டாடா கார் வடிவமைப்புப் பிரிவு தலைவர் பிரதாப் போஸ் ராஜினமா

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பல புதிய கார் மாடல்களை உருவாக்கிய அதன் வடிவமைப்புப் பிரிவு தலைவர் பிரதாப் போஸ் தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்.

டாடா கார் வடிவமைப்புப் பிரிவு தலைவர் பிரதாப் போஸ் திடீர் ராஜினாமா!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. வடிவமைப்பு, வசதிகள், பாதுகாப்பு என அனைத்திலும் சிறப்பாக இருந்து வருகின்றன.

டாடா கார் வடிவமைப்புப் பிரிவு தலைவர் பிரதாப் போஸ் திடீர் ராஜினாமா!

இந்த நிலையில், புதிய டாடா கார்களின் டிசைன் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்ததற்கு, அதன் வடிவமைப்புப் பிரிவு தலைவராக இருந்த பிரதாப் போஸ் மிக முக்கிய காரணமாக இருந்தார்.

டாடா கார் வடிவமைப்புப் பிரிவு தலைவர் பிரதாப் போஸ் திடீர் ராஜினாமா!

டாடா ஹாரியர், டியாகோ, சஃபாரி, நெக்ஸான் உள்ளிட்ட பல புதிய கார் மாடல்கள் இம்பேக்ட் 2.0 என்ற புதிய டிசைன் கொள்கையில் வடிவமைக்கப்பட்டன. இந்த கார்களின் வடிவமைப்புப் பிரிவுத் தலைவராக பிரதாப் போஸ் இருந்து வந்தார்.

டாடா கார் வடிவமைப்புப் பிரிவு தலைவர் பிரதாப் போஸ் திடீர் ராஜினாமா!

இந்த நிலையில், பிரதாப் போஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய நல்வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

டாடா கார் வடிவமைப்புப் பிரிவு தலைவர் பிரதாப் போஸ் திடீர் ராஜினாமா!

அவரது ராஜினாமா டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பின்னடவை தரும் என தெரிகிறது. இருப்பினும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் வடிவமைப்புப் பிரிவு துணைத் தலைவரும், அந்நிறுவனத்தின் இங்கிலாந்து டிசைன் மையத்தின் தலைவராகவும் உள்ள மார்ட்டின் உலரிக் புதிய தலைவராக பதவி ஏற்க உள்ளார்.

டாடா கார் வடிவமைப்புப் பிரிவு தலைவர் பிரதாப் போஸ் திடீர் ராஜினாமா!

அவர் உடனடியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் வடிவமைப்புப் பிரிவின் புதிய தலைவராக பதவி ஏற்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

டாடா கார் வடிவமைப்புப் பிரிவு தலைவர் பிரதாப் போஸ் திடீர் ராஜினாமா!

டாடா டியாகோ, டிகோர், ஹெக்ஸாவில் துவங்கிய அவரது பயணம் ஹாரியர், நெக்ஸான், நெக்ஸான் எலெக்ட்ரி்க், டாடா சஃபாரி மற்றும் அல்ட்ராஸ் கார் வரை நீட்டித்தது. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் தனது 10 ஆண்டுகள் பயணத்தை அவர் நிறைவு செய்து வெளியேறி இருக்கிறார்.

டாடா கார் வடிவமைப்புப் பிரிவு தலைவர் பிரதாப் போஸ் திடீர் ராஜினாமா!

டாடா மோட்டார்ஸ் போன்றே வேறு பெரிய வாகன நிறுவனத்தில் அவர் பணியில் சேர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதற்கான தகவல் வெளியாகும் என்று தெரிகிறது. டாடா மோட்டார்ஸ் கார்கள் பல விருதுகளை பெறுவதற்கு காரணகர்த்தாவாக பிரதாப் போஸ் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Tata Motors design chief Pratap bose quits the company.
Story first published: Thursday, April 29, 2021, 10:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X