டியாகோ கார்களை வேற லெவலில் மாற்றி கொண்டுவரும் டாடா!! மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு தான் தலைவலி!

டாடா டியாகோ ஹேட்ச்பேக் காரில் புதிய அரிசோனா நீல நிறம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறத்தில் டியாகோ கார் எப்படி இருக்கிறது என்பது உள்ளிட்ட விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டியாகோ கார்களை வேற லெவலில் மாற்றி கொண்டுவரும் டாடா!! மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு தான் தலைவலி!

விற்பனையில் மாருதியின் வேகன்-ஆர் ஹேட்ச்பேக்கின் கடுமையான போட்டியினை எதிர்கொண்டுவரும் டாடா டியாகோவின் படம் ஒன்று புதிய அரிசோனா நீல நிறத்தில் டாடா மோட்டார்ஸின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

டியாகோ கார்களை வேற லெவலில் மாற்றி கொண்டுவரும் டாடா!! மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு தான் தலைவலி!

இதனால் இனி டியாகோ காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய நிறத்தேர்வும் வழங்கப்படும். இந்த புதிய நீல நிறம் இதற்கு முன் வழங்கப்பட்டுவந்த டெடோனிக் நீல நிறத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ளது.

டியாகோ கார்களை வேற லெவலில் மாற்றி கொண்டுவரும் டாடா!! மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு தான் தலைவலி!

மேலும் இந்த அரிசோனா நீல நிறம் டாடா மோட்டார்ஸில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சஃபாரிக்கு கொடுக்கப்பட்ட ராயல் நீல நிறத்தை ஞாபகப்படுத்துகிறது. இந்த புதிய நிறத்தேர்வுடன் வழக்கமான விக்டோரி மஞ்சள், நெருப்பு சுடரின் சிவப்பு, முத்தின் வெள்ளை, டேடோனா க்ரே மற்றும் சில்வர் நிறத்திலும் டியாகோ கார் விற்பனையை தொடரவுள்ளது.

டியாகோ கார்களை வேற லெவலில் மாற்றி கொண்டுவரும் டாடா!! மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு தான் தலைவலி!

ஆயுட்காலத்தை அதிகரிக்கும் நோக்கில் டியாகோ ஹேட்ச்பேக் காரில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சில அப்கிரேட்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கொண்டுவந்திருந்தது. இந்த அப்கிரேட் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முன்பு வழங்கிவந்த 1.05 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வை டாடா நிறுவனம் நிறுத்தி கொண்டது.

டியாகோ கார்களை வேற லெவலில் மாற்றி கொண்டுவரும் டாடா!! மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு தான் தலைவலி!

இதனால் கிட்டத்தட்ட கடந்த 1.5 வருடமாக ஒரே ஒரு பிஎஸ்6-க்கு இணக்கமான 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் மட்டும் தான் டியாகோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிகப்பட்சமாக 86 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

டியாகோ கார்களை வேற லெவலில் மாற்றி கொண்டுவரும் டாடா!! மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு தான் தலைவலி!

இதனை தொடர்ந்து டியாகோவில் லிமிடெட் எடிசனை டாடா நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்தியது. வழக்கமான விலைகளை காட்டிலும் ரூ.29,000 அதிகமாக ரூ.5.79 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் கொண்டுவரப்பட்ட இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் முக்கிய சிறப்பம்சமாக 14 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டன.

டியாகோ கார்களை வேற லெவலில் மாற்றி கொண்டுவரும் டாடா!! மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு தான் தலைவலி!

டியாகோவின் டாப் எக்ஸ்இசட்+ ட்ரிம்-மிற்கு அடுத்து இந்த அம்சத்தை இரண்டாவது டியாகோ மாடலாக பெறும் இந்த லிமிடெட் எடிசனின் உட்புறத்தில் 5.0 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான நாவிகேஷன் & குரல் கட்டுப்பாடு கூடுதல் வசதிகளாக கொண்டுவரப்பட்டுள்ளது.

டியாகோ கார்களை வேற லெவலில் மாற்றி கொண்டுவரும் டாடா!! மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு தான் தலைவலி!

இந்த நிலையில் புதிய அரிசோனா நீல நிறத்தை வழங்கியிருப்பதன் மூலம் டியாகோவை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும் என்ற டாடா மோட்டார்ஸின் எண்ணம் பளிச்சிடுகிறது. இதன் விளைவாக 2020 பிப்ரவரியை காட்டிலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் சுமார் 73.1 சதவீதம் அதிகமாக 6,787 டியாகோ கார்களை டாடா நிறுவனம் விற்றுள்ளது.

Most Read Articles

English summary
Tata Tiago Gains Arizona Blue Colour Shade, Loses Tectonic Blue Option
Story first published: Friday, March 12, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X