ஒரே நாளில் 70 புதிய ஷோரூம்கள்! தென்னிந்தியாவில் Tata செய்த தரமான சம்பவம்! மிரண்டு நிற்கும் இந்திய வாகன உலகம்!

நாட்டின் மாபெரும் வாகன உற்பத்தி நிறுவனமான Tata Motors தென்னிந்தியாவை மையப்படுத்தி புதிதாக 70 விற்பனையகங்களை திறந்து வைத்திருக்கின்றது. இவையனைத்தும் இன்று (வெள்ளிக் கிழமை) ஒரே நாளில் திறக்கப்பட்டவை ஆகும். இதுகுறித்த முக்கிய விபரங்களைக் கீழே காணலாம்.

ஒரே நாளில் 70 புதிய ஷோரூம்கள்... தென்னிந்தியாவில் Tata செய்த தரமான சம்பவம்! மிரண்டு நிற்கும் இந்திய வாகன உலகம்!

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனம் என்ற புகழுக்கு உரிய நிறுவனமாக Tata Motors இருக்கின்றது. இந்த பெயருக்கான தனித்துவத்தை நிலை நாட்டும் வகையில் ஓர் நடவடிக்கையில் டாடா தற்போது களமிறங்கியிருக்கின்றது. நிறுவனம் ஒரே நாளில் 70 புத்தம் புதிய விற்பனையகங்களை திறந்து, தான் ஒரு ஜாம்பவான் நிறுவனம் என்பதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் 70 புதிய ஷோரூம்கள்... தென்னிந்தியாவில் Tata செய்த தரமான சம்பவம்! மிரண்டு நிற்கும் இந்திய வாகன உலகம்!

புதிதாக திறக்கப்பட்டிருக்கும் அனைத்து விற்பனையகங்களும் தென்னிந்தியாவை மட்டுமே மையப்படுத்தி திறக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. தென்னிந்தியர்களைக் கவர்ந்து விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் முக்கிய நகர்புற பகுதிகளில் புதிய விற்பனையகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.

ஒரே நாளில் 70 புதிய ஷோரூம்கள்... தென்னிந்தியாவில் Tata செய்த தரமான சம்பவம்! மிரண்டு நிற்கும் இந்திய வாகன உலகம்!

தனது புதிய தயாரிப்புகள் மற்றும் மின்சார வாகன தயாரிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் நிறுவனம் இந்த நடவடிக்கையில் களமிறங்கியிருக்கின்றது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலேயே புதிதாக ஷோரும்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.

ஒரே நாளில் 70 புதிய ஷோரூம்கள்... தென்னிந்தியாவில் Tata செய்த தரமான சம்பவம்! மிரண்டு நிற்கும் இந்திய வாகன உலகம்!

புதிய ஷோரூம்களின் திறப்பால் தென்னிந்தியாவில் நிறுவனத்தின் விற்பனையகங்கள் சற்று அதிகரித்திருக்கின்றது. ஆம், ஒட்டுமொத்த விற்பனையகங்களின் எண்ணிக்கை 272ஆக உயர்ந்திருக்கின்றது. அதுவே இந்திய அளவில் பார்த்தோமேயானால் நிறுவனத்தின்கீழ் ஒட்டுமொத்தமாக 980 விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஒரே நாளில் 70 புதிய ஷோரூம்கள்... தென்னிந்தியாவில் Tata செய்த தரமான சம்பவம்! மிரண்டு நிற்கும் இந்திய வாகன உலகம்!

இதன் வாயிலாக, டாடா நிறுவனம் புதிய தயாரிப்புகளின் வாயிலாக மட்டுமின்றி புதிய ஷோரூம்கள் வாயிலாகவும் மக்களை கவரும் நடவடிக்கையில் களமிறங்கியிருப்பது தெரிய வருகின்றது. நிறுவனம் மிக விரைவில் புதிய பஞ்ச் எனும் குட்டி எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

ஒரே நாளில் 70 புதிய ஷோரூம்கள்... தென்னிந்தியாவில் Tata செய்த தரமான சம்பவம்! மிரண்டு நிற்கும் இந்திய வாகன உலகம்!

விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதை முன்னிட்டு காரை சாலையில் வைத்து பல பரீட்சையில் ஈடுபடுத்தி வருகின்றது. அந்தவகையில், அண்மையில் கரடு-முரடான மலை பாதையில் வைத்து காரை சோதனைக்கு உட்படுத்தியது. இதுமட்டுமின்றி, காரின் பக்கம் மக்களை ஈர்க்கும் விதமாக அதுகுறித்த புகைப்படங்களை நிறுவனம் வெளியிட்டு வருகின்றது.

ஒரே நாளில் 70 புதிய ஷோரூம்கள்... தென்னிந்தியாவில் Tata செய்த தரமான சம்பவம்! மிரண்டு நிற்கும் இந்திய வாகன உலகம்!

அறிமுகத்திற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் மக்களே இப்போதே அக்காரின் பக்கம் ஈர்க்கும் முன்னிட்டு படங்களை வெளியிடுதல் மற்றும் காரின் சிறப்பம்சங்கள் குறித்து வெளியிடுதல் உள்ளிட்ட செயல்களில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தற்போது ஒட்டுமொத்த வாகன சந்தையுமே திரும்பி பார்க்கும் வகையில் ஒரே நாளில் 70 புதிய ஷோரும்களை டாடா திறந்திருக்கின்றது.

ஒரே நாளில் 70 புதிய ஷோரூம்கள்... தென்னிந்தியாவில் Tata செய்த தரமான சம்பவம்! மிரண்டு நிற்கும் இந்திய வாகன உலகம்!

இந்நிகழ்வுகுறித்து நிறுவனத்தின் பயணிகள் வாகன வணிக பிரிவின் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவை துறையின் துணைத் தலைவர் ராஜன் அம்பா கூறியதாது, "ஒட்டுமொத்த வாகன தொழில்துறையில் தென்னிந்தியா 28% பங்களிப்பு செய்கிறது. இதில் நாங்கள் 12.1 சதவீத பங்களிப்புடன் செயல்பட்டு வருகின்றோம். வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் அர்ப்பணிப்புடன் சேவை வழங்கும் வகையில் மேலும் புதிய விற்பனையகங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன" என்றார்.

Most Read Articles

English summary
Tata motors inaugurates 70 new sales outlets across southern india in a single day
Story first published: Friday, September 3, 2021, 18:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X