டிராஃபிக் நிறைந்த சாலைகளுக்கு ஏற்ற ஆம்புலன்ஸ்... டாடா மேஜிக் எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ் விற்பனைக்கு அறிமுகம்...

டாடா நிறுவனம் அதன் மேஜிக் எக்ஸ்பிரஸ் பயணிகள் வாகனத்தின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டிராஃபிக் நிறைந்த சாலைகளுக்கு ஏற்ற ஆம்புலன்ஸ்... டாடா மேஜிக் எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ் விற்பனைக்கு அறிமுகம்...

டாடா நிறுவனம் மேஜிக் எக்ஸ்பிரஸ் எனும் பெயரில் புதுமுக உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனத்தை ஆம்புலன்ஸாக மட்டுமின்றி மருந்துகளை பாதுகாப்பாக எடுத்து செல்லும் வாகனமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளது நிறுவனம்.

டிராஃபிக் நிறைந்த சாலைகளுக்கு ஏற்ற ஆம்புலன்ஸ்... டாடா மேஜிக் எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ் விற்பனைக்கு அறிமுகம்...

இதுதவிர, மருத்துவத்துறையின் பிற முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் இவ்வாகனம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக டாடா மோட்டார்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. நிறுவனம் டாடா மேஜிக் எக்ஸ்பிரஸ் எனும் பெயரில் பயணிகள் போக்குவரத்து வாகனம் ஒன்றை விற்பனைச் செய்து வருகின்றது.

டிராஃபிக் நிறைந்த சாலைகளுக்கு ஏற்ற ஆம்புலன்ஸ்... டாடா மேஜிக் எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ் விற்பனைக்கு அறிமுகம்...

இந்த வாகனத்தையே ஆம்புலன்ஸாக மாற்றி தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது டாடா. நகரத்தின் மிகவும் நெரிசலான போக்குவரத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட வாகனமே மேஜிக் எக்ஸ்பிரஸ்.

டிராஃபிக் நிறைந்த சாலைகளுக்கு ஏற்ற ஆம்புலன்ஸ்... டாடா மேஜிக் எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ் விற்பனைக்கு அறிமுகம்...

இந்த உருவ அமைப்பைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே டாடா நிறுவனம், இவ்வாகனத்தை ஆம்புலன்ஸாக மாற்றி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

டிராஃபிக் நிறைந்த சாலைகளுக்கு ஏற்ற ஆம்புலன்ஸ்... டாடா மேஜிக் எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ் விற்பனைக்கு அறிமுகம்...

கொரோனா வைரஸ் பரவல் தற்போது அதி தீவிரமடைந்து தென்படுவதால் நாட்டில் ஆம்புலன்ஸ்களின் தேவை அதிகரித்த வண்ணம் இதனை பூர்த்தி செய்யும் வகையிலேயே டாடா மோட்டார்ஸ் மேஜிக் எக்ஸ்பிரஸ் அடிப்படையிலான ஆம்புலன்ஸை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

டிராஃபிக் நிறைந்த சாலைகளுக்கு ஏற்ற ஆம்புலன்ஸ்... டாடா மேஜிக் எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ் விற்பனைக்கு அறிமுகம்...

vஇதில், உயிர்காக்கும் கருவிகள் பல இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, ஆக்ஸிஜன், முதலுதவி மருந்துகள் மற்றும் சுவாசக்கருவிகள் என எக்கசக்க அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. இதுதவிர, நோயாளிகளை பாதுகாப்பாக அழைத்து செல்லும் வகையில் அதிக ஸ்பாஞ்சு தன்மைக் கொண்ட பெட், ஸ்ட்ரெச்சர் மற்றும் மருத்துவர், மருத்துவ உதவி பணியாளர்கள் ஆகியோர் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கை வசதிகளும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

டிராஃபிக் நிறைந்த சாலைகளுக்கு ஏற்ற ஆம்புலன்ஸ்... டாடா மேஜிக் எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ் விற்பனைக்கு அறிமுகம்...

தொடர்ந்து, தீயணைப்பான், தீ விபத்தை எதிர்க்கக் கூடிய உட்பகுதி என சிறப்பு வசதிகளுடன் இவ்வாகனம் விற்பனைக்கு வர இருக்கின்றது. இவ்வாறு, மேஜிக் எக்ஸ்பிரஸ் வாகனத்தின் உட்பகுதி மட்டுமின்றி வெளிப்புற தோற்றமும் ஆம்புலன்ஸை என்பதை வெளிப்படுத்தும் வகையில் சைரன் மற்றும் ஃபிளாஷர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

டிராஃபிக் நிறைந்த சாலைகளுக்கு ஏற்ற ஆம்புலன்ஸ்... டாடா மேஜிக் எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ் விற்பனைக்கு அறிமுகம்...

இந்த வாகனத்திற்கு ஏஐஎஸ் 125 சான்று கிடைத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா மோட்டார்ஸ் மேஜிக் எக்ஸ்பிரஸ் வாகனத்தில் 800சிசி திறன் கொண்ட டிசிஐசி எஞ்ஜினையே பயன்படுத்தியிருக்கின்றது. இது அதிகபட்சமாக 44 குதிரை திறனை வெளிப்படுத்தக்கூடியது. மேலும், 110 என்எம் டார்க்கையும் இந்த எஞ்ஜின் வெளியேற்றும்.

டிராஃபிக் நிறைந்த சாலைகளுக்கு ஏற்ற ஆம்புலன்ஸ்... டாடா மேஜிக் எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ் விற்பனைக்கு அறிமுகம்...

இவ்வாகனத்தின் பக்கம் மருத்துவமனைகளைக் கவர்ந்து இழுப்பதற்காக கவர்ச்சிகரமான ஆஃபர்களை டாடா மோட்டார்ஸ் அறிவித்திருக்கின்றது. 2 வருடங்கள் அல்லது 72 ஆயிரம் கிமீ என இதற்கு வாரண்டி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

டிராஃபிக் நிறைந்த சாலைகளுக்கு ஏற்ற ஆம்புலன்ஸ்... டாடா மேஜிக் எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ் விற்பனைக்கு அறிமுகம்...

ஆகையால், தனியார் மருத்துவமனைகள் மட்டுமின்றி அரசு சுகாராத்தூறை, என்ஜிஓ மற்றும் சிறிய நர்சிங் ஹோம்களும் இவ்வாகனத்தை முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா நிறுவனம் இந்த வாகனத்தை ஆம்புலன்ஸாக மட்டுமின்றி பள்ளி வாகனமாக வழங்கி வருகின்றது.

Most Read Articles

English summary
Tata Motors Launches Magic Express Ambulance In India. Read In Tamil.
Story first published: Friday, March 19, 2021, 14:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X