ஆரம்பமாயிருச்சு... Tata-வின் பிரபல கார் மாடலின் விலை உயர்ந்தது... அட இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்களா!!

வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதிய வாகனங்களின் விலையை மிக விரைவில் உயர்த்த இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அதன் பிரபலமான மாடலின் விலையை உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஆரம்பமாயிருச்சு... Tata-வின் பிரபல கார் மாடலின் விலை உயர்ந்தது... அட இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்களா!!

வாகன உற்பத்தி நிறுவனங்கள் மிக விரைவில் அதன் புதிய வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. பல நிறுவனங்கள் வரும் புத்தாண்டில் விலையை உயர்வை செய்ய திட்டமிட்டிருக்கின்றன. அந்தவகையில், மாருதி சுசுகி (Maruti Suzuki) நிறுவனம் வரும் 2022 ஜனவரியில் புத்தாண்டு பரிசாக விலை உயர்வை வழங்க இருப்பதாக அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

ஆரம்பமாயிருச்சு... Tata-வின் பிரபல கார் மாடலின் விலை உயர்ந்தது... அட இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்களா!!

இதைத்தொடர்ந்து, இதேமாதிரியான அறிவிப்புகள் பல தரப்பட்ட வாகன உற்பத்தியாளர்களிடத்தில் இருந்து வெளியாகின. அதில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனமும் ஒன்று. இதுகுறித்த அறிவிப்பை மிக விரைவில் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த ஆண்டின் தொடக்கமான 2022 ஜனவரியிலேயே விலை உயர்வு பற்றிய தகவல்கள் எதிர்பார்க்கப்பட்டன.

ஆரம்பமாயிருச்சு... Tata-வின் பிரபல கார் மாடலின் விலை உயர்ந்தது... அட இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்களா!!

இந்த மாதிரியான சூழ்நிலையில் ஒட்டுமொத்த வாகன பிரியர்களுக்கும் அதிர்ச்சியளிக்கின்ற வகையில் இப்போதே விலையை உயர்வை டாடா மோட்டார்ஸ் செய்திருக்கின்றது. சமீபத்திய அறிமுகங்களில் ஒன்றான டாடா சஃபாரி (Tata Safari) கார் மாடலின் விலையையே நிறுவனம் தற்போது உயர்த்தியிருக்கின்றது.

ஆரம்பமாயிருச்சு... Tata-வின் பிரபல கார் மாடலின் விலை உயர்ந்தது... அட இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்களா!!

கார் உற்பத்தியில் முக்கிய பங்கினை வகிக்கும் மூல பொருட்களின் விலை உயர்ந்து வருவதைக் காரணம் காட்டி டாடா சஃபாரி மாடலின் விலையை டாடா உயர்த்தியுள்ளது. குறிப்பாக, மூன்று வரிசை இருக்கை வசதி உடன் விற்பனைக்குக் கிடைக்கும் தானியங்கி கியர்பாக்ஸ் வேரியண்டுகளின் விலையையே நிறுவனம் உயர்த்தியிருக்கின்றது.

ஆரம்பமாயிருச்சு... Tata-வின் பிரபல கார் மாடலின் விலை உயர்ந்தது... அட இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்களா!!

ரூ. 7 ஆயிரம் வரை விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. 2021 டாடா சஃபாரி எஸ்யூவி ஒட்டுமொத்தமாக ஒன்பது விதமான தானியங்கி தேர்வுகளை வழங்குகின்றது. எக்ஸ்எம்ஏ (XMA), எக்ஸ்டிஏ ப்ளஸ் (XTA+), எக்ஸ்இசட்ஏ (XZA), எக்ஸ்இசட்ஏ-ப்ளஸ் 6 சீட்டர் (XZA+ 6-seater), எக்ஸ்இசட்ஏ -ப்ளஸ் (XZA+), எக்ஸ்இசட்ஏ -ப்ளஸ் 6 சீட்டர் அட்வென்சர் எடிசன் (XZA+ 6-seater Adventure Edition), எக்ஸ்இசட்ஏ -ப்ளஸ் அட்வென்சர் எடிசன் (XZA+ Adventure Edition), எக்ஸ்இசட்ஏ -ப்ளஸ் கோல்டு 6 சீட்டர் (XZA+ Gold 6-seater) மற்றும் எக்ஸ்இசட்ஏ -ப்ளஸ் கோல்டு (XZA+ Gold) இவேயை அந்த தானியங்கி தேர்வுகளில் ஆகும்.

ஆரம்பமாயிருச்சு... Tata-வின் பிரபல கார் மாடலின் விலை உயர்ந்தது... அட இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்களா!!

இவற்றின் விலையிலேயே ஏழாயிரம் ரூபாய் வரை விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்எம்ஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ ஆகிய தேர்வுகளின் விலைியல் ரூ. 3 ஆயிரம் வரையிலும், எக்ஸ்டிஏ-ப்ளஸ் வேரியண்டின் விலையில் உச்சபட்சமாக 7 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை உயர்வு செய்யப்பட்டிருக்கின்றது.

ஆரம்பமாயிருச்சு... Tata-வின் பிரபல கார் மாடலின் விலை உயர்ந்தது... அட இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்களா!!

எஞ்ஜியிருக்கும் மற்ற ஆறு வேரியண்டுகளின் விலையில் ரூ. 2 ஆயிரம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் சஃபாரியின் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்டுகளின் விலையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆரம்பமாயிருச்சு... Tata-வின் பிரபல கார் மாடலின் விலை உயர்ந்தது... அட இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்களா!!

அண்மையில் நிறுவனம் தனது வர்த்தக பிரிவில் கிடைக்கும் வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. உலோகம், வாகன கட்டுமான பொருட்களின் விலை உயர்வை முன் வைத்து அவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டன. இந்த நிலையிலேயே தற்போது சஃபாரி எஸ்யூவி கார்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன.

ஆரம்பமாயிருச்சு... Tata-வின் பிரபல கார் மாடலின் விலை உயர்ந்தது... அட இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்களா!!

இதுமாதிரியான நடவடிக்கையிலேயே அடுத்த ஆண்டு முதல் மாதத்தில் மாருதி சுசுகி (Maruti Suzuki), சிட்ரோன் (Citroen), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) மற்றும் ஆடி (Audi) ஆகிய நிறுவனங்கள் ஈடுபட இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் அதன் வர்த்தக வாகனங்களின் விலையில் 2.5 சதவீதம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தகுந்தது. மேலும், வர்த்தக வாகனம் மற்றும் சஃபாரி கார்களைப் போல் பிற தயாரிப்புகளின் விலையையும் நிறுவனம் விரைவில் உயர்த்தும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆரம்பமாயிருச்சு... Tata-வின் பிரபல கார் மாடலின் விலை உயர்ந்தது... அட இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்களா!!

இதுகுறித்த தகவல்கள் மிக விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா சஃபாரி இந்தியர்களின் மிகவும் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாக மாறியிருக்கின்றது. இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வு வழங்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக 168 பிஎச்பி திறனை வெளியேற்றும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் (இந்த தேர்வில் கிடைக்கும் சஃபாரியின் விலைகளே உயர்த்தப்பட்டிருக்கின்றன) ஆகிய தேர்வுகளில் இந்த எஞ்ஜின் கிடைக்கின்றது.

ஆரம்பமாயிருச்சு... Tata-வின் பிரபல கார் மாடலின் விலை உயர்ந்தது... அட இவ்ளோ ரூபா ஏத்திட்டாங்களா!!

டாடா சஃபாரியில் சிட்டி, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஈகோ ஆகிய மூன்று விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. மேலும், இந்த கார் ஆறு இருக்கைகள் அல்லது 7 இருக்கைகள் தேர்விலும் கிடைக்கின்றது. இதன் 6 சீட்டர் வேரியண்டில் இரண்டாவது வரிசை இருக்கைகள் கேப்டைன் இருக்கைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

English summary
Tata motors increases safari suv price up to rs 7000
Story first published: Thursday, December 9, 2021, 12:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X