 10 டாடா சஃபாரி கார்கள் டெலிவிரி!! கேரளாவில் நடந்த தரமான சம்பவம்!

பனோராமிக் சன்ரூஃப் மட்டுமில்லாமல் சஃபாரியின் விலை மிக்க வேரியண்ட்கள் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் திரை, எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, தன்னிச்சையாக டிம் ஆகக்கூடிய ஐஆர்விஎம்கள், எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக், பல செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம் மற்றும் ஜேபிஎல் ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளிட்டவற்றையும் பெறுகின்றன.

ஒரே நேரத்தில் 10 டாடா சஃபாரி கார்கள் டெலிவிரி!! கேரளாவில் நடந்த தரமான சம்பவம்!

இந்த 7-இருக்கை எஸ்யூவி காரில் கேப்டன் மற்றும் பெஞ்ச் இருக்கை தேர்வு இரண்டாவது இருக்கை வரிசையில் வழங்கப்படுகிறது. வெளிப்புறத்தில் ஹெரியரில் பொருத்தப்படும் அதே தோற்றத்திலான அலாய் சக்கரங்களை தான் சஃபாரியும் பெறுகிறது.

ஒரே நேரத்தில் 10 டாடா சஃபாரி கார்கள் டெலிவிரி!! கேரளாவில் நடந்த தரமான சம்பவம்!

அதேபோல் ஹெரியரில் வழங்கப்படும் ஃபியாட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் தான் சஃபாரியிலும் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

Most Read Articles

English summary
All new Tata Safari 10 new SUVs delivered at the same time. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X