இந்த ஊர்க்காரங்களுக்கு இனிமேல் ஜாலிதான்... டாடா எலெக்ட்ரிக் பஸ்ஸில் கெத்தா பயணிக்கலாம்!

பெஸ்ட் நிறுவனத்திற்கு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் பேருந்துகளை டெலிவரி செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த ஊர்க்காரங்களுக்கு இனிமேல் ஜாலிதான்... டாடா எலெக்ட்ரிக் பஸ்ஸில் கெத்தா பயணிக்கலாம்!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், 35 ஸ்டார்பஸ் எலெக்ட்ரிக் பேருந்துகளை, பெஸ்ட் (Brihanmumbai Electric Supply and Transport - BEST)நிறுவனத்திற்கு டெலிவரி செய்துள்ளது. பெஸ்ட் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 340 எலெக்ட்ரிக் பேருந்துகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறவுள்ளது.

இந்த ஊர்க்காரங்களுக்கு இனிமேல் ஜாலிதான்... டாடா எலெக்ட்ரிக் பஸ்ஸில் கெத்தா பயணிக்கலாம்!

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தற்போது 35 எலெக்ட்ரிக் பேருந்துகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இது 35 இருக்கைகளை கொண்ட எலெக்ட்ரிக் பேருந்துகள் ஆகும். இந்த பேருந்துகளில் ஏசி வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ் பெஸ்ட் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பேருந்துகளை கொள்முதல் செய்கிறது.

இந்த ஊர்க்காரங்களுக்கு இனிமேல் ஜாலிதான்... டாடா எலெக்ட்ரிக் பஸ்ஸில் கெத்தா பயணிக்கலாம்!

இந்த பேருந்துகளுடன், சார்ஜிங் ஸ்டேஷன் வசதிகளையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்படுத்தி பராமரிக்கவுள்ளது. 12 மீட்டர் நீளம் கொண்ட இந்த டாடா ஸ்டார்பஸ் ஏசி எலெக்ட்ரிக் பேருந்துகளில் ஓட்டுனர் மற்றும் பயணிகளின் சௌகரியத்திற்காக பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இந்த பேருந்தில் எளிதாக ஏறி, இறங்க முடியும்.

இந்த ஊர்க்காரங்களுக்கு இனிமேல் ஜாலிதான்... டாடா எலெக்ட்ரிக் பஸ்ஸில் கெத்தா பயணிக்கலாம்!

மேலும் செல்போன்களை சார்ஜ் செய்வதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் பேருந்துகளை பல்வேறு வகையான நிலப்பரப்புகளிலும், பல்வேறு வகையான சூழல்களிலும் சோதனை செய்துள்ளது. அதிகபட்ச செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த எலெக்ட்ரிக் பேருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த ஊர்க்காரங்களுக்கு இனிமேல் ஜாலிதான்... டாடா எலெக்ட்ரிக் பஸ்ஸில் கெத்தா பயணிக்கலாம்!

இதுகுறித்து பெஸ்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறுகையில், ''டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து 35 எலெக்ட்ரிக் பேருந்துகளை டெலிவரி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்காக நிறைய எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகம் செய்வதற்கு பெஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஊர்க்காரங்களுக்கு இனிமேல் ஜாலிதான்... டாடா எலெக்ட்ரிக் பஸ்ஸில் கெத்தா பயணிக்கலாம்!

இது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது, மும்பை பயணிகளுக்கும் பலன் அளிக்கும். அரசின் கொள்கைக்கு ஏற்ப பேருந்துகளை மின்மயமாக்குவதில் பெஸ்ட் நிறுவனம் தீவிரமாக உள்ளது'' என்றனர். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு மாநிலங்களுக்கு 525 எலெக்ட்ரிக் பேருந்துகளை டெலிவரி செய்துள்ளது. இவை அனைத்தும் எலெக்ட்ரிக் பேருந்துகளும் ஒட்டுமொத்தமாக 15 மில்லியன் கிலோ மீட்டர்களுக்கும் மேல் ஓடியுள்ளன.

இந்த ஊர்க்காரங்களுக்கு இனிமேல் ஜாலிதான்... டாடா எலெக்ட்ரிக் பஸ்ஸில் கெத்தா பயணிக்கலாம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் பேருந்துகள் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் கார் விற்பனையிலும் தூள் கிளப்பி வருகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மிக அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புதான். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்தான் அது.

இந்த ஊர்க்காரங்களுக்கு இனிமேல் ஜாலிதான்... டாடா எலெக்ட்ரிக் பஸ்ஸில் கெத்தா பயணிக்கலாம்!

இது ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட டாடா நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். இதே பாணியில் தற்போது விற்பனையில் உள்ள ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த ஊர்க்காரங்களுக்கு இனிமேல் ஜாலிதான்... டாடா எலெக்ட்ரிக் பஸ்ஸில் கெத்தா பயணிக்கலாம்!

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பான ரேஞ்ச் உடன் சரியான விலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிர்ணயம் செய்தால், நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை போலவே, டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரும் பெரும் வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த ஊர்க்காரங்களுக்கு இனிமேல் ஜாலிதான்... டாடா எலெக்ட்ரிக் பஸ்ஸில் கெத்தா பயணிக்கலாம்!

ஏனெனில் இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த பிரச்னையில் இருந்து தப்புவதற்காக எலெக்ட்ரிக் கார்களுக்கு மக்கள் மாற தொடங்கியுள்ளனர். அத்துடன் ஒன்றிய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானியம் உள்பட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.

இந்த ஊர்க்காரங்களுக்கு இனிமேல் ஜாலிதான்... டாடா எலெக்ட்ரிக் பஸ்ஸில் கெத்தா பயணிக்கலாம்!

எனவே வரும் காலங்களில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை உயர்த்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் டாடா பவர் நிறுவனமும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகளவில் ஏற்படுத்தி வருகிறது.

இந்த ஊர்க்காரங்களுக்கு இனிமேல் ஜாலிதான்... டாடா எலெக்ட்ரிக் பஸ்ஸில் கெத்தா பயணிக்கலாம்!

இவை அனைத்தும் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன புரட்சி தொடங்கி விட்டதை காட்டுகின்றன. சீனா உள்பட ஒரு சில வெளிநாடுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு ஏற்கனவே நன்றாக அதிகரித்து விட்டது. இந்தியாவிலும் கூடிய விரைவில் அது நடக்கும் என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். அதற்கு ஏற்ப பல்வேறு புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் இங்கு தொடர்ச்சியாக அறிமுகமாகி வருகின்றன.

Most Read Articles

English summary
Tata motors delivers 35 electric buses to best here are all the details
Story first published: Monday, August 9, 2021, 12:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X