இந்தியர்கள் இந்த காரை வாங்க ரொம்ப நாள் காத்திருக்காங்க... நேபாளத்தில் விற்பனைக்கு அறிமுகமான Tata கார்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த கார் மாடல் ஒன்றை வேறொரு நாட்டிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் மிக அமோகமான டிமாண்டை இக்கார் பெற்று வரும்நிலையில் டாடா மோட்டார்ஸ் அதனை வெளிநாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே காணலாம், வாங்க.

இந்தியர்கள் இந்த காரை வாங்க ரொம்ப நாள் காத்திருக்காங்க... நேபாளத்தில் விற்பனைக்கு அறிமுகமான Tata கார்!

Tata Motors (டாடா மோட்டார்ஸ்) நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்று Safari (சஃபாரி). இது ஓர் பிரீமியம் தர எஸ்யூவி ரக காராகும். இந்த காரையே இந்திய சந்தையைத் தொடர்ந்து தற்போது மற்றுமொரு நாட்டிலும் டாடா விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியர்கள் இந்த காரை வாங்க ரொம்ப நாள் காத்திருக்காங்க... நேபாளத்தில் விற்பனைக்கு அறிமுகமான Tata கார்!

நமது அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்திலேயே டாடா சஃபாரி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. கூட்டணியின் வாயிலாக இக்காரை அங்கு விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது, டாடா. நேபாளத்தை மையமாகக் கொண்டு இயங்கும் சிப்ரடி ட்ரேடிங் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்துடன் இதற்காக டாடா கூட்டணி வைத்திருக்கின்றது.

இந்தியர்கள் இந்த காரை வாங்க ரொம்ப நாள் காத்திருக்காங்க... நேபாளத்தில் விற்பனைக்கு அறிமுகமான Tata கார்!

டாடா சஃபாரி இந்திய சந்தையில் ஆறு அல்லது ஏறு இருக்கைகள் வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதே தேர்விலேயே நேபாளத்திலும் சஃபாரி எஸ்யூவி விற்பனைக்குக் கிடைக்கும். அந்த நாட்டு ரூபாய் மதிப்பில் 81.99 லட்சத்திற்கு அது விற்கப்பட இருக்கின்றது. இந்தியாவில் டாடா சஃபாரி ரூ. 14.99 லட்சம் தொடங்கி ரூ. 22.01 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியர்கள் இந்த காரை வாங்க ரொம்ப நாள் காத்திருக்காங்க... நேபாளத்தில் விற்பனைக்கு அறிமுகமான Tata கார்!

ஒட்டுமொத்தமாக ஒன்பது வேரியண்டுகளில் டாடா சஃபாரி நேபாளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும். ஆரம்ப நிலை வேரியண்டான எக்ஸ்இ தொடங்கி எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் வரையிலான தேர்வுகள் அங்கு விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், சஃபாரி இன் சிறப்பு பதிப்பான அட்வென்சர் பெர்சோனா தேர்வும் நேபாளத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்தியர்கள் இந்த காரை வாங்க ரொம்ப நாள் காத்திருக்காங்க... நேபாளத்தில் விற்பனைக்கு அறிமுகமான Tata கார்!

இது ஓர் முரட்டுத்தனமான மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட சஃபாரி ஆகும். இளைஞர்களைக் குறி வைத்து இந்த தேர்வு விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது. மிக அதிக சொகுசு, பாதுகாப்பு மற்றும் அதிக திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு டாடா சஃபாரி உருவாக்கப்பட்டிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் அதிக சொகுசான பயண அனுபவத்தை விரும்புவோரைக் கருத்தில் கொண்டு சஃபாரி வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியர்கள் இந்த காரை வாங்க ரொம்ப நாள் காத்திருக்காங்க... நேபாளத்தில் விற்பனைக்கு அறிமுகமான Tata கார்!

இந்த காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜட் கைரோடெக் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 170 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், எஸ்யூவி காரில் பனோரமிக் சன்ரூஃப், 8.8 இன்சிலான ஐஸ்லேண்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்தியர்கள் இந்த காரை வாங்க ரொம்ப நாள் காத்திருக்காங்க... நேபாளத்தில் விற்பனைக்கு அறிமுகமான Tata கார்!

டாடா மோட்டார்ஸ் இந்த காரை தனது இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தில் உருவாக்க வருகின்றது. இந்த யுக்தியைக் கொண்டே தனது நவீன கால கார்களை டாடா தயாரித்து வருகின்றது. சஃபாரி எஸ்யூவியில் அட்வான்ஸ்ட் இஎஸ்பி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்தியர்கள் இந்த காரை வாங்க ரொம்ப நாள் காத்திருக்காங்க... நேபாளத்தில் விற்பனைக்கு அறிமுகமான Tata கார்!

2021 டாடா சஃபாரி அட்வென்சர் பெர்சோனா எஸ்யூவியை டாடா பிரத்யேக நிற தேர்வில் விற்பனைக்கு வழங்குகின்றது. புதிதாக ஆர்18 கருப்பு மற்றும் அடுப்பு கரி கிரே நிறம் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, காரை கவர்ச்சியாக காட்டும் வகையில் பியானோ கருப்பு நிறத்திலான க்ரில், ரூஃப் ரெயில், சஃபாரி மஸ்கட் பான்னட் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்தியர்கள் இந்த காரை வாங்க ரொம்ப நாள் காத்திருக்காங்க... நேபாளத்தில் விற்பனைக்கு அறிமுகமான Tata கார்!

தொடர்ந்து, அடர் குரோம் பூச்சு கொண்ட அக்செண்டுகள், க்னாப், ஸ்விட்சுகள் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் டாடா சஃபாரி காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட காரையே டாடா மோட்டார்ஸ் அண்டை நாடான நேபாளத்தில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

இந்தியர்கள் இந்த காரை வாங்க ரொம்ப நாள் காத்திருக்காங்க... நேபாளத்தில் விற்பனைக்கு அறிமுகமான Tata கார்!

இந்தியாவில் இந்த காருக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் இப்போது காரை புக் செய்தால் சுமார் 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலை தென்படுகின்றது. இது ஆகஸ்டு மாத நிலவரப்படியான தகவல் ஆகும். இத்தகைய பெரிதும் வரவேற்பைப் பெற்று வரும் காரையே டாடா மோட்டார்ஸ் நேபாளத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

Most Read Articles

English summary
Tata motors launched 2021 safari suv in nepal
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X