இந்தியாவிற்காக பண்ற அந்த மனசு யாருக்கு வரும்... Tata Motors மேல மரியாதை அதிகமாயிட்டே போகுது!

இந்தியாவிற்காக இன்னும் ஒரு நல்ல காரியத்தை Tata Motors நிறுவனம் தொடங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவிற்காக பண்ற அந்த மனசு யாருக்கு வரும்... Tata Motors மேல மரியாதை அதிகமாயிட்டே போகுது!

டோக்கியோ நகரில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. இதற்கு அடுத்தபடியாக வரும் 2024ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கு தற்போதே தயாராகும் வகையில், இந்திய மல்யுத்த வீரர்களுக்கு உதவி செய்வதற்காக, Tata Motors நிறுவனம் முன்கூட்டியே முயற்சிகளை தொடங்கியுள்ளது.

இந்தியாவிற்காக பண்ற அந்த மனசு யாருக்கு வரும்... Tata Motors மேல மரியாதை அதிகமாயிட்டே போகுது!

இதற்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் Tata Motors நிறுவனம் கைகோர்த்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் 2024 தங்கத்திற்கான தேடல் (Quest for Gold) என்ற பெயரில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 27) நடைபெற்ற நிகழ்ச்சியில், Tata Motors நிறுவனம் இந்த முயற்சியை தொடங்கியது.

இந்தியாவிற்காக பண்ற அந்த மனசு யாருக்கு வரும்... Tata Motors மேல மரியாதை அதிகமாயிட்டே போகுது!

இந்த திட்டத்தின் கீழ், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீரர்கள் சிறப்பாக செயல்படுவதற்கான உதவிகள் செய்யப்படும். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா தங்க பதக்கம் வெல்வதுதான் இந்த திட்டத்தின் அதிகபட்ச இலக்கு ஆகும். முன்னதாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய மல்யுத்த அணியை Tata Motors நிறுவனம் கௌரவித்தது.

இந்தியாவிற்காக பண்ற அந்த மனசு யாருக்கு வரும்... Tata Motors மேல மரியாதை அதிகமாயிட்டே போகுது!

இதன் ஒரு பகுதியாக இந்திய மல்யுத்த அணியை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் Yodha பிக்-அப் டிரக் பரிசாக வழங்கப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற ரவி குமார் தாஹியா, வெண்கல பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகளை அனைவரையும் Tata Motors நிறுவனம் கௌரவித்தது.

இந்தியாவிற்காக பண்ற அந்த மனசு யாருக்கு வரும்... Tata Motors மேல மரியாதை அதிகமாயிட்டே போகுது!

முன்னதாக ரவி குமார் தாஹியா மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோரை Renault India நிறுவனமும் கெரளவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவருக்கும் Renault Kiger கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு Renault Kiger கார் தொடர்ச்சியாக பரிசாக வழங்கப்பட்டு வருவது கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.

இந்தியாவிற்காக பண்ற அந்த மனசு யாருக்கு வரும்... Tata Motors மேல மரியாதை அதிகமாயிட்டே போகுது!

சரி, இனி Tata Motors நிறுவனத்தின் திட்டத்திற்கு வருவோம். இந்த திட்டத்தின் கீழ், அனைத்து வயது மற்றும் எடை பிரிவுகளையும் சேர்ந்த இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இதன்படி இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்படும்.

இந்தியாவிற்காக பண்ற அந்த மனசு யாருக்கு வரும்... Tata Motors மேல மரியாதை அதிகமாயிட்டே போகுது!

மேலும் அவர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். இதுகுறித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் Brijbhushan Sharan Singh கூறுகையில், ''இந்தியாவில் மல்யுத்த விளையாட்டு புதிய உச்சங்களை தொடுவதற்கு கடந்த 2018ம் ஆண்டு முதல் Tata Motors நிறுவனம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது'' என்றார்.

இந்தியாவிற்காக பண்ற அந்த மனசு யாருக்கு வரும்... Tata Motors மேல மரியாதை அதிகமாயிட்டே போகுது!

எனவே பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா மல்யுத்த போட்டிகளில் தங்கம் வெல்லும் என நாம் நம்பலாம். சமீப காலமாகவே மல்யுத்த போட்டிகளில் சர்வதேச அரங்கில் இந்தியா சிறப்பாக செயல்பட தொடங்கியுள்ளது. இந்த சூழலில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உதவி, இந்தியாவில் மல்யுத்தத்தை இன்னும் மேம்படுத்தும் என நாம் நம்பலாம்.

இந்தியாவிற்காக பண்ற அந்த மனசு யாருக்கு வரும்... Tata Motors மேல மரியாதை அதிகமாயிட்டே போகுது!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்தியர்கள் 24 பேருக்கு Tata Motors நிறுவனம் Altroz காரை பரிசாக வழங்கியுள்ளது. இதற்கு மறுநாள் பாரிஸ் ஒலிம்பிக் தங்கத்திற்கான தேடல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பதக்க மேடையில் நிற்கும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டவர்களுக்கு Tata Motors நிறுவனம் Altroz காரை பரிசாக கொடுத்துள்ளது.

இந்தியாவிற்காக பண்ற அந்த மனசு யாருக்கு வரும்... Tata Motors மேல மரியாதை அதிகமாயிட்டே போகுது!

அவர்களது முயற்சிகளை பாராட்டும் விதமாகவும், ஊக்குவிக்கும் வகையில், Tata Motors நிறுவனம் இந்த பரிசை கொடுத்துள்ளது. அனைவரும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கொண்டிருக்கும் நிலையில், நூலிழையில் பதக்கத்தை தவற விட்டவர்களையும் Tata Motors நிறுவனம் கௌரவித்திருப்பது பெருமை கொள்ள வேண்டிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவிற்காக பண்ற அந்த மனசு யாருக்கு வரும்... Tata Motors மேல மரியாதை அதிகமாயிட்டே போகுது!

Tata Motors நிறுவனம் பரிசாக வழங்கியுள்ள Altroz, பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இது குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று, Tata Motors நிறுவனத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Tata motors launches initiative to help indian wrestlers aim for gold in paris olympics details
Story first published: Friday, August 27, 2021, 23:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X