டாடாவின் மலிவு விலை கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்... இதோட விலை கொஞ்சம்தான் அதிகம்... எவ்ளோ தெரியுமா?

டாடாவின் மலிவு விலை கார் மாடல்களில் ஒன்றான டியோகில் புதிய தேர்வு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதன் விலை மற்றும் பிற முக்கிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

டாடாவின் மலிவு விலை கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்... இதோட விலை கொஞ்சம்தான் அதிகம்... எவ்ளோ தெரியுமா?

டாடா நிறுவனத்தின் மலிவு விலை கார்களில் டியாகோ மாடலும் ஒன்று. இந்த கார் நாட்டின் குறைந்த விலை வாகனம் மட்டுமில்லைங்க அதீத பாதுகாப்பு திறன் கொண்ட காரும்கூட. இதன் பாதுகாப்பு தரம் குறித்து நடத்தப்பட்ட மோதல் (விபத்து) பரிசோதனையில் ஐந்திற்கு 4 நட்சத்திர ரேட்டிங்கை டியாகோ பெற்றிருக்கின்றது.

டாடாவின் மலிவு விலை கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்... இதோட விலை கொஞ்சம்தான் அதிகம்... எவ்ளோ தெரியுமா?

இந்த கார் மாடலிலேயே புதிய எக்ஸ்டிஐ ஏஎம்டி எனும் புதுமுக தேர்வை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய தேர்விற்கு ரூ. 5.99 லட்சம் என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்திருக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

டாடாவின் மலிவு விலை கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்... இதோட விலை கொஞ்சம்தான் அதிகம்... எவ்ளோ தெரியுமா?

டியாகோ கார் மாடலில் ஏற்கனவே மூன்று ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. இந்த நிலையிலேயே புதிதாக நான்காவது வேரியண்டாக எக்ஸ்டிஏ ஏஎம்டி தேர்வு சேர்க்கப்பட்டிருக்கின்றது. இது சற்றுக் விலைக் குறைந்த தானியங்கி கியர்பாக்ஸ் கொண்ட தேர்வாகும்.

டாடாவின் மலிவு விலை கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்... இதோட விலை கொஞ்சம்தான் அதிகம்... எவ்ளோ தெரியுமா?

டாடா டியாகோ காரின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 4.85 லட்சம் ஆகும். இக்கார் ரூ. 6.84 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்த நிலையிலேயே ரூ. 5.99 லட்சம் என்ற குறைந்த விலையிலான புதிய தானியங்கி வேரியண்டை டாடா மோட்டார்ஸ் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

டாடாவின் மலிவு விலை கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்... இதோட விலை கொஞ்சம்தான் அதிகம்... எவ்ளோ தெரியுமா?

டியாகோ காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது அதிகபட்சமாக 86 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய இருவிதமான கியர்பாக்ஸ் தேர்வில் இக்கார் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

டாடாவின் மலிவு விலை கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்... இதோட விலை கொஞ்சம்தான் அதிகம்... எவ்ளோ தெரியுமா?

இதே எஞ்ஜின், இதே திறன் வசதிகளுடனேயே அல்ட்ராஸ் கார்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. டாடா நிறுவனம் டியோகோ காரில் கவர்ச்சியை அதிகரிக்கச் செய்வதற்காக 15 இன்சிலான அலாய் வீல்கள், பனி மின்விளக்கு, பின் மற்றும் முன்பக்கத்தில் வைப்பர்கள், 7 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை வழங்கியிருக்கின்றது.

டாடாவின் மலிவு விலை கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்... இதோட விலை கொஞ்சம்தான் அதிகம்... எவ்ளோ தெரியுமா?

இந்த தொடுதிரை ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிகளைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி 8 ஸ்பீக்கர்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பவர் விண்டோஸ், டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டோர், கூல்டு குளோவ் பாக்ஸ் என பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களும் டியாகோவில் இடம் பெற்றிருக்கின்றன.

டாடாவின் மலிவு விலை கார் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்... இதோட விலை கொஞ்சம்தான் அதிகம்... எவ்ளோ தெரியுமா?

மேலும், பாதுகாப்பு வசதிகளுக்காக இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ஏர் பேக்குகள், பார்க்கிங் சென்சார், அதி வேக எச்சரிக்கை சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் பார்க்கிங் கேமிரா என பல மதிப்புக்கூட்டப்பட்ட அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

Most Read Articles

English summary
Tata Motors Launches Tiago XTA AMT Varient In India. Read In Tamil.
Story first published: Thursday, March 4, 2021, 13:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X