புதிய மினி எஸ்யூவியை வைத்து பெரும் கணக்கு போடும் டாடா மோட்டார்ஸ்

புதிய மினி எஸ்யூவியை வைத்து டாடா மோட்டார் நிறுவனம் பெரிய அளவிலான இடத்தை இந்திய சந்தையில் பிடிப்பதற்கு திட்டம் போட்டுள்ளது.

புதிய மினி எஸ்யூவியை வைத்து பெரும் கணக்கு போடும் டாடா மோட்டார்ஸ்

இந்தியாவில் எஸ்யூவி மாடல்களுக்கு பெரிய அளவிலான வரவேற்பு இருந்து வருவதால், அனைத்து நிறுவனங்களும் எஸ்யூவி கார்களை களமிறக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால், வகை வகையான எஸ்யூவி மாடல்கள் இந்திய சந்தையில் வரிசை கட்டி வருகின்றன.

புதிய மினி எஸ்யூவியை வைத்து பெரும் கணக்கு போடும் டாடா மோட்டார்ஸ்

அந்த வகையில், டாடா மோட்டார் நிறுவனம் புதிய எஸ்யூவி மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வருகிறது. நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி வரிசையில் அடுத்ததாக மிகவும் விலை குறைவான சிறிய வகை எஸ்யூவி மாடலை களமிறக்க உள்ளது.

புதிய மினி எஸ்யூவியை வைத்து பெரும் கணக்கு போடும் டாடா மோட்டார்ஸ்

கடந்த 2019ம் ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் எச்2எக்ஸ் என்ற பெயரில் மாதிரி மாடலாக காட்சிப்படுத்தப்பட்ட இந்த புதிய எஸ்யூவி தயாரிப்பு நிலைக்கு உகந்த அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.

புதிய மினி எஸ்யூவியை வைத்து பெரும் கணக்கு போடும் டாடா மோட்டார்ஸ்

இந்த நிலையில், இந்த எஸ்யூவியை மிக விரைவாக கொண்டு வருவதற்கான முழு முனைப்புடன் டாடா மோட்டார் செயலாற்றி வருகிறது. இந்த புதிய எஸ்யூவி மாடல் மாருதி எஸ் பிரெஸ்ஸா மற்றும் மஹிந்திரா கேயூவி100 உள்ளிட்ட மாடல்களின் சந்தையை குறிவைத்து வர இருக்கிறது.

புதிய மினி எஸ்யூவியை வைத்து பெரும் கணக்கு போடும் டாடா மோட்டார்ஸ்

மேலும், இந்த புதிய மினி எஸ்யூவி மாடல் மூலமாக இந்திய கார் சந்தையில் 10 சதவீத பங்களிப்பை பெறுவதற்கான திட்டத்துடன் டாடா மோட்டார் வியூகம் அமைத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி கூறுகிறது.

புதிய மினி எஸ்யூவியை வைத்து பெரும் கணக்கு போடும் டாடா மோட்டார்ஸ்

டாடா எச்பிஎக்ஸ் என்ற குறியீட்டுப் பெயரில் தற்போது குறிப்பிடப்படும் இந்த புதிய மினி எஸ்யூவி மாடலானது ரூ.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்து நவீன தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் இந்த கார் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மினி எஸ்யூவியை வைத்து பெரும் கணக்கு போடும் டாடா மோட்டார்ஸ்

இந்த புதிய மினி எஸ்யூவியானது நகர்ப்புறத்தில் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த எஞ்சின் 84 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

Most Read Articles
English summary
According to report, Tata Motors planning to increase market share to 10 with the all new mini SUV model in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X