இந்தியாவின் மலிவு விலை மின்சார காரின் விலை உயர்ந்தது... இனி இந்த விலையில்தான் டாடா நெக்ஸான் இவி கிடைக்கும்!!

இந்தியாவின் மலிவு விலை மின்சார காரின் விலையை உயர்த்தியது டாடா மோட்டார்ஸ். எவ்வளவு விலையுயர்வு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

இந்தியாவின் மலிவு விலை மின்சார காரின் விலை உயர்ந்தது... இனி இந்த விலையில்தான் டாடா நெக்ஸான் இவி கிடைக்கும்!!

இந்தியாவின் மலிவு விலை மின்சார கார் என்ற பெருமைக்குரிய வாகனமாக டாடா நெக்ஸான் இவி இருந்து வருகின்றது. இக்காரின் விலையையே டாடா மோட்டார்ஸ் கணிசமாக உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வளவு விலையுயர்வு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலே இங்கு வழங்கப்பட்டிருக்கின்றது. வாருங்கள் இதுகுறித்த விரிவான தகவலைக் கீழே காணலாம்.

இந்தியாவின் மலிவு விலை மின்சார காரின் விலை உயர்ந்தது... இனி இந்த விலையில்தான் டாடா நெக்ஸான் இவி கிடைக்கும்!!

டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் இவி மின்சார காரை மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைச் செய்து வருகின்றது. எக்ஸ்எம், எக்ஸ்இசட் ப்ளஸ், எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் ஆகியே தேர்வுகளிலேயே நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்தியாவின் மலிவு விலை மின்சார காரின் விலை உயர்ந்தது... இனி இந்த விலையில்தான் டாடா நெக்ஸான் இவி கிடைக்கும்!!

இவற்றில் எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் ஆகிய இரு வேரியண்டுகளின் விலையை மட்டுமே டாடா மோட்டார்ஸ் உயர்த்தியுள்ளது. ஆமாங்க, நல்ல வேலையாக ஆரம்ப நிலை வேரியண்டின் விலை மட்டும் உயர்த்தப்படவில்லை. ஆகையால், ரூ. 13.99 லட்சம் என்ற பழைய விலையிலேயே இந்த மின்சார கார் விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்தியாவின் மலிவு விலை மின்சார காரின் விலை உயர்ந்தது... இனி இந்த விலையில்தான் டாடா நெக்ஸான் இவி கிடைக்கும்!!

ஆனால், உயர்நிலை வேரியண்டுகளான எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் ஆகியவை ரூ. 16 ஆயிரம் விலையுயர்வுடன் விற்பனைக்குக் கிடைக்கும். முன்னதாக ரூ. 15.40 லட்சம் என்ற விலையிலேயே எக்ஸ்இசட் ப்ளஸ் வேரியண்ட் நெக்ஸான் இவி விற்பனைக்குக் கிடைத்து வந்தது. புதிய விலையுயர்வால் இதன் விலை ரூ. 15.56-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் மலிவு விலை மின்சார காரின் விலை உயர்ந்தது... இனி இந்த விலையில்தான் டாடா நெக்ஸான் இவி கிடைக்கும்!!

இதேபோன்று, ரூ. 16.40 லட்சத்திற்கு கிடைத்து வந்த எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் நெக்ஸான் இவி புதிய விலையுயர்வால் ரூ. 16.56மாக மாறியிருக்கின்றது. இந்த அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. அராய் அமைப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி டாடா நெக்ஸான் இவி ஒற்றை முழுமையான சார்ஜில் 312 கிமீ தூரம் வரையிலான ரேஞ்ஜை வழங்கும்.

இந்தியாவின் மலிவு விலை மின்சார காரின் விலை உயர்ந்தது... இனி இந்த விலையில்தான் டாடா நெக்ஸான் இவி கிடைக்கும்!!

இக்காரில் 30.2kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், நெக்ஸான் இவி-யில் 129 பிஎஸ் மற்றும் 245 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக் கூடிய மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் உச்சபட்ச வேகத்தை வெறும் 9.58 செகண்டுகளிலேயே தொட்டுவிடும்.

இந்தியாவின் மலிவு விலை மின்சார காரின் விலை உயர்ந்தது... இனி இந்த விலையில்தான் டாடா நெக்ஸான் இவி கிடைக்கும்!!

இந்த மின்சார காரில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் நிறுவனம் வழங்கியிருக்கின்றது. டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஒரு மணி நேரத்திற்குள் ஏற்றிவிடலாம். இந்தியாவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் மற்றும் எம்ஜி இசட்எஸ் இவி ஆகிய மின்சார கார்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இந்தியாவின் மலிவு விலை மின்சார காரின் விலை உயர்ந்தது... இனி இந்த விலையில்தான் டாடா நெக்ஸான் இவி கிடைக்கும்!!

இவை இரண்டைக் காட்டிலும் டாடா நெக்ஸான் இவி-யே குறைந்த விலை மின்சார காராகும். தற்போது விலை உயர்வு செய்யப்பட்டிருந்தாலும் இதுவே நாட்டின் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் மின்சார காராக இருக்கின்றது.

Most Read Articles

English summary
Tata Motors Hikes Nexon EV Second Time In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X